அலாபின் திறப்பு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.Ne2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | சி20 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயரிடப்பட்டது | செம்யோன் அலாபின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | திறந்த ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
அலாபின் திறப்பு (Alapin's Opening) சதுரங்க விளையாட்டில் விளையாடப்படும் ஒரு வழக்கத்திற்கு மாறான திறப்பு முறையாகும். இத்திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகிறது.
உருசோ-லித்துவேனிய வீர்ரும் சதுரங்கத் திறப்புகள் பகுப்பாய்வு அறிஞருமான செம்யோன் அலாபின் (1856-1923) இத்திறப்பைக் கண்டறிந்ததால் இவ்வகையானத் திறப்புக்கு இப்பெயரிடப்பட்டது. அலாபின் திறப்பு வீர்ர்களால் அரிதாகவே விளையாடப்படுகிறது. லுச்போயெவிக் (கருப்பு காய்களுடன்) 1970 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள குரோனிங்கனில் இத்திறப்புக்கு எதிராக ஆடினார்.
விளக்கம்
[தொகு]அலாபின் திறப்பு வழக்கத்திற்கு மாறானது, ஆனால் வெள்ளைக் காய்களுடன் விளையாடுபவருக்கு சரியாக விளையாடுவதற்கு உகந்த திறப்பாகும். உருய் லோப்பசு போன்ற ஆழமான கோட்பாட்டு அடிப்படையிலான திறப்பு வரிசைகளை தவிர்க்கவும் அல்லது எதிரியை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை விரைவில் f2–f4 நகர்வை விளையாட திட்டமிட்டுள்ளார். ஒருவேளை வெள்ளை g3, Nbc3, d3, Bg2 நகர்வுகளை விளையாட முயற்சித்தால் ஏற்படும் நிலை சிம்சுலோவ் நிலையை (சிம்சுலோவ்-போட்வினிக்,1958) ஒத்ததாக அமையும்.
இருப்பினும் அலாபின் திறப்பு பல்வேறு சிக்கல்களை வெள்ளைக்காக அழைத்து வருகிறது. வெள்ளையின் வெள்ளை அமைச்சர் மற்றும் ராணியை முன்னேறி வரவிடாமல் தடுக்கிறது என்பது முதலாவது சிக்கலாகும். விளையாட்டுக்குள் குதிரை பங்கேற்க மேலும் ஒரு நகர்வு அல்லது மற்றொரு சிப்பாய் நகர்வு அவசியமாவது சிறிய காய்களை வேகமாக வெளிக்கொணர்ந்து விளையாட்டில் ஈடுபடுத்துவது என்ற திறப்பு கோட்பாட்டுக்கு மாறுபாடாக அமைகிறது.
e2 சதுரத்தில் இருக்கும் வெள்ளைக் குதிரை கருப்பின் ஆட்டப்பகுதி மையத்தை எந்தவிதமான அச்சுறுத்தல் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தாமல் நெகிழ்வுடன் நிற்கிறது. எனவே இந்நோக்கத்திற்காக மேலும் ஒரு நகர்வை செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிக்கிவிடுகிறார் என்பது வெள்ளை சந்திக்கும் இரண்டாவது சிக்கலாகும்.
வெள்ளையின் வழக்கத்திற்கு மாறான இத்திறப்பை சமாளித்து சமநிலையை அடைவது கருப்புக்கு சற்று எளிமையான முயற்சியிலேயே சாத்தியமாகி விடும். உதாரணாமாக 2...Nf6, 2...Nc6, மற்றும் 2...d5 போன்ற எந்த நகர்வும் இதற்கு உதவும். இருதியாக வெள்ளையின் f2–f4 நகர்வில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க கருப்பு சற்று எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியதும் கட்டாயமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- John Nunn; Graham Burgess; John Emms; Joe Gallagher (1999). Nunn's Chess Openings. Everyman Publishers plc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85744-221-0.
{{cite book}}
: Unknown parameter|last-author-amp=
ignored (help)