பயனர்:Xaviour scientist

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

XAVIOUR'S- LAWS OF MOTION:- (சேவியர் -இயக்க விதிகள்):- நோக்கம்:-

    என்னுடைய இந்த இயக்க விதிகளானவை, இயற்கையில் நம்மைச் சுற்றி நடைப்பெறும் இயக்கங்களின் உண்மையான காரணத்தை விளக்கப் பயன்படுகின்றன. மேலும், என்னுடைய இவ்விதிகள் "நியூட்டனின் மூன்றாம் விதிக்கு" மாற்றாகவும், சில இடங்களில் "நியூட்டனின் மூன்றாம் விதியை" விட இயக்கங்களின் தன்மையை துல்லியமாக விளக்கும் வகையிலும் அமைந்துள்ளன. மேலும், என்னுடைய இவ்வியக்க விதிகள், 'செயல் மற்றும் எதிர்ச்செயல்' நடப்பெறும் இடங்களில், செயலுக்கு எதிர்ச்செயல் ஏன் நடைப்பெறுகிறது என்பதையும்; 'செயல்-எதிர்ச்செயலுக்குப்' பின் உண்டாகும்   இயக்கங்கள் ஏன் உண்டாகின்றன என்பதன் காரணங்களையும் மிக தெளிவாக விளக்குகின்றன. மேலும், இவ்விதிகள், "நியூட்டனின் மூன்றாம் விதியானது" விளக்க தவறிய அல்லது தவறாக விளக்க கூடிய அனைத்து இயக்கங்களுக்கும் மாற்றாக அமைவதோடு, அவற்றை சரியாக விளக்கும் வகையில் அமைந்துள்ளன. 

சேவியர் இயக்க விதிகள் (XAVIOUR'S- LAWS OF MOTION):- சேவியர்- முதல் இயக்க விதி (XAVIOUR'S- FIRST LAW OF MOTION):-

                   "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்."
                                                            Foo = ma                   ( Foo - force on the object )
                      
                           

உதாரணங்கள்:-

    1.மோதல் தொடர்புடைய அனைத்து இயக்கங்கள்.
    2.வீசி எறியப்படும் அனைத்துப் பொருட்களின் இயக்கம்.
    3.துப்பாக்கியின் இயக்கம்.
    4.படகு மற்றும் கப்பலின் இயக்கம்.
    5.படகிலிருந்து குதிக்கும் நபரின் இயக்கம்.
    6.நீச்சல் வீரரின் இயக்கம். 
    7.சுவற்றில் ஆணி அடிதல் போன்றவை.

சேவியர்- இரண்டாம் இயக்க விதி (XAVIOUR'S- SECOND LAW OF MOTION):-

             "விசையானது பொருளிலிருந்து வெளியிடப்பட்டால், விசைக்கு எதிர் திசையில் பொருள் இயங்கும்."
                             Fbo = - ma                   ( Fbo - force by the object )
    ..( - ) குறியானது செயலானது, விசைக்கு எதிர் திசையில் நடப்பதைக் குறிக்கிறது.
      
        

உதாரணங்கள்:-

    1.இராக்கெட்டின் இயக்கம்.
    2.பறவைகள் பறக்கும் இயக்கம்.
    3.விமானம்,ஹெலிக்காப்டர் மற்றும் ஏவுகனை போன்றவற்றின் இயக்கம்.
    4.ஊதப்பட்ட பலூனிலிருந்து காற்று வெளியேறும் போது, அந்த பலூனின்     இயக்கம்.

