உள்ளடக்கத்துக்குச் செல்

இரஞ்சித் சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஞ்சித் சின்ஹா
நடுவண் புலனாய்வுச் செயலகம்
பிறந்த நாள்: 27 மார்ச்சு 1953 (1953-03-27) (அகவை 71)[1]
பிறந்தயிடம்ஜம்சேத்பூர், பீகார்
பணிபுரிந்த பிரிவு இந்தியா
பணியிலிருந்த ஆண்டுகள்1974 - நடப்பு
விருதுகள்இந்தியக் காவல்துறையின் தகுதிசால் பணிக்கான பதக்கம்
சீர்மையானச் சேவைக்கான குடியரசுத் தலைவர் காவலர் பதக்கம்
மத்திய சேமக் காவல் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படைகளின் தலைமை காவல் இயக்குநரின் பாராட்டு வட்டுக்கள்[2]
Alma materபட்னா பல்கலைக்கழகம்[1]
இந்தியப் பொதுத்துறை நிர்வாகக் கழகம்[3]

இரஞ்சித் சின்கா (பிறப்பு 27 மார்ச்சு 1953) இந்தியக் காவல் பணியின் 1974ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆவார். தற்போது நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குநர் பொறுப்பில் உள்ளார். இந்திய - திபெத் எல்லைக் காவல்படை (ITBP) மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படைகளில் தலைமை காவல் இயக்குநராக பணி புரிந்துள்ளார். திசம்பர் 2012இல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குநராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் பட்னா, தில்லி பிரிவுகளில் மூத்த நிலைப் பதவிகளில் பணியாற்றி உள்ளார்.

மத்திய சேமக் காவல் படையில் சிறீநகரில் தலைமை ஆய்வாளர் (இயக்கம்) ஆகவும் தில்லியில் தலைமை ஆய்வாளர் (பணியாளர்) ஆகவும் பணியாற்றி உள்ளார். தேசிய மற்றும் பன்னாட்டளவில் பல தூண்டுதல் மிக்க, முதன்மையான புலனாய்வுகளில் ஈடுபட்டுள்ளார். நடுவண் விழிப்புணர்வு ஆணையம் சட்டம் 2003இல் விவரிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி நடுவண் புலனாய்வு செயலக இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமது பணியின் நிமித்தம் பல்வேறு ஊழல் எதிர்ப்பு அமைப்புக்கள், வருமானவரித் துறை, நடுவண் விழிப்புணர்வு ஆணையம் போன்ற அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இவர் நியமிக்கப்பட்டபோது இவரது தேர்வை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்தது.

இரஞ்சித் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை பட்னாவில் பெற்றார். இவரது தந்தை என்.எஸ். சின்கா பிகார் மாநில அரசில் விற்பனைவரி ஆணையராக பணியாற்றியவர். தாய் மாதுரி சின்கா பட்னாவில் இராசேந்தர் நகரில் வாழ்ந்து வருகிறார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "BIO-DATA OF SHRI RANJIT SINHA, DIRECTOR GENERAL/RPF". Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
  2. "Bihar cadre IPS officer Ranjit Sinha appointed as new CBI chief". சிஎன்என். Nov 22, 2012. Archived from the original on 2012-11-28. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
  3. "Senior IPS officer Ranjit Sinha is the next CBI Director". இந்தியா டுடே. November 22, 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஞ்சித்_சின்கா&oldid=3543948" இலிருந்து மீள்விக்கப்பட்டது