உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். எம். ஏ. ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.எம்.ஏ. ஹசன் (பிறப்பு: மே 27, 1927) இலங்கை எழுத்தாளரும், ஆய்வாளரும், கல்வியியலாளரும், நூலாசிரியருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

எஸ்.எம்.ஏ. ஹசன் இலங்கையில் ஒரு ஓய்வுபெற்ற கல்வியியலாளரும், எழுத்தாளரும், நூலாசிரியருமாவார். மே 27, 1927ஆம் ஆண்டு கண்டியில் ஹீரஸ்ஸகல எனும் பிரதேசத்தில் பிறந்த இவர், ஹனா எனும் துணைப் பெயரில் எழுதியுள்ளார். இவரின் மனைவி சித்தி சர்தாபி ஹசன். இவரது பிள்ளைகள் ஜெய்னுல் இம்ரானி, முஹம்மத் ரூமி, முஹம்மத் ரிஸ்மி.

இவரது முதல் ஆக்கம் 1944ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. 1958, 1964 காலப்பகுதியில் கண்டி மாவட்ட வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் வீரகேசரி பத்திரிகையில் வாரந்தோறும் வெளிவந்த இஸ்லாமிய உலகம் எனும் பகுதிக்கு பொறுப்பாளராகவும் செயலாற்றியுள்ளார். தொழில் ரீதியாக பாடசாலை ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய இவர், ஓய்வுபெறும்போது கண்டி மாவட்ட கல்விப் பணிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரால் எழுதப்பட்ட கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் எனும் திறனாய்வு நூலுக்கு 1975ம் ஆண்டு சாகித்தியமண்டலப் பரிசு கிடைத்தது.

இவர் எழுதியுள்ள நூல்கள்

[தொகு]
  • பதியுத்தீன் மஹ்மூத் - வாழ்க்கைச் சுருக்கம் (1969)
  • அருளவாக்கி அப்துல் காதர் (1973)
  • நான் கண்ட பண்டாரநாயக்கா (மொழிபெயர்ப்பு) (1975)
  • கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் (1975)
  • நெஞ்சத் தாமரையின் இன்ப நினைவுகள் (1975)
  • கம்பன் கவியமுதம் - கவிதை விளக்கம் (1976)
  • அமெரிக்க கருப்பு இன முஸ்லிம்கள் (மொழிபெயர்ப்பு) (1976)
  • யசஹாமி (சிறுவர்களுக்கான குறுநாவல்) (1979)
  • வைத்தியர் திலகம் அப்துல் அஸீஸ் (1997)
  • அல்லாமா இக்பால் - ஓர் அறிமுகம் (1998)
  • அல்லாமா இக்பால் - இதயப்புதையல் (1999)
  • • யசஹாமி - சிங்கள மொழிபெயர்ப்பு (2001)

பெற்ற விருதுகள்

[தொகு]
  • கலாநிதி சு.வித்தியானந்தன் தலைமையில் கண்டியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் 'கலைமணி' விருது – 1976
  • முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தால் நடத்தப்பட்ட வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்ச்சியில் 'கன்சுல் உலூம்' விருது - 1993
  • மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட கலைஞர்கள் பாராட்டு வைபவத்தில் பொற்கிழியும், விருதும் - 1994
  • இலங்கை அரசின் கலாபூசண விருது - 1999

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._ஏ._ஹசன்&oldid=2716404" இலிருந்து மீள்விக்கப்பட்டது