உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபெத் வில்லியம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலிசபெத் இலாங்குதன் வில்லியம்சு (Elizabeth Langdon Williams) (பிப்ரவரி 8, 1879, புட்னாம், கன்னெக்டிகட் – 1981[1]:{{{3}}}) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1903 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் தொடக்கநிலைப் பெண் பட்டதாரிகளில் ஒருவராவார்.[2]:{{{3}}} இவர் பெர்சிவால் உலோவலால் ஒரு புதிய கோளைக் கண்டறிய பணிக்கு அமர்த்தப்பட்டார்.[3]:{{{3}}} இவர் 1915 இல் உலோவலில் இருந்த மாந்தக் கணிப்பாளருக்குத் தலைமை வகித்தார். இவரது கணக்கீடுகள் புளூட்டோவைக் கண்டறிவதற்கான படிமத்தைப் படம்பிடித்தாலும் இவர் வான்காணகத்தை விட்டு 1930 இலேயே விட்டுவிலகிவிட்டார். கிளைடு தாம்பவுக் இறுதியாக 1930 இல் இப்ப்படிமத்தின் சிறப்பை உணர்ந்தார்.[4]:{{{3}}} இவர் 1922 இல் ஜார்ஜ் கால் ஆமிள்டன் எனும் வேறொரு வானியலாளரை மணந்தார்.[1]:{{{3}}}[5]:{{{3}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Schindler, Kevin (2016), Lowell Observatory, Images of America, Arcadia Publishing, p. 63, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439655726
  2. "Elizabeth Langdon Williams", Year of Pluto, Lowell Observatory Archives, பார்க்கப்பட்ட நாள் 2017-08-09
  3. Littmann, Mark (2004), Planets Beyond: Discovering the Outer Solar System, Dover Books on Astronomy, Courier Corporation, p. 67, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486436029
  4. "Elizabeth Langdon Williams", Storied Women of MIT, Massachusetts Institute of Technology
  5. Putnam, William Lowell (2002), Percival Lowell's Big Red Car: The Tale of an Astronomer and a 1911 Stevens-Duryea, McFarland, p. 144, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786412341
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_வில்லியம்சு&oldid=2595773" இலிருந்து மீள்விக்கப்பட்டது