ஆலய பிரவேச சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா 1939 ஜூலை11ல் நிறைவேற்றப்பட்டது.[1] இது அனைத்து சமுதாயத்தினரும் ஆலயங்களில் சமுதாய வேறுபாடு இன்றி நுழைந்து வழிபட வழிவகை செய்தது.

ஆலயப்பிரவேசம்[தொகு]

ஆலயப்பிரவேச சட்டம் இயற்றப்படுவதற்கும் முன்னரே, காந்தியவாதி ஏ.வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தப்பட்டிருந்த சமூகத்தினருடன் 1939 ஜுலை 08 ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார். இதன் காரணமாக சிலர் உருவாக்கிய பிரச்சனைகளையும் நீதிமன்ற வழக்குகளையும் இவர் எதிர்கொண்ட சமயம், அப்போதைய முதல்வர் இராஜாஜி ஆலய பிரவேச சட்டத்தை அவசர சட்டமாக கவர்னர் பிரகடனம் செய்ய வழிவகை செய்தார்.காந்தியடிகள் இவரைப் பாராட்டி 22-7-1939 அன்று அரிஜன் இதழில் எழுதினார்.[2]

ஆலயப் பிரவேச சமயம் தியாகி தாயம்மாள் தம் வீட்டில் தாழ்த்தப்பட்டிருந்த மக்களைத் தங்க வைத்து, காலை உணவு வழங்கினார். அதன் காரணமாக அவரது உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

இந்த ஆலயப்பிரவேச நிகழ்வையடுத்தே உடனடியாக 1939 ஜூலை11ல் சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

75ஆம் ஆண்டு வரலாற்று விழா[தொகு]

கோயில் வழிபாடு நுழைவின் 75ஆம் ஆண்டு வரலாற்று விழா ஜூலை 08, 2014 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "ஆலயப்பிரவேச தினத்தை முன்னிட்டு மீனாட்சி கோயிலில் வரலாற்று விழா". Archived from the original on 2014-07-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.
  2. "தினத்தந்தி (ஜுலை 08, 2014); பக்கம் 11 ; ஆலய பிரவேசம் நிகழ்ந்த நாள்". Archived from the original on 2014-07-27. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலய_பிரவேச_சட்டம்&oldid=3722293" இலிருந்து மீள்விக்கப்பட்டது