உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதித்ய சிங் ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்ய சிங் ராணா
தனித் தகவல்கள்
நாடு  இந்தியா
நிலை மூத்தோர் உயரடுக்கு
இந்திய ஆண்கள் சீருடற்பயிற்சி அணி
தேசிய அணியில் ஆண்டுகள் 2009 முதல்

ஆதித்ய சிங் ராணா (Aditya Singh Rana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 அன்று இவர் பிறந்தார். ஆண்களுக்கான கலைநய சீருடற்பயிற்சி விளையாட்டுப் போட்டிகளில் இவர் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஒன்றிய இராச்சியத்தின் இலண்டன் நகரில் நடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 41 ஆவது உலக கலைநய சீருடற்பயிற்சி வெற்றியாளர் போட்டி உள்ளிட்ட உலக வெற்றியாளர் போட்டிகளில் ஆதித்ய சிங் ராணா பங்கேற்றார். [1] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ராணா தரைப்பயிற்சி பிரிவில் 18 ஆம் இடமும் தனிநபர் அனைத்துவகைப் போட்டிப் பிரிவில் 17 ஆவது இடத்தையும் பிடித்தார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2009 World Gymnastics Championships athletes - Aditya Rana". longinestiming.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  2. "Aditya Rana". thecgf.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-09-22. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்ய_சிங்_ராணா&oldid=3730342" இலிருந்து மீள்விக்கப்பட்டது