விளக்கம்:-

           உலகில் நடைப்பெறும் அனைத்து இயக்கங்களுக்கும் பொதுவான ஒரே காரணம் விசையாகும். விசை இல்லாமல் எந்த இயக்கமும் நடைப்பெற முடியாது. இத்தகைய இயக்கங்களை, விசையின் வலிமை மற்றும் அவ்விசை செயல்படும் பொருள் அல்லது பரப்பின் நிலைப்புத் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மேலே கூறப்பட்டுள்ளதைப் போன்று இரண்டு வகையாக (இரண்டு இயக்க விதியாக) நான் பிரித்துள்ளேன். அதாவது ஓர் இயக்கம் எதனை அடிப்படையாக கொண்டு நடைப்பெறுகிறது என்பதை கொண்டு அவற்றை அவ்வாறு இரண்டாகப் பிரித்துள்ளேன்.
          சேவியர்-முதல் இயக்க விதியானது, குறிப்பிட்ட அளவு விசையானது புறத்திலிருந்து ஒரு பொருளின் மீது செயல்படும் போது நடைப்பெறும் இயக்கத்தையும்; சேவியர்-இரண்டாம் இயக்க விதியானது, குறிப்பிட்ட அளவு விசையானது, ஓர் பரப்பு அல்லது பொருளின் உள்ளிருந்து வெளிப்படுவதால் நடைப்பெறும் இயக்கத்தையும் தெளிவாக விளக்குகின்றன. இனி அதனைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

சேவியர்-முதல் இயக்க விதியின் விளக்கம்:-

           என்னுடைய முதல் இயக்க விதியின் படி,  "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்." அதாவது குறிப்பிட்ட அளவு விசையை, ஒரு பொருளின் மீது செயல் படுத்தினால், செயல்படும் விசையின் வாலிமைக்கேற்ப, அந்த விசை செயல்படும் அதே திசையிலேயே அந்த பொருளும் இயங்கும் அல்லது இயங்க முயற்சிக்கும்.

உதாரணங்கள் :- 1.கிரிக்கெட் பந்தின் (CRICKET BALL) இயக்கம்.

           கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்தை வீசுபவர், தன் கையிலிருந்து விசையை பந்தின் மீது செயல்படுத்துவதால், அப்பந்தானது, அதை வீசுபவர் அதற்கு கொடுத்த விசையின் அதே திசையிலேயே இயங்கி, முன்னோக்கிச் செல்கிறது. இதைப் போலவே பந்தை மட்டையினால் அடிக்கும் நபரும், தன் கையிலிருந்து விசையை, மட்டயின் மூலம் பந்தின் மீது செயல்படுத்துவதால், அப்பந்தானது, அதை அடிப்பவர் மட்டையின் மூலம் அதற்கு கொடுத்த விசையின் அதே திசையிலேயே இயங்கி, முன்னோக்கிச் செல்கிறது.  அதாவது, "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்"  என்ற என்னுடைய முதல் இயக்க விதியின் (சேவியர்-முதல் இயக்க விதி) அடிப்படையில் இங்கு இயக்கம் நடைப்பெறுகிறது.
                           

2.இரண்டு கோளங்கள் மோதிக்கொள்ளும் இயக்கம்.

           A மற்றும் B என்ற இரண்டு கோளங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் போது, ஒவ்வொரு கோளமும் விசையை அடுத்த கோளத்தின் மீது செயல்படுத்துவதால், மோதலுக்குப் பின், A-யின் தொடக்க திசையில் B-யும்; B-யின் தொடக்க திசையில் A-யும் இயங்குகின்றன. அதாவது, கோளம் A-வானது B-யின் மீது செயல்படுத்திய விசையின் அதே திசையில் B-யும்; கோளம் B-யானது A-யின் மீது செயல்படுத்திய விசையின் அதே தியசையில் A-யும் இயங்குகின்றன.  ஏனெனில், "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்"  என்ற என்னுடைய முதல் இயக்க விதியின் (சேவியர்-முதல் இயக்க விதி)  அடிப்படையில், A,B என்ற ஒவ்வொரு கோளமும் அடுத்த கோளத்தின் மீது செயல்படுத்தும் விசையின் திசையில் இயங்குவதால் இவ்வாறான இயக்கம் நடைப்பெறுகிறது.
       

