உரோமுலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோமுலசும், அவருடன் இரட்டைக் குழந்தையாகப் பிறந்த சகோதரர் இரீமசும். 15ஆம் நூற்றாண்டுச் சித்தரிப்பு.

உரோமுலசு என்பவர் உரோமை நிறுவியவராகத் தொன்மவியலில் குறிப்பிடப்பட்டுள்ளவரும், அதன் முதல் மன்னனும் ஆவார். உரோமின் பழைய சட்ட, அரசியல், சமய மற்றும் சமூக அமைப்புகள் பலவற்றை நிறுவியவராக உரோமுலசுவையும், அவரது சமகாலத்தவர்களையும் பல்வேறு பாரம்பரியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த பாரம்பரியங்களில் பெரும்பாலானவை நாட்டார் வழக்காற்றியலின் அம்சங்களை உள்ளடக்கியிருந்தாலும், இந்த தொன்மவியல் உரோமுலசுக்குக் கீழ் ஒரு வரலாற்று நபர் எந்த அளவுக்கு இருந்துள்ளார் என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. இவருடன் தொடர்புடைய நிகழ்வுகளும், அமைப்புகளும் உரோமின் தொடக்கம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்களைச் சுற்றியுள்ள தொன்மவியலின் மையப் பகுதிகளாக உள்ளன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Livy, History of Rome i. 3.
  2. Dionysius of Halicarnassus, Roman Antiquities i. 76.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமுலசு&oldid=3650772" இலிருந்து மீள்விக்கப்பட்டது