உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Sumigin Donald

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூத்துறை

சாதி, மத, மொழி பேதமின்றி முக்கடல் சங்கமிக்கும், தெய்வ புலவர் திருவள்ளுவர் பிறந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூத்துறை என்ற அழகிய பூத்துறை, அங்கு “எம்மதமும் சம்மதமே” என ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் வாழும் கிராமம். இரண்டு ஹிந்து கோயில்கள், இரண்டு முஸ்லீம் பள்ளி வாசல்கள், இரண்டு கிறிஸ்தவ தேவலையங்கள் இருக்கும் கிராமம். கடலும் ஆறும் அரை கிலோமீட்டர் தொலைவு அகலத்தில் இருக்கும் ஊரு. பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடும் ஒரே ஒரு புனிதர், அத்தோடு தலை வெட்டு திருவிழா என அவர் அநீதியை எதிர்த்து இறந்ததையும் கொண்டாடும், இறைமகன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த புனித ஸ்நாபக அருளப்பர் பாதுகாவலரை கொண்டது பூத்துறை கிராமம். கிழக்கே துறைமுகம் அமைந்துள்ள இரையுமென்துறையும், மேற்கே புனித யூதா கல்லூரி அமைந்துள்ள தூத்தூர் கிராமமும், வடக்கே சமத்துவபுரம் அமைந்துள்ள கலிங்கராஜபுரமும் சூழ்ந்திருக்கும் கிராமம். தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூத்துறை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sumigin_Donald&oldid=2947899" இலிருந்து மீள்விக்கப்பட்டது