3.கயிறினால் (Rope) கட்டி இழுக்கப்படும் பொருளின் இயக்கம்.

           கயிறினால் கட்டப்பட்ட ஒரு பொருளை, கயிற்றைப் பிடித்து இழுக்கும் போது, அந்த பொருளானது நம்மை நோக்கி நகர்ந்து வரும். காரணம் நாம் பொருளின் மீது செயல்படுத்தும் விசையின் திசையானது, பொருளிலிருந்து நம்மை நோக்கிய திசையில் இருப்பதால், விசையின் திசையில் பொருள் இயங்கி, நம்மை நோக்கி நகர்கிறது. ஏனெனில், "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்"  என்ற என்னுடைய முதல் இயக்க விதியின் (சேவியர்-முதல் இயக்க விதி)  அடிப்படையில் இங்கு இயக்கம்  நடைப்பெறுகிறது.
                  

4.நம்மால் தரையில் நடக்க முடிவதற்கான காரணம்.

            நாம் நடக்கும் போது நம்முடைய காலானது, தரையின் மீது குறிப்பிட்ட அளவு விசையை செயல்படுத்தி, தரையை (பூமியை) அது செயல்படுத்தும் விசையின் திசையில் நகர்த்த முயற்சிக்கும். ஆனால், பூமியானது அளவில் மிகப் பெரியதாக இருப்பதாலும், பூமியை நகர்த்தும் அளவிற்கு நம் கால் செயல்படுத்திய விசையின் வலிமை இல்லாததன் காரணத்தாலும், பூமியானது நகர்வதில்லை. மாறாக, நாம் நடக்கும் போது, தரையானது நம் காலின் மீது செயல்படுத்தும், சமமான எதிர் விசையின் காரணமாக, அவ்வெதிர் விசையின் திசையில் காலனது முன்னோக்கி நகரும். அதாவது, "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்"  என்ற என்னுடைய முதல் இயக்க விதியின் (சேவியர்-முதல் இயக்க விதி)  அடிப்படையில், காலானது தரையின் மீது செயல்படுத்திய விசையின் திசையில், தரை இயங்க முயற்சிக்கிறது; தரை காலின் மீது செயல்படுத்தும் விசையின் திசையில் கால் இயங்குகிறது.
                  
5.உருளையான (CYLINDER) பொருளின் மீது நடக்கும் நபரின் இயக்கம்.
           ஓர் உருளையான பொருளின் மீது ஏறி ஒரு நபர் நடக்க முயற்சிக்கும் போது, உருளையானது பின்னோக்கியும், அந்த நபர் முன்னோக்கியும் நகர்வதைக் காணலாம். ஏனெனில், அந்த நபர் உருளையின் மீது பின்னோக்கிய விசையை செயல்படுத்துவதால், அப்பின்னோக்கிய விசையின் திசையிலேயே பொருளும்  (உருளை) பின்னோக்கி  இயங்குகிறது; இதைப் போலவே, உருளையானது அந்த நபரின் மீது, முன்னோக்கிய விசையை செயல்படுத்துவதால், அதே முன்னோக்கிய விசையின் திசையிலேயே அந்த நபரும் முன்னோக்கி இயங்குகிறார். காரணம், "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்"  என்ற என்னுடைய முதல் இயக்க விதியின் (சேவியர்-முதல் இயக்க விதி)  அடிப்படையில் இங்கு இரண்டு இயக்கங்கள் ஒரே இடத்தில்  நடைப்பெறுகின்றன.
                               

6.நீரில் மிதக்கும் படகிலிருந்து (BOAT) குதிக்கும் நபரின் இயக்கம்.

