இராமாவில் கந்தசுவாமி கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராமாவில் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் இராமாவில் என்னும் இடத்தில் கண்டி வீதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில்.
ஆலய அமைப்பு
[தொகு]கர்ப்பக்கிரகத்தில் வள்ளி தேவசேனா சமேதராக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். அடுத்து அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம் தம்ப மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி என்பனவும் அமைந்துள்ளது. அதோடு பரிவார ஆலயங்களாக விநாயகர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, பைரவர், சண்டேஸ்வரர் என்பனவும் காணப்படுகின்றது. ஆறுமுகசுவாமி, முத்துக்குமாரசுவாமி ஆகியோருக்கு தனித்தனியான ஆலயங்களும் (தேவசபை) அமைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]ஆலய பரிபாலனமும் சிவாச்சாரியார்களும்
[தொகு]நித்திய பூசை
[தொகு]இங்கு நித்திய பூசை இரண்டு காலங்கள் நடைபெறுகின்றது.
ஆலய உற்சவங்கள்
[தொகு]கார்த்திகைத் திருவிழா
[தொகு]ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு விஷேட பூசையும் திருவிழாவும் நடைபெறுகின்றது.
சிவராத்திரி
[தொகு]மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரி அன்று இரவு நான்கு சாமப் பூசை நடைபெறுகின்றது.
கந்தசட்டி
[தொகு]ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசட்டி ஆறு நாட்களும் அபிஷேகமும் உற்சவமும் நடைபெற்று ஆறாம் நாள் சூரன் போரும், ஏழாம் நாள் திருக்கல்யாணமும் நடைபறுகின்றது.
வருடாந்த மகோற்சவம்
[தொகு]ஆனி மாத அமாவாசைத் திதியை அந்தமாகக் கொண்டு 10 தினங்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது.