அண்ணப் புற்றுநோய்
அண்ணப் புற்றுநோய் (palate cancer) என்பது வாயின் கூரை போன்ற மேற்பகுதியில் தோன்றும் புற்றுநோயாகும்.[1] கூரைபோன்ற அண்ணத்தின் முன் பகுதி கடின அண்ணம் என்றும் பின்பக்கத்திலும் தொண்டையை அடுத்தும் காணப்படும் பகுதி மென் அண்ணம் என்றும் அறியப்படுகின்றன. இவ்விரு அண்ணப்பகுதியிலும் புற்றுநோய் வரலாம். அண்ணப் புற்றுநோய் அரிதாகவே காணப்படுகிறது.
வலியுடன் காணப்படும் கட்டி, திசுத்திரட்சி, வாய்புண், உணவு விழுங்குவதில் சிரமம், இரவு நேரங்களில் அதிக வியர்வை, நிறை குறைதல் போன்றவை சில அறிகுறிகளாகும் வெள்ளைத் படலம் (Leukoplakia) ஒரு மிக முக்கிய ஆரம்ப அறிகுறியாகும். கழுத்தில் கட்டி ஊநீர் சுரப்பியில் நோய் உள்ளதைக் காட்டும். இவ்வறிகுறிகள் பிற நோய்களினாலும் தோன்றக்கூடும்.
புற்றை உறுதி செய்ய மருத்துவர் திசு பரிசோதனை செய்வார்கள். கணினி தளகதிர் படம், காந்த ஒத்ததிர்வு படம், பாசிட்ரான் உமிழ்வு தளக்கதிர்படம் முதலியன மிகவும் உதவும். ஆரம்பநிலையிலேயே மருத்துவம் மேற்கொண்டால் புற்றை குணப்படுத்த முடியும். கதிர் மருத்துவம் மற்றும் வேதி மருத்துவம் பயனளிக்கும். அணமைக்கதிர் மருத்துவம் (Brachy therapy) சிறந்த பலனைக் கொடுக்கிறது.
ஊநீர் சுரப்பிகளுக்குப் பரவிய நிலையில் அறுவை மருத்துவம் மேற்கொள்ளற்படுகிறது. சில சிக்கலான நிலையில் மேல்தாடையினை அறுவை மருத்துவம் மூலம் அகற்ற வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இந்நோய்க்கு 90% புகையிலையே காரணம். புகையிலையினை எந்த வகையில் பயன் படுத்தினாலும் அது காரணமாகும். மதுவும் ஒரு துணை காரணமாகும்.
எல்லா புற்றையும் போலாரம்ப நிலையிலேயே கண்டு மருத்துவம் மேற்கொண்டால் நல்ல குணம் பெறலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.cedars-sinai.org/health-library/diseases-and-conditions/p/palate-cancer.html.
{{cite web}}
: Missing or empty|title=
(help)