இரவி சுப்பிரமணியன்
Appearance
இரவி சுப்பிரமணியன் என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். நிதித் துறை, வங்கிகள் தொடர்பான நூல்களும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
பெங்களூரு இந்திய மேலாண்மை நிலையத்தில் பயின்று பட்டம் பெற்ற இரவி சுப்பிரமணியன் சிட்டி பாங்கு, எச்என்பீசி, ஏஎன்இசட் கிறின்லேஸ் பாங்கு போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.[1] எட்டு நூல்கள் எழுதி விருதுகள் பெற்றுள்ளார்.[2]
பெற்ற விருதுகள்
[தொகு]- இந்தியா பிளாசா கோல்டன் குவில் புக் விருது (2008)
- கிராஸ் வர்ட் பெஸ்ட் ஆப் 2010
- கிராஸ் வர்ட் புக் விருது 2011
- கிராஸ் வர்ட் புக் விருது 2012
- கிராஸ் வர்ட் புக் விருது 2015
- தி எக்கனாமிக் டைம்ஸ் சிறந்த தலைமை எழுத்து விருது