இன்வார்
இன்வார் (Invar, FeNi36, அல்லது 64FeNi), என்பது இரும்பு-நிக்கல் உலோகக்கலவை ஆகும். இதில் 63.8 % இரும்பும் 36 % நிக்கலும் 2 % கரியும் உள்ளன. இக்கலவையின் வெப்ப விரிவுக் குணகம் குறைவாக இருப்பது இதன் சிறப்பாகும்.[1] ஊசல்களிலும் கடிகாரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இக்கலப்புலோகம் 1896 ஆம் ஆண்டில் சுவீடிய அறிவியலாளர் சார்ல்சு எடுவார்ட் கியோம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1920 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.[2]
இயல்புகள்
[தொகு]ஏனைய நிக்கல்/இரும்புக் கலவைகள் போன்றே, இன்வாரும் ஒரு திண்ம நிலைக் கரைசலாகும், அதாவது இது ஒரு தனித்த -நிலைக் கலப்புலோகம் ஆகும். இதில் 36% நிக்கலும், 64% இரும்பும் காணப்படுகிறது.
பொதுவான வகை இன்வாரின் வெப்ப விரிவுக் குணகம் (α, 20–100 °C இல்) கிட்டத்தட்ட 1.2 × 10−6 K−1 (1.2 ppm/°C) ஆகும், அதே வேளையில், சாதாரண எஃகுகளின் வெப்ப விரிவுக் குணகம் 11 - 15 ppm ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Davis, Joseph R. Alloying: Understanding the Basics. ASM International. pp. 587–589. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87170-744-6.
- ↑ "The Nobel Prize in Physics 1920". nobelprize.org. The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 20 March 2011.
The Nobel Prize in Physics 1920 was awarded to Charles Edouard Guillaume "in recognition of the service he has rendered to precision measurements in Physics by his discovery of anomalies in nickel steel alloys".
வெளி இணைப்புகள்
[தொகு]- What is Invar?, Antica Orologeria Lamberlan, Properties of Invar, by Italian antique clock repair firm