கரோல் பேட்மன்
கரோல் பேட்மன் (ஆங்கிலம்:Carole Pateman 11 திசம்பர் 1940) என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணியவாதி, நூலாசிரியர், பேராசிரியர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் ஆவார். தாராள சனநாயகத்தைத் திறனாய்வு செய்யும் பெண்மணி ஆவார். 2007 முதல் பிரிட்டிசு அகாதமியில் உறுப்பினராக உள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]கரோல் பேட்மன் இங்கிலாந்தில் சூசெக்சு என்ற ஊரில் பிறந்து கிராமர் என்ற பள்ளியில் படித்தார். 1963 இல் ஆக்சுபோர்டு ரசுகின் கல்லூரி பின்னர் லேடி மார்கரெட் ஆலில் சேர்ந்து படித்தார். 1972இல் சிட்னி பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து அரசியல் பாடம் கற்பித்தார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டம் பெற்ற பின்னர் 1990 முதல் இலாசு ஏஞ்செலசில், கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் அரசியல் கல்வித் பேராசிரியராகப் பணி புரிந்தார். இப்போது அந்தப் பல்கலைக் கழகத்தில் மதிப்புறு எமெரிடசு பேராசிரியராக உள்ளார். 1991-94 ஆண்டுகளில் பன்னாட்டு அரசியல் கல்வி சங்கத்தின் தலைவராகவும் 2007 இல் பிரிட்டிசு அகாதெமியில் மதிப்புறு உறுப்பினராகவும் இருந்தார். மேலும் 2010-11 இல் அமெரிக்கன் அரசியல் கல்விச் சங்கத்தின் தலைவராகவும் கார்டிப் பல்கலைக்கழகப் பள்ளி ஐரோப்பிய ஆய்வுகள் என்ற அமைப்பில் கவுரவ பேராசிரியராகவும் பதவி வகித்தார்.
எழுதிய நூல்கள்
[தொகு]- பாலின ஒப்பந்தம்
- சனநாயகமும் பங்கேற்பும்
- ஒப்பந்தமும் ஆதிக்கமும்
- பெண்களின் அவலம்:சனநாயகம் பெண்ணியம் அரசியல் கொள்கை
பெற்ற விருதுகள்
[தொகு]- பேட்மன் 1993-94 க்கான குக்கன்கைம் பெல்லோ என்ற சிறப்பைப் பெற்றார்.[2]
- சமூக அறிவியல் ஆய்வுக்கான சுவிடீசு பன்னாட்டு ஆலோசனைக் குழுவில் 1994 முதல் உறுப்பினராக இருந்தார்.
- 2012 இல் அரசியல் கல்வியில் ஜோகன் ஸ்கைட் பரிசைப் பெற்றார்.
- 2013இல் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் ஆய்வுகள் சங்கத்தின் சார்பில் சிறப்பு பாராட்டு விருது வழங்கப்பட்டது.
- 2015 ஏப்பிரலில் வேல்ஸ் கற்றறிந்தோர் சங்கத்தின் மதிப்புறு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பாலியல் மற்றும் அரசியல் ஆகிய தலைப்புகளில் கரோல் பேட்மன் எழுதும் நூல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆத்திரேலியா அரசியல் கல்வி சங்கத்தின் சார்பாகப் பரிசு வழங்கப்படுகிறது.[3]
மேற்கோள்
[தொகு]- ↑ John Lechte (1994). Fifty Key Contemporary Thinkers: From Structuralism to postmodernity. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415074088.
- ↑ "Carole Pateman winner of the Johan Skytte Prize 2012". Uppsala universitet, MedfarmDoIT. 29 September 2012. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-18. பார்க்கப்பட்ட நாள் 2017-08-12.