இடைநிற்றல்
இடைநிற்றல் (Dropping out) என்பது உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து நடைமுறைக் காரணங்கள், தேவைகள், இயலாமை, அக்கறையின்மை போன்ற காரணங்களினால் முழுக்காலப் படிப்பினையும் நிறைவு செய்யாமல் வெளியேறுவதைக் குறிக்கிறது.
கனடா
[தொகு]கனடாவில், பெரும்பாலான மாணவர்கள் 18 வயதிற்குள் 12 ஆம் வகுப்பிற்கான பட்டம் பெறுகிறார்கள், ஜேசன் கில்மோர் தொழிலாளர் படை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் கல்வி பற்றிய தரவுகளை சேகரிக்கிறார். இது கனடாவில் 2010 ஆம் ஆண்டில் வேலையின்மைத் தரவைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ ஆய்வு ஆகும். இந்தக் கருவியைப் பயன்படுத்தி, கல்வித் தகுதி மற்றும் பள்ளி வருகையை மதிப்பிடுவதன் மூலம் இடைநிற்றல் விகிதத்தைக் கணக்கிடலாம். இந்த ஆய்வின்படி 2009 ஆம் ஆண்டளவில், 20 முதல் 24 வயதுடையவர்களில் பன்னிரண்டில் ஒருவர் உயர்நிலைப் பள்ளிப் பட்டயப் படிப்பில் சேர்வதில்லை என்பது தெரியவந்தது. பெண்களை விட ஆண்கள் இடைநிற்றல் விகிதம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், புறநகர் மற்றும் வடக்குப் பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் இடைநிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா
[தொகு]2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6 ஆக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இடைநிற்றல் விகிதமானது 14.4 சதவிகிதமாகவும் பீகாரில் 21.4 சதவிகிதமாகவும் இடைநிற்றல் விகிதம் உள்ளது.[1]
தடுக்கும் வழிகள்
[தொகு]தமிழ்நாடு அரசின் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலமாக உள்ளூர்ப் பிரதிநிதிகள், இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வர உதவுகின்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம்". புதிய தலைமுறை. 21 Jul 2021.
- ↑ "இடைநிற்றலைத் தவிர்க்கும் வழிமுறைகள்". edexlive. 2 February 2023.