ஏ. பி. ஜே. மனோரஞ்சிதம்
Appearance
ஏ. பி. ஜே. மனோரஞ்சிதம் என்பவர் சமூகவியல் செயற்பாட்டாளர், பெண்ணியலாளர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.[1]
பெரியார் ஈ. வெ. இராமசாமி தலைமையில் இயங்கிய திராவிடர் கழகத்தில் இளம் அகவையில் ஈடுபாடு கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது ஆனார். சாதிய அமைப்பு முறைக்கு எதிராகச் செயல்பட்டார். 1956 ஆம் ஆண்டில் ஏ.பி.ஜனார்த்தனம் என்பவரை சாதி கடந்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் பெரியார் ஈ.வெ.இராமசாமி தலைமையில் நிகழ்ந்தது.. சாதிப் பெயர்களை அழித்தும் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டும் தமது சாதி எதிர்ப்பைக் காட்டினார். சமூக முன்னேற்றத்துக்குச் செயல்பட்ட பெண்கள் பற்றிய வரலாறுகளை எழுதினார்.
மேற்கோள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-23. பார்க்கப்பட்ட நாள் 2017-12-31.