          நீரில் மிதக்கும் படகிலிருந்து ஒரு நபர் நீருக்குள் குதிக்க  முயற்சிக்கும் போது, படகானது பின்னோக்கியும், அந்த நபர் முன்னோக்கியும் நகர்வதைக் காணலாம். ஏனெனில், அந்த நபர் படகின் மீது பின்னோக்கிய விசையை செயல்படுத்துவதால், அப்பின்னோக்கிய விசையின் திசையிலேயே, பொருளும், நீர் பரப்பில் பின்னோக்கி (படகு)  இயங்குகிறது; இதைப் போலவே, படகானது அந்த நபரின் மீது, முன்னோக்கிய விசையை செயல்படுத்துவதால், அதே முன்னோக்கிய விசையின் திசையிலேயே, அந்த நபரும், முன்னோக்கி இயங்கி நீரில் குதிக்கிறார். காரணம், "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்"  என்ற என்னுடைய முதல் இயக்க விதியின் (சேவியர்-முதல் இயக்க விதி)  அடிப்படையில் இங்கு இரண்டு இயக்கங்கள் ஒரே இடத்தில்  நடைப்பெறுகின்றன.
                       

7.துப்பாக்கி (GUN) மற்றும் பீரக்கியின் (CANNON) இயக்கம்.

           துப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவைகளை இயக்கும் போது, துப்பாக்கியின் உள் பகுதியில், துப்பாக்கிக்கும், தோட்டாவிற்கும் (BULLET) இடையில் வைக்கப்பட்டுள்ள வெடி மருந்தில் (Gun powder) வெடிப்பு (EXPLOSION)  நிகழ்கிறது.  இந்த வெடிப்பின் காரணமாக உண்டான வலிமையான விசையானது, வெடிப்பை மையமாகக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் செயல்படுகிறது. குறிப்பாக, தோட்டா முன்னோக்கி இயங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழல் பகுதியும், தோட்டா வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பின்னாலும் வெற்றிடம் இருப்பதால், பக்கவாட்டைக் காட்டிலும், விசையானது, வெடிப்பை மையமாகக் கொண்டு முன்னும், பின்னும் மிக வலிமையாக செயல்படுகிறது. இதனால், பின்னோக்கி செயல்படும் விசையின் திசையில் துப்பாக்கியும்; முன்னோக்கி செயல்படும் விசையின் திசையில் தோட்டாவும், வெடிப்பை மையமாகக் கொண்டு எதிரெதிர் திசையில் இயங்குகின்றன. இதுவே, துப்பாக்கியின் செயல்பாட்டில் துப்பாக்கி முன்னோக்கியும், தோட்டா பின்னோக்கியும் இயங்குவதற்கான உண்மையான காரணம். அதாவது "விசையானது பொருளின் மீது செயல்படுத்தப்பட்டால், விசையின் திசையில் பொருள் இயங்கும்"  என்ற என்னுடைய முதல் இயக்க விதியின் (சேவியர்-முதல் இயக்க விதி)  அடிப்படையில் இங்கு இரண்டு இயக்கங்கள் ஒரே இடத்தில் நடைப்பெறுகின்றன.
        

சேவியர்- இரண்டாம் இயக்க விதியின் விளக்கம்:-

           என்னுடைய இரண்டாம் இயக்க விதியின் படி,  "விசையானது பொருளிலிருந்து வெளியிடப்பட்டால்,  விசைக்கு எதிர் திசையில் பொருள் இயங்கும்." அதாவது குறிப்பிட்ட அளவு விசையானது, ஒரு பொருளின் உள்ளே இருந்து வெளிப்படும் போது, வெளிப்படும் அந்த விசையின் வலிமைக்கேற்ப, விசை செயல்படும் திசைக்கு எதிர் திசையில் அந்த பொருள் இயங்கும் அல்லது இயங்க முயற்சிக்கும்.

உதாரணங்கள்: 1.இராக்கெட்டின் (Rocket) இயக்கம்.

