உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசா காரவடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசா காரவடே

ஈசா காரவடே (Eesha Karavade) என்பவர் இந்தியாவின் சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் மாகாராட்டிர மாநிலத்தின் புனே நகரத்தைச் சேர்ந்தவர்.[1] ஈசா 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார். ஈசா அனைத்துலக மாசுடர் மற்றும் பெண்கள் கிராண்டு மாசுடர் பட்டம் பெற்றவர் ஆவார்.[2] இந்தியாவிற்காக சதுரங்க ஒலிம்பியாடில் 2010, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் விளையாடி பெருமை சேர்த்தார்.[3][4]

மாகாராட்டிரா மாநில அரசின் சிவ சத்திரபதி விருது 2004 ஆம் ஆண்டில் ஈசாவிற்கு வழங்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற 38 ஆவது இந்திய பெண்கள் பிரீமியர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் ஈசா முதலாவது இரண்டாம் இடத்தைப் பெற்றார்.[5]

ஈசா 2011 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற காமென்வெல்த் சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[6]

ஈரானில் நடைபெற்ற ஆசிய பெண்கள் தனிநபர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.[7]

40 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டி 2012 ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள இசுதான்புல் என்னும் நகரத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் ஈசா பெண்கள் சதுரங்க குழுவில் விளையாடி நான்காம் இடத்தை பிடித்தார். பிளிட்சு முறை நடைபெற்ற பெண்கள் சதுரங்கம் குழு போட்டியில் தங்கப் பதக்கமும் , 2014 ஆம் ஆண்டு தப்ரீசு நகரில் நடைபெற்ற ஆசிய நாடுகள் கோப்பை விரைவு சதுரங்கம் மற்றும் முறையான சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் இவரது அணிக்குக் கிடைத்தது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://timesofindia.indiatimes.com/First-WGM-norm-for-Eesha-Karavade/articleshow/873093.cms
  2. http://www.indianexpress.com/oldStory/68328/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. http://www.olimpbase.org/playersw/tvn73thf.html
  5. http://www.rediff.com/sports/report/mary-ann-gomes-wins-maiden-national-chess-crown/20111109.htm
  6. http://en.chessbase.com/post/gawain-jones-wins-commonwealth-championship-on-tiebreak
  7. http://www.sportstaronnet.com/tss3421/stories/20110526506103600.htm
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசா_காரவடே&oldid=3779833" இலிருந்து மீள்விக்கப்பட்டது