உள்ளடக்கத்துக்குச் செல்

கா. மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா. மாணிக்கம் (பிறப்பு: மார்ச்சு 7 1948) இவர் முத்துமாணிக்கம் எனும் பெயரால் அறியப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு பிளார் எனும் ஊரில் பிறந்த இவர் செயிண்ட் ஜார்ஜஸ் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார்.

தொழில்

[தொகு]

தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் ஓர் பட்டதாரி ஆசிரியர்.

இலக்கியப் பணி

[தொகு]

1981ல் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதுவதில் மிக்க ஆர்வமுள்ளவர். இவரின் முதல் படைப்பு சிங்கப்பூரில் தமிழரும் தமிழ் இலக்கியமும் எனும் தலைப்பில் சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றம் நடத்திய ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டது. 'உயர்நிலைப் பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஏற்படும் இடர்ப்பாடுகள்' என்பது அக்கட்டுரையின் தலைப்பாகும். 100க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள இவரின் முதல் மரபுக் கவிதை அகிலன் எனும் தலைப்பில் 1988ல் தமிழ் முரசில் வெளிவந்தது. தமிழ் நேசனிலும் இவரது படைப்புகள் அவ்வப்போது பிரசுரமாகியுள்ளன.

வகித்த பதவிகள்

[தொகு]

செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் படையின் மேலதிகாரியாகவும் (1966 - 1992), தமிழர் சீர்த்திருத்தச் சங்கப் பொருளாளராகவும் (1979), தமிழர் பேரவை சங்கப் பேராளராகவும் (1977) இருந்துள்ளார். அத்துடன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், 1976 - 1982 வரை காலாங் இந்தியர் கலாசார மன்றத்தின் துணைத் தலைவராகவும், 1978 - 1985 வரை சிங்கப்பூர் போதைப் பொருள் ஒழிப்புச் சங்கத்தின் பணியாளராகவும் பதவி வகித்துள்ளார்.

உசாத்துணை

[தொகு]
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._மாணிக்கம்&oldid=2713073" இலிருந்து மீள்விக்கப்பட்டது