அல்பெர்ட்டோ காண்ட்டடார்
2010 டூவ ட பிரான்சில் அல்பெர்ட்டோ காண்ட்டடார் | |
தனிநபர் தகவல்கள் | |
---|---|
முழுப் பெயர் | அல்பெர்ட்டோ காண்ட்டடார் வெலசுகா |
பட்டப் பெயர் | எல் பிசுட்டோலெரோ |
பிறப்பு | 6 திசம்பர் 1982 |
நாடு | எசுப்பானியா |
உயரம் | 1.76 m (5 அடி 9+1⁄2 அங்) |
எடை | 60 kg (130 lb) |
அணி தகவல்கள் | |
தற்போதைய அணி | அசுட்டானா |
பிரிவு | சாலை |
பங்களிப்பு | மிதிவண்டி ஓட்டுவீரர் |
Rider type | அனைத்து-தரப்பும்/ஏறுவதில் வல்லுநர் |
Major wins | |
Grand Tours
Other
| |
Infobox last updated on: | |
24 சூலை 2010
1 Team names given are those prevailing |
அல்பெர்ட்டோ காண்ட்டடார் (Alberto Contador, பிறப்பு: டிசம்பர் 6, 1982) ஒரு தொழில்முறை-மிதிவண்டி ஓட்டும் வீரர், எசுப்பானியர். தற்போது அசுட்டானா என்ற அணிக்காக ஓட்டுபவர். 2007-இல் டிசுக்கவரி அணிக்காக ஓட்டி டூவ ட பிரான்சு அல்லது பிரான்சு சுற்று என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை வென்றார்.[1] 2008 வுயேட்டா அ இசுபான்யா (எசுப்பானியா சுற்று), 2008 ஜீரோ தீ தாலியா (இத்தாலி சுற்று), 2009, 2010 டூவ ட பிரான்சு ஆகிய போட்டிகளை அசுட்டானா அணியிலிருந்தும் வென்றுள்ளார். சாலை மிதிவண்டிப் போட்டிகளில் மிகவும் பெருமைக்குரிய ஆன்றபெருஞ் சுற்றுப்போட்டிகள் (Grand Tours) என்றழைக்கப்படும் பிரான்சு சுற்று, எசுப்பானியா சுற்று, இத்தாலி சுற்று ஆகிய மூன்றிலும் வெற்றி பெற்ற ஐந்தாவது வீரர் என்ற பெருமை காண்ட்டடாரைச் சேரும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brown, Gregor (28 July 2007). "Kid Contador conquers Tour de France". Cyclingnews. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2009.
- ↑ Birnie, Lionel (21 September 2008). "Contador quickest to complete Grand Tour set". Cycling Weekly. Archived from the original on 24 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2009.