உள்ளடக்கத்துக்குச் செல்

கிளிசரின் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிசரின் அசிட்டேட்டு

R = H அல்லது CH3C(=O)
பெயர்கள்
வேறு பெயர்கள்
கிளிசரின் அசிட்டேட்டு; கிளிசரால் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
1335-58-6
பண்புகள்
மாறுபடும்
வாய்ப்பாட்டு எடை மாறுபடும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கிளிசரின் அசிட்டேட்டு (Glycerine acetate) என்பது கிளிசராலும் (1) அசிட்டிக் அமிலமும் சேர்ந்து ஈடுபடும் எசுத்தராக்கல் வினையில் உற்பத்தி செய்யப்படும் எசுத்தர்களின் கலவையாகும். இவ்வினையின் மூலம் பல்வேறு விளைபொருள்களை உருவாக்க முடியும். மோனோ அசிட்டைல் கிளிசரால்கள் (2,3), டையசிட்டைல் கிளிசரால்கள் (4,5), டிரையசிட்டைல் கிளிசரால்கள் (டிரையசிட்டீன், 6) உள்ளிட்டவை இத்தயாரிப்புப் பொருள்களில் உள்ளடங்கும்.

சாத்தியமுள்ள கிளிசராலின் அனைத்து அசிட்டேட்டு எசுத்தர்களின் கட்டமைப்புகள்
சாத்தியமுள்ள கிளிசராலின் அனைத்து அசிட்டேட்டு எசுத்தர்களின் கட்டமைப்புகள்

எரிபொருள் கூட்டுசேர் பொருட்களாக டையசிட்டைல் கிளிசரால்கள் மற்றும் டிரையசிட்டைல் கிளிசரால்கள் பயன்படுத்தப்படுகின்றன. கேசோலினின் உள்வெடிப்பு அல்லது பயோடீசல் எனப்படும் உயிரி எரிபொருளின் குளிர்ச்சி, பாகுத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த இவை உதவுகின்றன[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. A. Melero; R. vanGrieken; G. Morales; M. Paniagua (2007). "Acidic Mesoporous Silica for the Acetylation of Glycerol: Synthesis of Bioadditives to Petrol Fuel". Energy Fuels 21 (3): 1782–1791. doi:10.1021/ef060647q. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசரின்_அசிட்டேட்டு&oldid=2645794" இலிருந்து மீள்விக்கப்பட்டது