ஆலிஸ் வாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிஸ் வாக்கர்
Walker in 2007
Walker in 2007
பிறப்புபெப்ரவரி 9, 1944 (1944-02-09) (அகவை 80)
Putnam County, Georgia, United States
தொழில்Novelist, short story writer, poet, political activist
காலம்1968–present
வகைAfrican American literature
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Color Purple
குறிப்பிடத்தக்க விருதுகள்Pulitzer Prize for Fiction
1983
National Book Award
1983
துணைவர்Melvyn Rosenman Leventhal (married 1967, divorced 1976)
துணைவர்Robert L. Allen, Tracy Chapman
பிள்ளைகள்Rebecca Walker
இணையதளம்
alicewalkersgarden.com

ஆலிஸ் மல்சீனியர் வாக்கர் (Alice Malsenior Walker;பிப்பிரவரி 9, 1944) என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புதினம், சிறுகதைகள், கவிதைகள் எனப் பல தளங்களில் எழுதிப் புலிட்சர் பரிசு பெற்ற பெண்மணி ஆவார்.[2][3] எழுத்தில் மட்டுமல்லாது சமூக அக்கறையுடன் செயல்படும் பெண்ணியவாதியாகவும் பொதுநலவாதியாகவும் கருதப்படுகிறார்.

இளமைக் காலம்[தொகு]

ஆலிஸ் வாக்கர் அமெரிக்காவின் சியார்சியா (Georgia) என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தார்.[4] 1952 இல் இவர் எட்டாம் அகவையில் இருக்கும்போது ஒரு கண்ணில் அடிபட்டு பாதிக்கப் பட்டார்.[5] இந்நிகழ்வினால் இவர் தனிமையில் விடப்பட்டார். புத்தகங்களைப் படிப்பதும் கவிதைகளைப் படைப்பதும் இவருக்கு மகிழ்ச்சியாக இருந்தன. இருப்பினும் சில ஆண்டுகளில் அறுவை சிகிச்சையினால் நலம் அடைந்தார். அட்லாண்டாவிலும் பின்னர் நியூயார்க்கு நகரிலும் உள்ள கல்லூரிகளில் கல்வி பயின்றார். நியூயார்க்கு நகரின் சாரா லாரன்சுக் கல்லூரியில் படிக்கும்போதே ஆப்பிரிக்காவுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார். தனது கல்லூரி நாட்களில் வாக்குப் பதிவு குறித்தும் குழந்தைகள் உரிமை குறித்தும் மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுபட்டார்.[6]

இல்வாழ்க்கை[தொகு]

1967, மார்ச் 17இல் மெல்வின் ரோஸ்மேன் லெவந்தால் என்ற சிவில் உரிமைப் போராட்டங்களில் முனைப்பாகச் செயல்பட்ட சட்டம் படித்த ஒரு யூத இளைஞனை மணந்துகொண்டார். இக்கலப்புத் திருமணத்தை பழமைவாத அமைப்பான கு கிளஸ் கிளான் எதிர்த்தது. ஆலிஸ் தம்பதியர் தாக்கப் பட்டனர். இருப்பினும் ஆலிஸ் மனம் தளராமல் அத்தாக்குதலை எதிர்கொண்டார்.

எழுத்துப்பணி[தொகு]

1965 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அப்பொழுதே ஆலிஸ் எழுதிய கவிதை நூல் ஒன்று வெளி வந்தது.[7] 1982 இல் தி கலர் பர்பிள் என்னும் புதினம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. புலிட்சர் பரிசும் தேசியப் புத்தக விருதும் இப்புதினத்திற்கு வழங்கப்பட்டன. மேலும் பல புதினங்களும் கட்டுரை நூல்களும் எழுதினார்.

அரசியல், சமூகப்பணி[தொகு]

அறுபதுகளில் கல்லூரியில் படிக்கும்போதே மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரைச் சந்தித்தார். பராக் ஒபாமா அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக ஆனதும் அவரைப் பாராட்டி மடல் எழுதினார் ஆலிஸ். உலக நாடுகளுக்குப் பயணம் செய்து ஏழைகளின் உயர்வுக்கும் ஒடுக்கப் பட்டோர் நலனுக்கும் பரிந்துப் பேசினார். இராக்கில் நிகழ்த்தப்பட்ட போருக்கு எதிராகப் போராட்டம் செய்து சிறைக்குச் சென்றார். இன வேறுபாட்டைக் கடைபிடிக்கும் இசுரேலுக்கும் எதிராகப் பரப்புரை செய்து வருகிறார். கறுப்பினப் பெண்கள் தம் அடிமை நிலையை உணர்ந்து விழிப்பு அடைதல் வேண்டும் என்று பரப்புரை ஆற்றி வருகிறார். ஆலிஸ் வாக்கரின் புத்தகங்கள் 24 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. இந்நூல்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை எயிட்சு நோயினால் வாடும் ஆப்பிரிக்க மக்களுக்கு வழங்குகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alice Walker". Desert Island Discs. அணுகப்பட்டது 2014-01-18.
  2. "National Book Awards - 1983". National Book Foundation. Retrieved 2012-03-15. (With essays by Anna Clark and Tarayi Jones from the Awards 60-year anniversary blog.)
  3. "Fiction". Past winners and finalists by category. The Pulitzer Prizes. Retrieved 2012-03-17.
  4. Logue, Victoria and Logue, Frank (1997). Touring the Backroads of North and South Georgia. Winston-Salem NC: John F. Blair. பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89587-171-8. http://books.google.com/books?id=H6asKSPCcQMC&dq=Touring+the+Backroads+of+North+and+South+Georgia&source=gbs_navlinks_s. 
  5. Walker, Alice (2006). "Beauty: When the Other Dancer is the Self" (PDF). Kingsberry. பார்க்கப்பட்ட நாள் August 29, 2012.
  6. On Finding Your Bliss. Interview by Evelyn C. White, October 1998. Retrieved June 14, 2007.
  7. Miller, Monica (17 December 2012). "Archaeology of a Classic". News & Events. Barnard College. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.

சான்று[தொகு]

http://www.thehindu.com/books/walking-the-talk/article74592.ece

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிஸ்_வாக்கர்&oldid=2895428" இலிருந்து மீள்விக்கப்பட்டது