இலங்கை சோனகர் (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை சோனகர் இலங்கை, கொழும்பிலிருந்து 1935ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
சிறப்பு
[தொகு]சோனகர் எனப்படுவோர் இலங்கையில் வாழும் இசுலாமியர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். எனவே, இலங்கை இசுலாமியர்கள் சார்பாக இவ்விதழ் வெளிவந்துள்ளது.
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் இலங்கை இசுலாமியர்கள் தொடர்பான பல்வேறு செய்திகளும் இசுலாமியர்களை உணர்வூட்டக்கூடிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. கட்டுரைகள். ஆய்வுக் கட்டுரைகள், செய்திகள், செய்தி விமர்சனங்கள், செய்தி ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கங்களையும், இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது. இதில் இடம்பெறும் வாசகர் கருத்துகளை நோக்குமிடத்து செய்திகள் நடுநிலைமைப் போக்குமிக்கவையாக இருப்பதாக காணமுடிகின்றது.
ஆதாரம்
[தொகு]- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்