           இராக்கெட் என்பது ஒற்றைப் பொருள்.  எரிப்பொருளானது அதனுள் நிரப்பப் பட்டுள்ளது. இராக்கெட் செயல்படத் தொடங்கும் போது, அதன் அடிப்பகுதியிலிருந்து, அதி வேகமான விசையானது வெளிப்படுகிறது. என்னுடைய இரண்டாம் இயக்க விதியின் படி, "விசையானது பொருளிலிருந்து வெளியிடப்பட்டால்,  விசைக்கு எதிர் திசையில் பொருள் இயங்கும்" என்பதன் காரணத்தால், இராக்கெட்டிலிருந்து வெளிப்படும் அதிவேக கீழ் நோக்கிய விசைக்கு எதிரான திசையில் இராக்கெட் இயங்கி, மேலே செல்கிறது. இங்கு, சேவியர்- இரண்டாம் இயக்க விதி செயல்படுகிறது. இதுவே, இராக்கெட்டின் இயக்கத்திற்கான உண்மையான காரணம்.
                     

2.விமானம் (Aeroplane) மற்றும் ஹெலிக்காப்டரின் (Helicopter) இயக்கங்கள்.

           விமானம், ஹெலிக்காப்டர் போன்றவைகள் இராக்கெட்டின் செயல்பாட்டைப் போன்ற இயக்கத்தையே மேற்கொள்கின்றன. அதாவது, விமானமானது தன் இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள, காற்றை உறிஞ்சும் அமைப்பின் மூலம், காற்றை உறிஞ்சி, அதை அதிவேகமாக பின்னோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு பின்னோக்கி தள்ளுவதால், பின்னோக்கிய வலிமையான விசையை விமானமானது செயல்படுத்துகிறது. என்னுடைய இரண்டாம் இயக்க விதியின் படி, "விசையானது பொருளிலிருந்து வெளியிடப்பட்டால்,  விசைக்கு எதிர் திசையில் பொருள் இயங்கும்"  என்பதால், விமானம் செயல்படுத்தும் விசைக்கு எதிரான திசையில் அது இயங்குகிறது. ஹெலிக்காப்ட்டர் இயங்கும் போது, காற்றை கீழ் நோக்கி அதிக விசையுடன் செயல்படுத்துவதால், விசைக்கு எதிரான திசையில் அது இயங்கி, மேல் நோக்கி செல்கிறது. இங்கும் "சேவியர்- இரண்டாம் விதியின்" காரணத்தால் தான் இயக்கம் நடைப்பெறுகிறது.            
      

3.பறக்கும் பறவையின் (Bird) இயக்கம்.

           பறவைகள் பறக்கும் போது தன்னுடைய இறக்கைகளை வேகமாக அசைக்கின்றன. அவ்வாறு பறவைகள் மிக திறமையாக, மேலும், கீழும் இறக்கைகளை  அசைப்பதனால் கீழ்  நோக்கிய விசையை செயல்படுத்துகின்றன. சேவியர்- இரண்டாம் இயக்க விதியின் படி, "விசையானது பொருளிலிருந்து வெளியிடப்பட்டால்,  விசைக்கு எதிர் திசையில் பொருள் இயங்கும்" என்பதால், பறவையானது செயல்படுத்தும் கீழ் நோக்கிய விசைக்கு எதிர் திசையில் பறவை இயங்கி, மேல் நோக்கி செல்கிறது. இதே போல, பறவையானது பின்னோக்கி விசையயை செயலபடுத்தும் போது, முன்னோக்கி செல்லும் காரணம் "சேவியர்- இரண்டாம் இயக்க விதியின் படி" பறவையின் இயக்கம் அமைந்துள்ளது.
      


