உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோசீனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தோசீனைட்டு (Indochinite) என்பது இயற்கையாகத் தோன்றிய ஒரு வகையான தெளிவற்ற கண்ணாடி போன்ற பாறை வகையாகும். பூமியின் மேல் வளிமண்டலத்தில் ஏற்பட்ட விண்கற்களின் தாக்கத்தால் டெக்டைட்டுகள் எனப்படும் இக்கண்ணாடி போன்ற பாறைகள் வெளியேற்றப்பட்டு பின்னர் குளிர்ந்து தனித்த கண்ணாடிப் பாறையாக உருவாகியிருக்கும் எனக் கருதப்படுகிறது. ஐரோப்பாவிலுள்ள மோல்டாவைட்டு கண்ணாடிப் பாறைகளின் பச்சை நிறத்திலிருந்து மாறுபட்டு இந்தோசீனைட்டு வகைக் கண்ணாடிப் பாறைகள் அடர் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. மாக்மா நெருப்புக் குழம்பு திண்மமாக இறுகி 7,00,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என இப்பாறையின் வயது கணக்கிடப்பட்டுள்ளது. [1]. ஆத்திரேலியா, மைக்குரோனீசியாவின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளுக்கு தெற்கிலும் வடக்கிலுமிருந்து நகர்ந்துவந்து இந்தோசீன தீபகற்பப் பகுதியில் காணப்பட்டதால் இப்பாறை வகைக்கு இந்தோசீனைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. முவோங்கு-நோங்கு வகை கண்னாடிப்பாறையே மிகப்பெரிய இண்டோசீனைட்டு பாறையாகும். அடுக்கடுக்காக காணப்படும் இப்பாறை 29.0 கிலோகிராம் நிறையைக் கொண்டதாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோசீனைட்டு&oldid=2599728" இலிருந்து மீள்விக்கப்பட்டது