உள்ளடக்கத்துக்குச் செல்

கிராண்ட் தெப்ட் ஆட்டோ :வைசு சிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராண்ட் தெப்ட் ஆட்டோ :வைசு சிட்டி (Grand Theft Auto: Vice City) என்பது அதிரடி-சாகச காணொளி விளையாட்டு ஆகும். இதனை ராக்ஸ் ஸ்டார் என்பவர் மேம்படுத்தினார். ராக்ஸ் ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது. அக்டோபர் 29, 2012 இல் பிளே ஸ்டேசன் 2 இல் வெளியானது. மே 12, 2003 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் விண்டோசுவிலும், அதே ஆண்டில் அக்டோபர் 31 இல் எக்சு பாக்சில் வெளியானது. இதன் பத்தாம் ஆண்டில் செலிடத் தொலைபேசி இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட பதிப்பினை வெளியிட்டது. இந்த விளையாட்டு கிராண்ட் தெப்டின் ஆறாவது பதிப்பு ஆகும்.

இந்த விளையாட்டு வெளியான பின்பு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக இசைக்கு பாராட்டினைப் பெற்றது. ஆனாலும் இதில் இடம்பெறும் வன்முறைக்காக  சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. 2002 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான விளையாட்டுக்களில் முதலிடம் பெற்றது. அந்த சமயம் 17.5 மில்லியன் நகல் விளையாட்டுக்கள் விற்பனையாகின. ஆறாம் தலைமுறை விளையாட்டுக்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகவும் அதுவரை வெளியான காணொளி விளையாட்டுக்களில் மிகச் சிறந்தாகவும் இது அறியப்பட்டது. பல காணொளி விளையாட்டுக்களை வெளியிடும் நிறுவனங்களிடம் இருந்து அந்த ஆண்டிற்கான சிறந்த காணொளி விளையாட்டிற்கான விருதினைப் பெற்றது. இந்த விளாஇயாட்டு வெளியான பின்பு பல இயங்குதளங்களில் இக்தனைப் பயன்படுத்தும் இணைப்புகளைப் பெற்றது. இதன் வெற்றியினைத் தொடர்ந்து கிராண்ட் தெப்ட் ஆட்டோ: சான் ஆண்ட்ரியாசு அக்டோபர் 2004 ஆம் ஆண்டிலும், வசு சிட்ட்ய் ஸ்டோரிஸ் 2006 ஆம் ஆண்டிலும் வெளியானது.

விருதுகள்

[தொகு]

காணொளி விளையாட்டுக்களை வெளியிடும் நிறுவனங்களிடம் இருந்து பல விருதுகளையும் பல விருதிற்கானப் பரிந்துரைகளையும் பெற்றது. சிறந்த பிளே ஸ்டேசன் 2 விற்கான விருதினை பிரிட்டிசு அகாதமி விளையாட்டு விருதின் முதலாம் ஆண்டின் விருதினைப் பெறது. மேலும் ஜி என் , கேம்ஸ் பாட் மற்றும்   எண்டெர்டெயின்மெண்ட் வீக்லியிடம் இருந்து கோல்டன் ஜாய்ஸ்டிக் விருதினையும் பெற்றது. கோல்டன் ஜாய்ஸ்டிக் விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க உயரிய விளயாட்டு விருதினைப் பெற்றது.மேலும் சிறந்த அதிரடி மற்றும் சாகச காணொளி விளையாட்டிற்கான பிரிட்டுசு அகாதமி விளையாட்டு விருதினைப் பெற்றது,. இந்த விளையாட்டின் இசையும் பல விருதுகளைப் பெற்றது. குறிப்பாக கேம்ஸ்பாட்டின் சிறந்த விளையாட்டிற்கான இசை விருதினையும்  பிரிட்டிசு அகாதமி விளையாட்டு விருதினையும் பெற்றது. விளையாட்டிற்கான சிறந்த வடிவமைப்பிற்கான பிரிட்டிசு அகாதமி விளையாட்டு விருதினையும் பெற்றது. மேலும் சிறந்த் வரைகலைக்கான விருதிற்கு கேம்ஸ் பாட் விருதிற்கு பரிந்துரை ஆனது. ஐ ஜி என் விருதுக்கான வாசகர் தேர்வில் ஆண்டின் சிறந்த விளையாட்டுகள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றது. கேம்ஸ் ஸ்பாட்டின் சிறந்த கதைக்கள்ம் கொண்ட விளையாட்டு விருதுக்குபரிந்துரை ஆனது. சிறந்த கணினி விளையாட்டிற்கான பிரிட்டிசு அகாதமி விளையாட்டு விருதினையும் பெற்றது. .

விண்டோசு பதிப்புகள்

[தொகு]

மே 2003 இல் விண்டோசு பதிப்பிற்கான வைஸ் சிட்டி வெளியானபோது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. விமர்சகர்கள் இந்த விளையாட்டிற்கு 100 க்கு 94 புள்ளிகள் கொடுத்தனர். 2003 ஆம் ஆண்டில் விண்டோசு பதிப்பில் வெளியான ஒரு விளையாட்டிற்கு கொடுக்கப்படும் அதிக பட்ச புள்ளி இதுவாகும்.[1]

சான்றுகள்

[தொகு]


  1. "Best PC Video Games for 2003". Metacritic. CBS Interactive. from the original on 17 April 2016. Retrieved 17 April 2016.