இராபர்டோ செனிட்டு
இராபர்டோ செனிட்டு Roberto Zenit | |
---|---|
கல்விப் பின்னணி | |
கல்வி | மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் | பிரவுன் பல்கலைக்கழக பொறியியல் பள்ளி |
இராபருடோ செனிட்டு (Roberto Zenit) மெச்சிக்கோ நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியல் விஞ்ஞானியாவார். கலிபோர்நியா தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப்பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இவர் ஐக்கிய அமெரிக்காவின் உரோடு தீவு மாகாணத்திலுள்ள பிரவுன் பல்கலைக்கழக பொறியியல் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.[1][2] முன்னதாக செனிட்டு மெச்சிகோவின் தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் 19 ஆண்டுகளாகப் பணியாற்றினார். அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக உறுப்பினராக உள்ளார்.[3][4] திரவ இயக்கவியல் துறையில் நிபுணத்துவம் கொண்டவராக செயல்படுகின்றார்.
பேராசிரியர் இராபர்டோ செனிட்டு திரவ இயக்கவியல் ஆண்டு மதிப்பாய்வு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இணைந்துள்ளார். வரலாறு மற்றும் அடித்தளங்கள் உட்பட திரவ இயக்கவியல் துறையில் திரவங்களின் பல்வேறு விதமான இயற்பியல் அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உள்ளடக்குவதே இவ்வெளியீட்டின் நோக்கமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sagaityte, Cate Ryan,Emilija (2020-04-02). "Brown researchers combat COVID-19 in the lab, clinic". Brown Daily Herald (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Guzman, Alissa (2019-11-04). "The Fascinating Physics of Jackson Pollock's "Drip" Paintings". Hyperallergic (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
- ↑ "Fellows". aps.org. பார்க்கப்பட்ட நாள் April 22, 2017.
- ↑ "Roberto Zenit". unam.mx. Archived from the original on ஏப்ரல் 24, 2017. பார்க்கப்பட்ட நாள் April 22, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)