நியூட்டனின் 3-ம் விதிக்கும், சேவியர்- இயக்க விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு:- நியூட்டனின் 3இம் விதி கூறுவது: 1.இயக்கங்கள் ஒரே காரணத்தால் (செயலுக்கு, எதிர்ச்செயல்) நடைப்பெறுவதாக கூறுகிறது. 2.செயலுக்கு, எதிர்ச்செயல் இருக்கும் என்பதை மட்டும் தான் கூறுகிறது. அந்த எதிச்செயலினால் நடைப்பெறும் இயக்கத்தினைப் பற்றி எதுவும் கூறவில்லை. 3.இரண்டு பொருட்கள் ஒன்றன் மீது ஒன்று விசையை செயல்படுத்துவதால் நடைபெறும் இயக்கங்களையும்; ஒரே ஒரு பொருள் தனியாக இயங்கும் இயக்கத்தையும் ஒரே பார்வையிலிருந்து, பொதுவான வடிவில், இரண்டும் ஒன்றைப் போன்று விளக்குகிறது. 4.இயக்கமானது, ஒரு பொருளின் மீது விசை செயல்படுத்தப் படுவதால் நடைப்பெறுகிறதா? அல்லது விசையானது பொருளிலிருந்து வெளியிடப்படுவதால் இயக்கம் நடைப்பெறுகிறதா? என்பதை பிரித்து விளக்கவில்லை. 5.சூத்திரம்: F = - F

சேவியர்- இயக்க விதிகள் கூறுவது: 1.இயக்கங்கள் இரண்டு காரணத்தால் நடைப்பெறுகின்றன. 2.செயலுக்கு எதிர்ச்செயல் ஏன் நடைப்பெறுகின்றன என்பதோடு கூட அந்த எதிச்செயலினால் நடைப்பெறும் இயக்கத்தின் தன்மையையும் விளக்குகின்றன. 3. இரண்டு பொருட்கள் ஒன்றன் மீது ஒன்று விசையை செயல்படுத்துவதால் நடைபெறும் இயக்கங்களையும்; ஒரே ஒரு பொருள் தனியாக, தன் உள்ளிருந்து விசையை வெளியிட்டு இயங்கும் இயக்கத்தையும், அவை இயங்கும் காரணத்தின் அடிப்படையில் தனித்தனியாக பிரித்து, தெளிவாக விளக்குகின்றன. 4.இயக்கமானது, ஒரு பொருளின் மீது விசை செயல்படுத்தப் படுவதால் நடைப்பெறுகிறதா? அல்லது விசையானது பொருளிலிருந்து வெளியிடப்படுவதால் இயக்கம் நடைப்பெறுகிறதா? என்பதையும் பிரித்து விளக்குகிறது. 5.சூத்திரம்: Foo=ma; Fbo=-ma

நியூட்டனின் 3-ம் விதியின் முரண்பாடுகள்:-

           1.விசையை செயல்படுத்தவும், எதிர்விசையை செயல்படுத்தவுமென, தனித் தனியான இரண்டுப் பொருட்கள் சம்மந்தப்பட்ட இயக்கத்தில் நியூட்டனின் 3-ம் விதி செயல்படுகிறதெனில், ஒரே ஒரு பொருளின் இயக்கமான இராக்கெட் போன்றவற்றின் இயக்கத்தில் எப்படி நியூட்டனின் 3-ம் விதி செயல்பட முடியும்..?  இரண்டு பொருட்கள் தொடர்பில் இருக்கும் போது, ஒன்றன் மீது மற்றொன்று விசையையும், எதிர் விசையையும் செயல்படுத்தும். ஆனால், இராக்கெட்டின் இயக்கத்தில் இராக்கெட் எதன் மீதும் விசையை செயல்படுத்தவுமில்லை, எந்த பொருளும் இராக்கெட்டின் மீதும் எந்த விசையையும் செயல்படுத்தவில்லை. இப்படியிருக்க, எப்படி இராக்கெட்டின் இயக்கத்திற்கு நியூட்டனின் 3-ம விதியை காரணமாக கூற முடியும்..?
          2.ஒவ்வொரு செயலுக்கும், சமமான எதிர்ச்செயல் உண்டு எனக் கூறுகிறது. ஆனால், ஏன் அந்த எதிர்ச்செயல் நடைப்பெறுகிறது, அதற்கு என்ன காரணம் என்று விளக்கவில்லை.
           3.இராக்கெட் நியூட்டனின் 3-ம் விதிப் படி செயல்பட வேண்டுமெனில், அதன் இயக்கம் இவ்வாறு கீழே காட்டப் பட்டுள்ளதைப் போல தான் இருக்க வேண்டும்.
      

