அர்செசிலௌசு
அர்செசிலௌசு | |
---|---|
அர்செசிலௌசும் கார்னியடெசும் | |
பிறப்பு | கி.மு 316/5 பிதானே, அயோலிசு |
இறப்பு | கி.மு 241/0 ஏதென்சு |
காலம் | பண்டைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | பிளாட்டோனியம் |
முக்கிய ஆர்வங்கள் | பிளாட்டோனியம் , கல்விக்கழக ஐயுறவுவாதம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | கல்விக்கழக ஐயுறவுவாதம் நிறுவனர் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
அர்செசிலௌசு (/ˌɑːrsɛs[invalid input: 'ɨ']ˈleɪ.əs/; கிரேக்கம்: Ἀρκεσίλαος; கி.மு 316/5–கி.மு 241/0) [1]) ஒரு கிரேக்க மெய்யியலாரும் இரண்டாம் அல்லது நடு பிளாட்டோனியக் கல்விக்கழகத்தை நிறுவியவரும் ஆவார். இது கல்விக்கழகத்தின் ஐயுறவுவாதக் கட்டமாகும். அண். கி.மு 264இல் அர்செசிலௌசு ஏதென்சின் கிரேட்டசு என்பவருக்குப் பிறகு ஆறாம் தலைமைப்புலவராக அமர்ந்தார்.[2] அவர் தன் சிந்தனைகளை எழுத்தில் வடிக்கவில்லை. எனவே பிந்தைய எழுத்தாளர்களின் பதிவில் இருந்தே அவரது எண்ணங்களை அறிய முடிகிறது. மெய்யியல் ஐயுறவுவாதத்தை முன்னெடுத்த முதல் கல்விக்கழகத்தினர் இவரே ஆகிறார். அதாவது இவர் புலன்களின் உலக உண்மையறியும் திறமையை நம்ப மறுத்தார். என்றாலும் உண்மை நிலவுவதை (இருப்பதை) நம்பினார். இது கல்விக்கழகத்தில் ஐயுறவுவாதக் கட்டத்தை உருவாக்கியது. இவரது முதன்மையானஎதிரிகள் சுதாயிக்குகளே ஆவர். சுதாயிக்குகள் நிலவலை நம்பியதோடு அதை உறுதியாக அறிதல் ஒல்லும் என்றனர்.
வாழ்க்கை
[தொகு]அர்செசிலௌசு அயோலிசுவில் உள்ள பிதானேவில் பிறந்தார். இவர் தொடக்கக் கல்வியைப் பிதானேவைச் சார்ந்த ஆட்டோலிகசு எனும் கணிதவியலாரிடம் பயின்றார். பிறகு அவருடன் சார்டிசுக்குப் புலம்பெயர்ந்தார். பின்னர் ஏதென்சில் யாப்பியல் பயின்றார்.ஆனால் மெய்யியலை ஏற்று தியோப்பிராசுடசு, கிரேண்டர் ஆகிய இருவரிடமும் மெய்யியலைப் பழகினார்..[3] பிறகு இவர் பொலிமோ, கிரேட்டசு ஆகியவர்களிடம் நெருங்கிப் பழகினார். மேலும் அதனால் அப்பள்ளியின் தலைமையையும் ஏற்கலானார். (σχολάρχης). [4]
இவரது பிந்தையவரைப் போலவே இவரும் மிதமிஞ்சியக் குடியால் இறந்துபட்டதாக டையோஜீனசு லயேர்டியசு கூறுகிறார். ஆனால் இது மற்றவர்களால் அதாவது, கிளீந்தசு போன்றவர்களால் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் எதீனியர்களால் பெரிதும் மதிக்கப்பட்டுள்ளார்.[4]
மெய்யியல்
[தொகு]அர்செசிலௌசு எதையுமே எழுதி வைக்கவில்லை. அவரது சமகால அறிஞர்களுக்கும் அவரைப் பற்றிச் சரிவர ஏதுமே திரியாது. அவரது எதிரிகளின் குழப்பம் தரும் கூற்றுகளில் இருந்தே அவரது சிந்தனைகளைத் திரட்டவேண்டும். இதனால் இவரின் மெய்யியல் ஒருங்கியைபு அற்றதாகவும் மதிப்பிட அரியதாகவும் உள்ளது, எனவே அறிஞர்கள் இவரது ஐயுறவுவாதத்தை பலவகைகளில் பார்க்கின்றனர். சிலர் இவரது மெய்யியலை முற்றிலும் எதிமறையானதாகவும் அனைத்து மெய்யியல் பார்வைகளையும் அழிக்க்க் கூடிய்தாகவும் காண்கின்றனர். மற்றவர்கள் இவரது வாதங்களில் இருந்து எதையுமே அறிதல் இயலாது எனும் நிலைப்பாட்டை அடைகின்றனர். இன்னும் சிலர் எந்தவொரு மெய்யியல் தலைப்பு பற்றியோ அறிவு பற்றியோ நேர்முகமான பார்வையேதும் இல்லாதவர் என்கின்றனர்.[5]
ஒருபுறம் இவர் பிளாட்டோவின் நெறிமுறைகளை அதன் திரித்த வடிவத்தில் மீட்டவராகக் கருதப்படுகிறார்; ஆனால் மறுபுறம் சிசெரோவின் கூற்றின்படி,[6] "ஒருவன் எதையும் அறிகிலன், அவனது அறியாமையைக் கூடத்தான்." எனும் வாய்ப்பாட்டின்படி அனைத்தையும் ஒன்றுகூட்டினார் எனப்படுகிறது. இந்த சிக்கலை இருவழிகளில் தீர்க்கலாம்: இந்தக் கூற்றை அவரது மாணாக்கர்களுக்கான பயிற்சிக்காக அவர் கூறியிருக்கலாம் அல்லது இவரை ஐயுறவுவாதியாக்க் கணிக்கும் செக்டசு எம்பிரிக்கசு கூற்றின்படி,,[7] பிளாட்டோவின் குழுஉக் குறிப் பொருளை நமை நம்பவைக்க்க் கூரியிருக்கலாம் அல்லது அதை அவர் ஐயப்பட்டிருக்கலாம் அல்லது வறட்டுவாதிகளின் உறுதிப்பாடான நெறிமுறைகளை ஏற்று, அவர்களது புனைவுப்பாங்குகளைத் தோலுரிக்கப் பார்த்திருக்கலாம்.[8]
அர்செசிலௌசின் முதன்மையான எதிரிகள் சுதாயிக்குகளே; இவர் அவர்கலது நம்பவைக்கும் கருத்து நெறிமுரையான [[அறிதகும் புலன்காட்சி|அறிதகும் மனப்பதிவை} வன்மையாக எதிர்க்கிறார். இது அறிவியலுக்கும் சொந்தக் கருத்துக்கும் இடைநிலைப்பட்டதாகும் என வாதிடுகிறார். இத்தகைய இடைநிலை நிலவவே வாய்ப்பில்லை என்றார். இது ஒரு பெயரின் இடைச்செருகலே என்பார் அவர்.[9] இது முரண்பட்ட கூற்றுகளைக் கொண்டுள்ளது. ஒரு பொருளின் மனப்பதிவு என்பது பொய்மையும் மெய்மையும் இரண்டும் கலந்திருக்க வாய்ப்புள்ள எண்ணக்கருவாகும்.
