கயத்தூர் கிழார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கயத்தூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்றி உள்ளது. அது குறுந்தொகைப் பாடல் 354. இவரது பாடலின் தொடர் பலராலும் பேசப்படுகிறது.
பரத்தையிடமிருந்து மனைவியிடம் வந்த தலைவியின் கணவனைத் தோழி வீட்டுக்குள் நுழைய விடாமல் சொல்லும் செய்திகள் இவை.
பாடல்
[தொகு]நீர் நீடு ஆடில் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே.
செய்தி
[தொகு]நீண்ட நேரம் நீராடினால் கண் சிவக்கும். திரும்பத் திரும்பத் தின்போருக்குத் தேனும் புளிக்கும். எம் தலைவியை விட்டுவிட்டுப் பிரிவதாயின் எங்களை எங்களது பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுச் செல்லுங்கள். அங்குக் கடும்பாம்பு போன்ற பற்கள் பேசட்டும். அந்த பற்கள் அலர் தூற்றியதைத் தானே முன்பு நீ களைந்தாய். இப்போது அங்கேயே விட்டுவிடு.