உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளிமின்கடத்துமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பொருள் மீது ஒளி படுவதின் விளைவாக, அப்பொருளின் மின்கடத்துமை கூடுவது ஒளிமின்கடத்துமை எனப்படுகின்றது. குறைக்கடத்திகளின் மீது தக்க ஆற்றல் உடைய ஒளியலைகள் விழும் பொழுது, அவ் ஒளியின் ஆற்றலைப் பற்றிக் கொண்டு குறைக்கடத்தி அணுக்களின் பிணைப்பில் கட்டுண்டிருந்த எதிர்மின்னிகள் விடுபடுகின்றன. இதனால் எதிர்மின்னிகளும் புரைமின்னிகளும் (holes) விடுபட்டு மின்கடத்துமையில் பங்கு கொள்கின்றன. இதனால் குறைக்கடத்தியின் மின்கடத்துமை கூடுகின்றது. இவ்வாறு ஒளியின் விளைவால் மின்கடத்துமை கூடுவது ஒளிமின்கடத்துமை ஆகும். இவ் விளைவைப் பயன்படுத்தி பல ஒளியுணர் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. புத்தகங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை ஒளிமின் படியெடுக்கும் (copying) உலர்முறை செராக்ஸ் கருவிகளிலும் இவ்வகையான ஒளிமின் விளைவுகள் பயன்படுகின்றன. குறைக்கடத்தியாகிய சீருறா செலீனியம் (amorphous Selenium) போன்ற பொருள்களில் ஒளி படும்பொழுது ஒளிமின் விளைவால் மின்மம் தூண்டப்படுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. DeWerd, L. A.; P. R. Moran (1978). "Solid-state electrophotography with Al2O3". Medical Physics 5 (1): 23–26. doi:10.1118/1.594505. பப்மெட்:634229. Bibcode: 1978MedPh...5...23D. 
  2. Saghaei, Jaber; Fallahzadeh, Ali; Saghaei, Tayebeh (June 2016). "Vapor treatment as a new method for photocurrent enhancement of UV photodetectors based on ZnO nanorods". Sensors and Actuators A: Physical 247: 150–155. doi:10.1016/j.sna.2016.05.050. 
  3. Pearsall, Thomas (2010). Photonics Essentials, 2nd edition. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-162935-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிமின்கடத்துமை&oldid=4164878" இலிருந்து மீள்விக்கப்பட்டது