உள்ளடக்கத்துக்குச் செல்

அனுராதா பிசுவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதா பிசுவால்
Anuradha Biswal
தனித் தகவல்கள்
முழுப் பெயர்அனுராதா பிசுவால்
தேசியம் இந்தியா
பிறந்த நாள்1 சனவரி 1975 (1975-01-01) (அகவை 49)
பிறந்த இடம்ஒடிசா, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுஓட்டம்
நிகழ்வு(கள்)100 மீட்டர் தடைதாண்டுதல்

அனுராதா பிசுவால் (Anuradha Biswal) ஓர் இந்திய தடகள விளையாட்டு வீர்ர் ஆவார்.. இவர் 1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியில் பிறந்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் வல்லமை பெற்றிருந்தார். 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியின் அப்போதைய தேசிய சாதனையான 13.38 வினாடிகள் இவருக்குச் சொந்தமானதாகும்[1]. 2002 ஆம் ஆண்டு ஆகத்து 26 இல் அனுராதா இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். தில்லி வளர்ச்சி கழக-இராசா பாலேந்திர சிங் சுழற்சி போட்டிகள் தில்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றபோது இச்சாதனை அவரால் நிகழ்த்தப்பட்டது[2]. 2000 ஆம் ஆண்டு யாகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் பட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம்[3] வென்று இவர் நிகழ்த்திய 13.40 வினாடிகள் என்ற தேசிய சாதனையை இவரே முறியடித்தார்[4]. ஒடிசாவின் புவனேசுவரத்திலுள்ள தேசிய அலுமினியம் நிறுவனத்தில் அனுராதா பிசுவால் பணிபுரிகிறார்.

சாதனைகள்

[தொகு]
ஆண்டு போட்டி இடம் நிலை குறிப்புகள்
பிரதிநிதியாக  இந்தியா
2000 ஆசிய சாம்பியன் பட்டம் யாகர்த்தா, இந்தோனேசியா 3 ஆவது 100மீ தைடதாண்டுதல்
2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு, இலங்கை முதலிடம் 100மீ தடை தாண்டுதல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Official Website of Athletics Federation of India: NATIONAL RECORDS as on 21.3.2009". Athletics Federation of INDIA. Archived from the original on 2009-08-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Anuradha sets National mark". தி இந்து. 2002-08-26 இம் மூலத்தில் இருந்து 2018-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224233144/https://www.thehindu.com/2002/08/27/stories/2002082705202100.htm. பார்த்த நாள்: 2009-10-16. 
  3. "Asian Championships". gbrathletics.com. பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
  4. "Rachita Mistry, Anuradha Biswal corner day's honours". தி இந்து. 2000-07-31 இம் மூலத்தில் இருந்து 25 November 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091125021132/http://www.hinduonnet.com/thehindu/2000/07/31/stories/07310111.htm. பார்த்த நாள்: 2009-10-16. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_பிசுவால்&oldid=3586051" இலிருந்து மீள்விக்கப்பட்டது