கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரியில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவமனை ஆகும்.
இந்த அரசு மருத்துவமனை கிருட்டிணகிரி நகரில் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து பழையபேட்டை செல்லும் சாலையை ஒட்டி சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் 3 ஏக்கர் பரப்பில் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவமனையில் உள்ள கட்டிடங்கள் புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு சித்த மருத்துவப் பிரிவு, ஓமியோபதி மருத்துவப் பிரிவு, தீவிர இருதய நோய் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு ஆகியவுகளும் செயல்படுகின்றன.
புறநோயாளிகள் பிரிவு
[தொகு]புறநோயாளிகள் பிரிவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, பெண்களுக்கான மருந்து கொடுக்குமிடம், மகப்பேறு நலப்பகுதி, மருத்துவமனை கண்காணிப்பாளர், உள்ளிருக்கும் மருத்துவ அலுவலர், காது மூக்கு தொண்டை பகுதி, மேலும் பல்வேறு நோய்களுக்கான 37 அறைகளை பிரிவுகளாகக் கொண்டுள்ளது.
பல் மருத்துவப் பகுதி
[தொகு]பல் மருத்துவப் பகுதியில் பல் முளைத்தல், பல்லில் சீழ் வடிதல், சொத்தைப் பல், உடைந்த பற்கள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல் மருத்துவம் அளிக்கப்படுகிறது. இப்பகுதியில் சி.டி.ஸ்கேன் இயந்திர அறையும் உள்ளது.
குடும்ப நலப் பகுதி
[தொகு]குடும்ப நலப் பகுதியில் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த பிறகு ஏழு நாட்கள் மருத்துவமனையில் வைத்து மருத்துவம் அளிக்கப்படுகிறது.