உலோலீத்தா புலோறேஸ்
Appearance
உலோலீத்தா புலோறேஸ் | |
---|---|
பிறப்பு | மரியா உலோலீத்தா கோன்சலஸ் புலோறேஸ் 6 மே 1958 மத்ரித், எசுப்பானியா |
பணி | பாடகி, நடிகை |
பெற்றோர் | அந்தோனியோ கொன்சாலெஸ் உலோலா புலோறேஸ் |
வாழ்க்கைத் துணை | கில்லர்மோ புலோறேஸ் |
பிள்ளைகள் | அன்டோனியோ புளோரஸ் கில்லர்மோ |
மரியா உலோலீத்தா கோன்சலஸ் புலோறேஸ் அல்லது உலோலீத்தா புலோறேஸ் (ஆங்கில மொழி: María Dolores González Flores) (பிறப்பு: 6 மே 1958) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார்.[1]
இவர் 1970 முதல் 1975 ஆம் ஆண்டுகளில் எசுப்பானியா விலும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலும் 'அமோர், அமோர்' என்னும் இவரது இசைக்கோவை மூலம் பெரும் வெற்றி கண்டார். இது மட்டுமின்றி இவர் 'திறேக்தீச்மோ' மற்றும் 'ஒஸ்தால் ரொயால் மன்சானாறேஸ்' போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்களித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]உலோலீத்தா புலோறேஸ்மே திங்கள் 6 ஆம் தேதி 1958 ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் தலைநகரமான மாத்ரீதில் பிறந்தார். இவரது இயற்பெயர் 'தோலோறேஸ் கொன்சாலெஸ் புலோறேஸ்' ஆகும். இவரது தந்தை 'அந்தோனியோ கொன்சாலெஸ்' மற்றும் இவரது தாயார் உலோலா புலோறேஸ் ஆவார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lolita recibe la Medalla de Oro al Mérito en las Bellas Artes de manos de los reyes" (in es). Diez Minutos (Hearst Magazines International). 18 February 2019. https://www.diezminutos.es/famosos-corazon/famosos-espanoles/a26387547/lolita-medalla-de-oro-al-merito-en-las-bellas-artes-rey-felipe-reina-letizia/. பார்த்த நாள்: 18 February 2019.