அமோனியம் பெரிக் சிட்ரேட்டு
Appearance
(NH4)5[Fe(C6H4O7)2]•2H2O வின் படிகக் கட்டமைப்பு[1]
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-டிரைகார்பாக்சிலேட்டு, அமோனியம் இரும்பு(3+) உப்பு
| |
வேறு பெயர்கள்
பெரிக் அமோனியம் சிட்ரேட்டு
அமோனியம் இரும்பு(III) சிட்ரேட்டு அமோனியம் பெரிக் சிட்ரேட்டு இரும்பு அமோனியம் சிட்ரேட்டு பெரிசெல்ட்சு | |
இனங்காட்டிகள் | |
1185-57-5 | |
ChEBI | CHEBI:31604 |
ChEMBL | ChEMBL1200460 |
EC number | 214-686-6 |
KEGG | D01644[2] |
பப்கெம் | 44134719 9881826 118984355 14457 |
பண்புகள் | |
C6H8O7⋅xFe3+⋅yNH3 | |
தோற்றம் | மஞ்சள் படிகங்கள் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் பெரிக் சிட்ரேட்டு (Ammonium ferric citrate) என்பது (NH4)5[Fe(C6H4O7)2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிக் சிட்ரேட்டுகள் தண்ணீரில் அவ்வளவு நன்றாகக் கரைவதில்லை என்ற நிலையில் அமோனியம் பெரிக் சிட்ரேட்டு தண்ணீரில் மிக நன்றாகக் கரைகிறது என்பது இச்சேர்மத்தின் தனித்தன்மையாகும்[1].
படிகக் கட்டமைப்பில் ஒவ்வொரு சிட்ரிக் அமில பகுதிக்கூறும் நான்கு புரோட்டான்களை இழக்கின்றன. புரோட்டன் நீக்கமடைந்த ஐதராக்சில் குழுக்கள் நான்கு கார்பாக்சிலேட்டு குழுக்களுடன் சேர்ந்து ஈந்தணைவிகளாகச் செயல்படுகின்றன. இரண்டு கார்பாக்சிலேட்டு குழுக்கள் பெரிக் அயனியுடன் ஒருங்கிணைவு கொள்வதில்லை.
பயன்கள்
[தொகு]அமோனியம் பெரிக் சிட்ரேட்டு பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டதாக உள்ளது.
- ஓர் உணவுசேர் பொருளாகவும் அமிலத்தன்மை முறைப்படுத்தியாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய எண் 381 எனவும் இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இசுக்காட்லாந்து நாட்டில் ஒரு வகை மதுபானத்தில் இதை பயன்படுத்துகிறார்கள்.
- தண்ணீரை தூய்மையாக்கும் செயல்முறையில் இது பயன்படுகிறது.
- தங்கம் வெள்ளி போன்ற குறைவான செயல்திறன் கொண்ட உலோக உப்புகளின் ஒடுக்கம் முகவராக செயல்படுகிறது.
- பொட்டாசியம் பெரிசயனைடுடன் சேர்க்கப்பட்டு புகைப்படத் தொழிலில் இதை பயன்படுத்துகிறார்கள்.
- நுண்ணுயிரி வளர்சிதை மாற்றத்தில் ஐதரசன் சல்பைடு உற்பத்தியைத் தீர்மானிக்க அமோனியம் பெரிக் சிட்ரேட்டு பயன்படுகிறது.
- மருத்துவப்படிமவியலில் அம்மோனியம் பெரிக் சிட்ரேட் வேருபடுத்திக் காட்டும் ஓர் ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது.
- இரத்த செல்கள் உற்பத்திக்கு உதவும் ஒரு ஊட்டச்சத்தாகவும் இது பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Matzapetakis, M.; Raptopoulou, C. P.; Tsohos, A.; Papaefthymiou, V.; Moon, N.; Salifoglou, A. (1998). "Synthesis, Spectroscopic and Structural Characterization of the First Mononuclear, Water Soluble Iron−Citrate Complex, (NH4)5Fe(C6H4O7)2•2H2O". J. Am. Chem. Soc. 120 (50): 13266–13267. doi:10.1021/ja9807035.
- ↑ "KEGG DRUG: Ferric ammonium citrate".