உள்ளடக்கத்துக்குச் செல்

காகபுருடர் ஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காகபுருடர் ஞானம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் 79 எண்சீர்விருத்தங்கள் உள்ளன.

அவை கூறும் செய்திகளில் சில
  • மந்திரம், விதி, மதி, மதி எதுவும் இல்லை.[1]
  • அண்ட உச்சிக்கு அப்பாலே யோனியாய் நிறைந்துள்ளவர் ‘அவர்’ [2]
  • சுழுமுனை என்ற மூக்குநூனியைப் பார்த்து தார்த்துத் திரிவது வீண் [3]
  • கோவில் என்றும் தீர்த்தம் என்றும் செல்லுவார் திருடர்கள்[4]
  • வேடக் காவி பூண்டு நாயைப் போல அலைவர்[5]
  • விளக்கு வீட்டுக்குத் தான். வெளிக்கு அன்று.[6]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
  • சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987

அடிக்குறிப்பு

[தொகு]
  1. வீணப்பா மந்திரங்கள் ஒன்றும் இல்லை
    விதியில்லை மதியில்லை கெதியும் இல்லை – 4
  2. பாடல் 8
  3. பாடல் 14
  4. செல்லிவார் கோவிலென்றும் தீர்த்தம் என்றும்
    திருடர்கள் தான் அலைந்து அலைந்து திரிவார் - பாடல் 22
  5. விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
    வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே – பாடல் 34
  6. வீட்டிலே தீபம் வைத்தால் பிரகா சிக்கும்
    வெளியேறி னால்தீபம் விழலாய்ப் போகும் – பாடல் 62
"https://ta.wikipedia.org/w/index.php?title=காகபுருடர்_ஞானம்&oldid=1193787" இலிருந்து மீள்விக்கப்பட்டது