உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க வானவியல் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க வானவியல் கழகம்
உருவாக்கம்1899
வகைஅரசு சாரா அமைப்பு
நோக்கம்மனித குலத்திற்கு பிரபஞ்சத்தினைப் பற்றிய புரிதலை உருவாக்குதல்.
தலைமையகம்வாசிங்டன், டி. சி.
உறுப்பினர்கள்
7,000
President
மேகன் டோனேஹ் (Megan Donahue)
வலைத்தளம்https://aas.org/
முன்னாள் பெயர்
அமெரிக வானியல் மற்றும் வான் இயற்பியல் கழகம்

அமெரிக்க வானவியல் கழகம் (American Astronomical Society -AAS) என்பது வானியல் நிபுணர்களும், வானியல் ஆர்வமுடைய தனி நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கழகம் ஆகும். இஃது அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது. இதன் முக்கியப் பணிகளாக வானியல் துறையின் மேம்பாடுகளையும், வானியலோடு தொடர்புடைய அறிவியல் துறைகளின் மேம்பாடுகளையும் வெளிப்படுத்துவது ஆகும். மேலும் இதன் துணைப்பணிகளாக இதன் உறுப்பினர்களுக்கு அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பைப் பெறும் நடவடிக்கையினையும் மேலும் வானியல் கல்வியையும் வழங்குகிறது. தற்போது பிரபஞ்சத்தினைப் பற்றிய புரிதலை மனிதக் குலத்திற்கு ஏற்படுத்துகிறது.

வரலாறு

[தொகு]

இக்கழகம் 1899 ஆம் ஆண்டில் ஜார்ஜ் எலிரி ஹேல் என்பவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் சட்டதிட்டங்கள் ஹேல், ஜார்ஜ் கம்ஸ்டாக், எட்வர்ட் மார்லே, சைமன் நியூகோம்ப் மற்றும் எட்வர்ட் சார்லஸ் பிக்கரிங் ஆகியோரால் எழுதப்பட்டது. இவர்களும் மேலும் நால்வரும் இக்கழகத்தின் நிருவாகக் குழுவில் முதலில் இருந்தனர். இதன் முதல் தலைவராக சைமன் நியூகோம்ப் இருந்தார். இதன் தொடக்ககால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆகும். 1915 ஆம் ஆண்டிற்கு முன்னால் இக்கழகத்தின் பெயர் அமெரிக வானியல் மற்றும் வான் இயற்பியல் கழகம் (Astronomical and Astrophysical Society of America) என இருந்தது.[1]

தற்போது இதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 7,000 ற்கும் அதிகமாகும். மேலும் இஃது ஆறு பிரிவுகளையும் கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்களில் இயற்பியலாளர்கள், கண்தவியலாளர்கள், நிலவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_வானவியல்_கழகம்&oldid=2919262" இலிருந்து மீள்விக்கப்பட்டது