உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:VEDANTAM S

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்க்கை வரலாறு

கேரளா மாநிலம் கொல்லம் நகரில் திரு.சீனிவாச ஐயர் திருமதி.சுந்தரி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1933ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீவேதாந்தம்ஜி. இவரது தந்தை ஒரு தொழிலதிபர். அந்தக் காலத்திலேயே கொல்லத்தில் முந்திரிக்கொட்டை தொழிற்சாலை நடத்தி வந்தவர்.

வசதிபடைத்த குடும்பத்தில் ஸ்ரீவேதாந்தம்ஜி பிறந்திருந்தாலும் சிறுவயதிலேயே ஹிந்து மதத்தின் மீது அளவுகடந்த பற்றுதல் கொண்டிருந்தார். இதனால் தனது பள்ளிப்பருவத்திலேயே இயக்கப்பணிகளில் ஈடுபடலானார். அதாவது 1949ல் 16வயது பாலகனாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அடியெடுத்து வைத்து தனது சமுதாயப் பணியை துவக்கினார்.

மகனின் மதப்பற்றைக் கண்டு பெற்றோர் பெருமிதம் கொண்டனர். மற்ற பெற்றோரைப்போல கண்மூடித்தனமாக கண்டிக்காமல் அவருக்கு ஊக்கம் கொடுத்தனர். இதனால் பி.காம் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததோடு, இயக்கப் பணிகளையும் திறம்பட செய்து வந்தார். இயக்கப் பணிகளுக்காக எத்தனை காலம்தான் பெற்றோரின் கையையே எதிர்பார்ப்பது என்று எண்ணியவர், தனக்கென ஒரு பணியைத் தேடிக்கொண்டார். இவரது படிப்பிற்கு தகுந்த பணியை டி.வி.எஸ் நிறுவனம் வழங்கியது.

மாவட்டச் செயலாளர்

இதற்கிடையே 1957ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். திருநெல்வேலி மாவட்ட செயலாளராக ஸ்ரீகுருஜி கோல்வால்கரால் நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் ஹிந்து சமுதாயத்திற்காக அவர் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காது. குறிப்பாக மதமாற்றத்தை தடுப்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டார்.

விசுவ ஹிந்து பரிஷத்

இந்நிலையில் ஸ்ரீகுருஜி அவர்கள், அனைத்து ஹிந்து சமய சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஹிந்து சமுதாயத்தை பாதுகாக்கும் நோக்கில் மும்பையில் சாந்திபினி ஆஸ்ரமத்தில் சுவாமி சின்மயானந்தாவை தலைவராகக் கொண்டு விசுவ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பை 1964ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று துவக்கினார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தை துவக்கி வளர்க்கும் பொறுப்பு ஸ்ரீவேதாந்தம்ஜியிடம் 1970ல் ஒப்படைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VEDANTAM_S&oldid=1967411" இலிருந்து மீள்விக்கப்பட்டது