பிர்ரோனியத்தில் இருந்து நடு, புதிய கல்விக்கழக ஐயுறவுவாதத்தைப் பிரித்தறிவது முதன்மையானதாகும். > "ஒருவன் எதையும் அறிகிலன், அவனது அறியாமையைக் கூடத்தான்." என்ற அர்செசிலௌசின் கூற்றை அவரது தரப்பு வாதமாக ஏற்றுக்கொண்டால் ஒருபொருளில் ஐயுறவுவாதம் மேலும் தொடரவே இயலாது: என்றாலும் கல்விக்கழக ஐயுறவுவாதிகள் நிலவும் உண்மையை ஐயபட்டதில்லை, அதை அடையும் நம் திறமையில் தான்ஐயம்காட்டினர்.தூய ஐயுறவுவாத நிலைப்பாட்டில் இருந்து நெறிமுறைகளின் நடைமுறைத்தன்மையை ஏற்பதிலும் வேறுபடுகின்றனர்: ஒருவரின் குறிக்கோள் முழுச்சமமையை அடைதலே. மற்றவை எல்லாம் உலகாயத வாழ்க்கைப் புலத்தில் இருந்து விடைபெற வேண்டியவைதாம். அப்புல அறச்சட்ட நுட்பங்களை சிரந்த்தாகவும் வாய்த்த வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். இந்தத் தெளிவே ம்முனிவருக்கும் முட்டாளுக்கும் உள்ள வேறுபாடு. இவ்விரு பள்ளிகளின் வேறுபாடு மெல்லிய கோடாகவே அமைவதால், இவற்றின் நிறுவனர்களின் வாழ்க்கைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால், கல்விக்கழக ஐயுறவுவாதிகளின் போக்கு நடைமுறையேற்பு இடைநிலைவாதமே என அறியலாம்.[10]
அர்செசிலௌசின் மீதான கருத்துரைகள்
[தொகு]பிலைசு பாசுகல் அர்செசிலௌசைப் பற்றிப் பின்வருமாறு தனது கருத்தைக் கூறியுள்ளார். Pensées (1669):
நாடுகளிலும் மாந்தர்களின் போக்கிலும் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்வதைக் கண்ணுற்றுள்ளேன். உண்மையான நயன்மை (நீதி) குறித்த பல மாற்றங்கள் ஏற்பட்டதைப் பார்த்த பிறகு நம் இயல்பு தொடர்ந்த மாற்றத்தில் இருப்பதை உணர்ந்தாலும் நான் இன்னமும் மாறவில்லை. அப்படி நான் மாறினால், தெளிவாக கருத்துரைப்பேன். ஐயுறவுவாதி அர்செசிலௌசு வறட்டுவாதியாக மாறிவிட்டார் என்று.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Tiziano Dorandi, Chapter 2: Chronology, in Algra et al. (1999) The Cambridge History of Hellenistic Philosophy, page 48. Cambridge.
- ↑ http://www.iep.utm.edu/a/arcesil.htm
- ↑ Eusebius of Caesarea: Praeparatio Evangelica VI
- ↑ 4.0 4.1 Chisholm 1911.
- ↑ http://plato.stanford.edu/entries/arcesilaus/
- ↑ Cicero, Academica, i. 12
- ↑ Sextus Empiricus, Pyrrh. Hypotyp. i. 234
- ↑ Cicero, De Oratore, iii. 18.
- ↑ Cicero, Academica, ii. 24.
- ↑ Sextus Empiricus, adv. Math. ii. 158, Pyrrh. Hypotyp. i. 3, 226.
பார்வை வாயில்கள்
[தொகு]- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Arcesilaus". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 2. (1911). Cambridge University Press.
- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: "article name needed". Dictionary of Greek and Roman Biography and Mythology. (1870).
- Diogenes Laërtius, Life of Arcesilaus, translated by Robert Drew Hicks (1925).
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் அர்செசிலௌசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Arcesilaus entry by Charles Brittain in the Stanford Encyclopedia of Philosophy
- "அர்செசிலௌசு". Internet Encyclopedia of Philosophy.