அனிதா கோச்சிரன்
அனிதா எல். கோச்சிரன் | |
---|---|
பிறப்பு | நியூயார்க், நியூயார்க் |
வாழிடம் | டெக்சாசு |
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
துறை | வானியல் |
பணியிடங்கள் | ஆசுட்டீன் டெக்சாசு பலகலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கார்னெல் பல்கலைக்கழகம், ஆசுட்டீன் டெக்சாசு பலகலைக்கழகம், (முதுபட்டங்களும் முனைவர் பட்டமும்.) |
அனிதா எல். கோச்சிரன் (Anita L. Cochran) ஓர் வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆசுட்டீன் டெக்சாசு பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார்.[1] இவர் மெக்டொனால்டு வான்காணக ஆராய்ச்சி உதவி இயக்குநரும் ஆவார்.[2] இவர் சூரியக் குடும்பத் தொடக்கநிலை வான்பொருள்களின் ஆய்விலும் வால்வெள்ளிகளின் உட்கூறுகளின் ஆய்விலும் கவனம் குவித்துள்ளார்.[3]
இளமையும் கல்வியும்
[தொகு]கோச்சிரன் நியூயார்க் நகரில் பிறந்தார்.[4] and raised on Long Island.[5] இவர் 1976 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்ரார். இன்னர் இவர் ஆசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானியலில்1979 இல் முதுவர் பட்டமும் 1982 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர் தன் வானியல் வாழ்க்கையில் பல தலைமைப் பாத்திரங்களை வகித்துள்ளார். இவர் 1995 முதல் 1996 வரை அமெரிக்க வானியல் கழகத்தின் கோள் அறிவியல் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.[6] இவர் அப்பிரிவின் குழு உறுப்பினரக 1989 முதல் 1992 வரை இருந்துள்ளார்.[7] இவர் தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் பல குழுக்களில் பணியாற்றி உள்ளார்,[1][8] இவற்றில் கோள்கள், நிலாக்கள் தேட்டக் குழுவும் அடங்கும்.[9] (COMPLEX). இவர் வால்வெள்ளிக் கருப் பயண அல்லது காண்டூர் (CONTOUR) இலக்குத்திட்டத்தின் இணை ஆய்வாளரும்.[4][10] நாசாவின் வால்வெள்ளி சுற்றும் சிறுகோள் பறப்புத் திட்டப் படிமப் பதிவுக் குழுவின் உறுப்பினரும் ஆவார்.[1]
இவர் இப்போது பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆவார்[11] மேலும், தேசிய ஒளியியல்சார் வானியல் காணக உறுப்பினரும் ஆவார்.[1]
சொந்த வாழ்க்கை
[தொகு]அனிதா கோச்சிரன் தன்னுடன் வானியலாளராகப் பணிபுரிந்த பில் கோச்சிரனை மணந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "UT Experts : University Communications : The University of Texas at Austin". experts.utexas.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ "University of Texas at Austin Department of Astronomy".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 3.0 3.1 "Anita Cochran - Astronomy". www.as.utexas.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ 4.0 4.1 4.2 "Cochran | McDonald Observatory". mcdonaldobservatory.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ "Anita Cochran | People". NASA Solar System Exploration. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Past DPS Officers | Division for Planetary Sciences". dps.aas.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ "Past DPS Committee Members | Division for Planetary Sciences". dps.aas.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ Front Matter | A Scientific Assessment of a New Technology Orbital Telescope | The National Academies Press (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.17226/9295.
- ↑ APPENDIX: PARTICIPATING DISCIPLINE COMMITTEES | Scientific Opportunities in the Human Exploration of Space | The National Academies Press (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.17226/9188.
- ↑ "Anita Cochran: Build Collaborations" (in en-US). Women in Planetary Science: Female Scientists on Careers, Research, Space Science, and Work/Life Balance. 2010-09-28. https://womeninplanetaryscience.wordpress.com/2010/09/28/anita-cochran/.
- ↑ "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.