இரீட்டா சம்பூர்ணா
இரீட்டா சம்பூர்ணா | |
---|---|
இரீட்டா சம்பூர்ணா Rita Sambruna | |
பிறப்பு | இத்தாலி |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | நாசா ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பன்னாட்டு உயராய்வுப் பள்ளி (மெய்யியல் முதுவர், முனைவர்) மிலான் பல்கலைக்கழகம் (இலாரியா பட்டம்) |
விருதுகள் | நாசா நிகரற்ற சாதனைப் பதக்கம் |
h-index = 56 |
இரீட்டா எம். சம்பூர்னா (Rita M. Sambruna) ஓர் இத்தாலிய அமெரிக்க வானியற்பியலாளரும் நாசா தலைமையக வானியற்பியல் துறை கணினி நிரல் அறிவியலாளரும் ஆவார். இவர் வானியற்பியல் தரவு பகுப்பாய்வு நிரலுக்கான இணை நிரல் அலுவலரும் ஆவார். இவர் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையின் கிளேர் பூத்தே உலூசி பேராசிரியர் ஆவார்.
இளமையும் கல்வியும்
[தொகு]இத்தாலியரான இவர் மிலான் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம்( இலாரியா பட்டம்) பெற்றார்.[1] இவர் நாசாவின் பன்னாட்டு உயராய்வுப் பள்ளி யில் வானியற்பியலில் மெய்யியல் முதுவர், முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவரது ஆய்வுத் தலைப்பு உரோசாட் விண்கலம் வழி நோக்கிய புறப்பால்வெளித் தாரைகளின் புதிர்க்கதிர் இயல்புகள் என்பதாகும்.[2]
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர் விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வு செய்தார், பால்ட்டிமோரில் இவர் நாசாவின் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் தேசிய ஆராய்ச்சி மன்ற (NRC) ஆராய்ச்சி உறுப்பினராகவும் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்து மாநிலக் கல்லூரியில் இணை ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். இவர் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வாழ்க்கைப்பணி விருதை பெற்றுள்ளார்.[1]
இவர் 2000 முதல் 2005 வரை ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் துறையின் கிளேர் பூத்தே உலூசி பேராசிரியர் தகைமையைப் பெற்றார். அங்கு இவர் புலக் கல்விப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கு பல பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு இளம் மாணவருக்கு ஆராய்ச்சித் திட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவர் கோடார்டு விண்வெளி பறப்பு மையப் பெர்மி குழுவில் முதுநிலை அறிவியலாளர் ஆவார். அப்போது அங்கு பால்வெளிகள்,தாரைகள், கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி நடத்தினார். [2]
இவர் 2010 இல் நாசா தலைமையகத்தில் அண்டத் திட்ட இயற்பியல் கணினிநிரல் அறிவியலாளராகச் சேர்ந்தார். இங்கு இவர் அந்தத் திட்ட வானியற்பியலுக்கான பத்தாண்டு அளக்கை சார்ந்த முன்தேவைகளை மேர்பார்வை செய்கிறார், அதொடு வானியற்பியல் தொழில்நுட்ப நிகழ்ச்சியின் செயல்நெறிவகை மேலாளராக உள்ளார். இவர் ஒருங்கொளி (இலேசர்) குறுக்கீட்டளவி உணர்சட்ட ஈர்ப்பலை நோக்கீட்டகத்தின் கணினிநிரல் அறிவியலாளராக உள்ளதோடு வானியற்பியல் தரவு ஆவணத் திட்டத்தில் இணை கணினிநிரல் அலுவலராகவும் உள்ளார். இவர் வானியற்பியல் பிரிவின் செயல்நெறி வகுப்பாளராகத் தலைமையேற்று நடத்தி வருகிறார்.[2]
இவர் 2019 இல் நாசா நிகரற்ற சாதனைப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். [3]
ஆராய்ச்சி
[தொகு]இவரது வானியற்பியல் ஆர்வங்கள் மீப்பொருண்மைக் கருந்துளையைச் சுற்றியும் நிலவும் பொருண்ம நிலைமைகள் (தாரைகள் காற்றுகள், வெப்ப உட்கவரிகள் போன்றன) பற்றியே குவிந்துள்ளன. இதற்கு இவர் புதிர்க்கதிர், காம்மாக்கதிர் நோக்கீட்டகங்களைப் பயன்படுத்துகிறார். இவற்றில் சந்திரா, XMM-நியூட்டன், பெர்மிi ஆகிய நோக்கீட்டகங்கள் அடங்கும். இவர் இப்போது புடவி ஆய்வுகளுக்கு மின்காந்த அலைப்பட்டை முறையோடு மிகைநிரப்பாக ஈர்ப்பலைகளையும் சேர்த்துக் கொள்கிறார்.[4]
இவர் அமெரிக்க வானியல் கழகத்திலும் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழட்த்திலும் அமெரிக்க இயற்பியல் கழகத்திலும் உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை]
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர் ஓய்வு நேரத்தில் வாசிப்பிலும் குதிரையேற்றத்திலும் ஓக்க்கலையைக் கற்பித்தலிலும் ஆர்வ கொண்டவர்.[2] இவர் புற்றுநோய் சார்ந்த சான்று பெற்ற RYT200 ஓகக்கலைப் பயிற்சியாளர்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Rita Sambruna". GMU.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Dr. Rita Sambruna | Science Mission Directorate". science.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
- ↑ "Rita Sambruna Exceptional Achievement Medal 2019".
- ↑ 4.0 4.1 "Dr. Rita Sambruna | Science Mission Directorate". science.nasa.gov. Archived from the original on 2019-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
வெளி இணைப்புகள்
[தொகு]- இரீட்டா சம்பூர்ணா publications indexed by Google Scholar
This article incorporates public domain material from websites or documents of the நாசா.
- வாழும் நபர்கள்
- அமெரிக்க வானியற்பியலாளர்கள்
- அமெரிக்க வானியலாளர்கள்
- அமெரிக்க இயற்பியலாளர்கள்
- அமெரிக்கப் பெண் இயற்பியலாளர்கள்
- பெண் வானியற்பியலாளர்கள்
- பெண் வானியலாளர்கள்
- பெண் இயற்பியலாளர்கள்
- அமெரிக்கப் பெண் அறிவியலாளர்கள்
- நாசா வானியற்பியலாளர்கள்
- இத்தாலிய வானியற்பியலாளர்கள்
- இத்தாலிய வானியலாளர்கள்
- இத்தாலிய இயற்பியலாளர்கள்
- இத்தாலியப் பெண் இயற்பியலாளர்கள்