கான்சுடன்சு டோம் நோகுசி
கான்சுடன்சு டோம் நோகுசி (Constance Tom Noguchi, 8 திசம்பர் 1948) என்பவர் அமெரிக்க மருத்துவ ஆராய்சசியாளர் பெண்மணி ஆவார்.[1]
பிறப்பும் படிப்பும்
[தொகு]நோகுசி சீனாவில் பிறந்தார். தந்தை ஜேம்சு டோம் ஒரு சீன அமெரிக்கர். தாய் சீனப் பெண்மணி. பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நோகுசி கல்வி பயின்றார். பின்னர் ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் அணு தெரியியல் படிப்பில் ஆய்வுப் பட்டம் பெற்றார். மேரிலாந்தில் தேசிய சுகாதார நிறுவனத்தில் சேர்ந்தார். 1990 களில் வேதியல் உயிரியல் சோதனைச் சாலைகளில் பணி செய்தார்.
ஆய்வுப்பணிகள்
[தொகு]சிக்கிள் செல் என்னும் நோய் பற்றி ஆய்வு செய்தார். சிக்கிள் செல் நோய் என்பது மரபணுவில் உள்ள சிறிய குறையினால் ஏற்படுகிறது. சிக்கில் செல் நோய் பெரும்பாலும் ஆப்பிரிக்க வம்சாவளியினரைத் தாக்குகிறது. மேலும் மரபணுக்கள் எந்த வகைகளிலெல்லாம் குருதியில் உள்ள ஈமோகுளோபினை உற்பத்தி செய்கிறது என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்.[2]
ஹைட்ராக்சூரியா என்பது பற்றியும் ஆய்வு செய்தார். இந்த மருந்து ஈமோகுளோபினுக்கு மாற்றான ஒன்றை உற்பத்தி செய்கிறது.
என்.ஐ.எச் ஈஈஓ என்னும் அங்கீகார விருது 1995 இல் இவருக்கு வழங்கப்பட்டது.