நியூட்டனின் 3-ம் விதியைப் பற்றிய என்னுடைய கருத்து அல்லது நிலைப்பாடு: 1.ஒவ்வொரு செயலுக்கும், சமமான எதிர்ச்செயல் நடைப்பெறுவது உண்மை தான். ஆனால், அங்கு கண்டிப்பாக குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித் தனியான பொருட்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்க வேண்டும். அப்போது தான் செயலும், எதிர்ச்செயலும் நடைப்பெறும். இவ்விடங்களில் தான் நியூட்டனின் 3-ம் விதியை பயன்படுத்த வேண்டும். 2.இராக்கெட்டின் செயல்பாட்டிற்கும், நியூட்டனின் 3-ம் விதிக்கும் எந்த தொடர்புமே கிடையாது. இராக்கெட்டின் செயல்பாடு என்பது ஒரே ஒரு பொருள் சம்மந்தப்பட்ட இயக்கம். ஆகையால், நியூட்டனின் 3-ம் விதியோடு இராக்கெட்டின் இயக்கத்தை ஒப்பிடக் கூடாது. 3.நியூட்டனின் 3-ம் விதி கூறுவது, "ஒவ்வொரு செயலுக்கும், சமமான எதிர்ச்செயல் உண்டு" என்பதை மட்டும் தான். அதாவது F=-F அவ்வளவு தான். அப்படியானால், அவ்விதி இயக்கத்தை பற்றியே கூறவில்லை. ஆனால், நாம் தற்போது, பிற காரணங்களினால் (சேவியர்- இயக்க விதிகளின் காரணத்தால்) நடைப்பெறும் இயக்கத்தை, நியூட்டனின் 3-ம் விதியோடு தொடர்பு படுத்தி, தவறாக புரிந்துக்கொண்டுள்ளோம். 4.எனவே, நியூட்டனின் 3-ம் விதியை, ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது மோதுதல் அல்லது தொடுதல் போன்ற இடங்களிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 5.தற்போது நியூட்டனின் 3-ம் விதிக்கு உதாரணமாகக் கூறப்படும், பல செயல்கள், உண்மையில் அவ்விதியின் அடிப்படையில் நடைப்பெறுவது இல்லை. அவை என்னுடைய சேவியர்- இயக்க விதிகளின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. இயக்கத்திற்கான இரண்டு காரணங்களை ஒன்றாக குழப்பியுள்ளது தான் நியூட்டனின் 3-ம் விதி சில செயல்களை தவறாக விளக்குவதற்கு காரணம். முடிவு:

           என்னுடைய இரண்டு இயக்க விதிகளும், இயக்கங்களின் தன்மையையும், அந்த இயக்கங்கள் நடைப்பெறுவதற்கான உண்மையான காரணத்தையும் துல்லியமாக விளக்குகின்றன. நியூட்டனின் 3-ம் விதியானது, தவறாக விளக்கக் கூடிய மற்றும் குழப்பியுள்ள இயக்கங்களையும் என்னுடைய இயக்க விதிகள் தெளிவாக விளக்குகின்றன. மேலும், நியூட்டனின் 3-ம் விதியை, மோதல் நடைப்பெறும் இடங்களில் உண்டாகும் விசை, எதிர் விசை உண்டாகும் என்பதை மட்டும் விளக்கவும்; சேவியர் இயக்க விதிகளை, அந்த விசை, எதிர் விசையினால் உண்டாகும் இயக்கங்களின் காரணத்தை விளக்கவும் பயபடுத்த வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Xaviour_scientist&oldid=2130401" இலிருந்து மீள்விக்கப்பட்டது