பயனர்:Sheik Faisal

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தில் பிற தாய்மொழிகளான தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், செளராஸ்டிரா, இன்னும்சில....

பிறமொழி கல்வி நிலையங்கள்...

தமிழின அடிப்படை போராட்டம்....

நீதியின் அடிப்படையில் ஒன்றிணைவோம்......


மொழி என்பது நம் எண்ணங்களை பறிமாறிக்கொள்ளவும், கருத்துக்களை பறிமாறிக்கொள்ளவும், தகவல்களை பறிமாறிக்கொள்ளவும் பயன்படும் ஓர் அடிப்படை கருவியே மொழியாகும். ..


அத்தகைய மொழியில் மிக சிறந்தது தம் எண்ணங்களை தடங்கலற்று வெளிபடுத்த இயலும் அவரவர் தாய்மொழியே அவரவர்களுக்கு சிறந்ததாகும்.


இயற்கையாக தாய்மொழி என்பது இடத்தை பொறுத்தே வேறுபடுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் ஒரு குறிப்பிட்ட மொழியே அந்த பகுதி மக்களின் தாய்மொழியாக அமைந்துள்ளது.


ஆனால் குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட மொழியை தாய்மொழியாக கொண்ட மக்களில் சிலர் தங்களின் வாழ்வாதார தேவைக்காக பிற பகுதிக்கு இடம்பெயர்வது வழக்காமான ஒன்று தான்...


அப்படி இடம்பெயர்ந்தவர்கள் தங்களின் தாய்மொழியை வீட்டினுள்ளும், அந்நாட்டின் மொழியை வீட்டின் வெளியேவும் பேசுவதும் தான் நடைமுறை நிகழ்வு.


அப்படி இடம்பெயர்ந்து தமிழகத்திற்குள் வந்தவர்கள் தான் தெலுங்கு, உருது, செளராஸ்டிரா, மலையாளம் மற்றும் கன்னடம் இனனும் சில மொழி பேசுபவர்கள். ஆனால் இவர்கள் இன்றோ நேற்றோ தமிழகத்திற்குள் வந்தவர்களல்ல. பல தலைமுறைக்கு முன்பாக இங்கு அவர்களின் மூதாதையர்கள் வருகை புரிந்தனர். அந்த மூதாதையர்களின் இன்றைய வாரிசுகள் நம் மண்ணில் பிறந்தவர்கள்.


தமிழை தாய்மொழியாக கொண்ட நமக்கு நம்மண்ணில் எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை இந்த மண்ணில் பிறக்கும் வேற்று மொழி மக்களுக்கும் உண்டு என்பதுதான் நம் நாட்டின் அரசியல் அமைப்பின் அடிப்படை சித்தாந்தம். நீதியும் அதுதானே....


இன்று இங்கு வசிக்கும் பிற தாய்மொழி மக்கள் தாய்மொழியால் வேறுபட்டாலும், தாய்நாட்டால் நம்மோடு ஒன்றிவிடுகின்றனர்.


வேறொரு மொழிக்காரனை தமிழ்நாட்டு மண்ணின் மைந்தனாக நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விஷ கருத்துக்களை சில தீய சக்திகள் அரசியல் லாபத்திற்காக கூறிவருகின்றனர்.


ஆனால் ஒன்றை யோசித்து பாருங்கள் தமிழை தாய்மொழியாக கொண்ட எத்தனையோ மக்கள் அரேபியாவிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தமிழை கற்றுக்கொள்ள அந்நாட்டின் கல்வி நிலையங்கள் அனுமதியளிக்கிறது. அதனை நாமும் வரவேற்கிறோம்.


இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் பொழுது நாங்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று இலங்கை தமிழர்கள் போராடுகிறார்கள். இதனையும் நாம் ஆதரிக்கிறோம்..


பிற நாட்டின் தமிழர் ஆதரவை ஏற்றுக்கொண்டும், பிற நாட்டின் தமிழர் விரோதபோக்கை எதிர்த்துகொண்டும் இருக்கும் நாம். நம்மண்ணில் பிறந்து வாழும் பிற மொழி மக்களையும் நம்மண்ணின் மைந்தர்களாகதானே பார்க்க முடியும் .


ஆனால் சில சுயநலவாதிகள் அரசியல் லாபத்திற்காக மத அரசியல் போன்று மொழி அரசியலையும் உருவாக்கி வருகின்றனர். இந்த மண்ணின் மைந்தனை பார்த்து நீ உண்மை தமிழனா என்று கேள்வி கேட்டு பிரித்து பார்ப்பது என்பது சுயநலத்தின் கொடிய வெளிப்பாடே ஆகும்.


அதிலும் உருது பேசும் தமிழ் முஸ்லிம்களை தமிழர்கள் இல்லையென்று நேரிடையாகவே பேசி வருகிறார்கள் சமூக விரோதிகளான சில அரசியல்வாதிகள்.


உருது தமிழ்வாழ் மக்கள் அவர்களின் தாய்மொழியிலே கல்வி நிலையங்களை அமைக்கின்றனர், உருது மொழியில் கல்வி கற்கின்றனர் எனவே இவர்கள் மட்டும் இந்த மண்ணின் மைந்தர்கள் இல்லையென்று வாதிடுகின்றனர்.


ஆனால் உண்மை நிலை என்னவென்றால் தமிழகத்தில் தமிழிற்கு அடுத்ததாகப் அதிகமாக பேசப்படும் மொழி தெலுங்கு தான்.


உருது மொழியில் கல்வி கற்பவர்களை விட ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழியில் கல்வி கற்பவர்கள் தான் அதிகம்.


பிற மொழிகளில் தேர்வு எழுதுவது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் 47 வழக்குகள் போடப் பட்டிருந்தன. இதையடுத்து நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

“அதன்படி இந்த ஆண்டு 7 ஆயிரத்து 327 பேர் கன்னடம், மலையாளம், உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுது கிறார்கள்,” என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.


நிலைமை இப்படி இருக்க பாஜக போன்ற மக்கள்விரோத அரசியல் கட்சிகள் உருது முஸ்லிம்கள் மட்டும் தான் தமிழகத்தில் வேற்று மொழியில் கல்வி பயில்வது போன்ற தோற்றத்தினை உண்டாக்குகின்றனர்.தமிழகத்தில் பிற தாய்மொழி மக்கள் அவரவர் தாய்மொழியை கற்பது தவறல்ல. ஆனால் பிறர் தாய்மொழியை தமிழர்கள் மீது திணிப்பது தான் தவறு.


உதரணமாக அழிந்துபோன அன்னிய மொழியான சமஸ்கிருதத்தை தமிழர்களாகிய நம்மீது திணிக்க நினைக்கும் மோடி அரசின் அயோக்கியதனம் தான் தவறு.


இன்னும் சில கட்சிகள் பிற மொழியில் பெயர் வைத்தவர்களும், தமிழ் அல்லாத மொழியில் கல்வி கற்பவர்களும் தமிழர்களுக்கான உரிமை போராட்டத்தில் பங்குபெற கூடாது. அவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடாது என்றெல்லாம் தவறான கருத்துக்களை மக்கள் மனதில் பதிவுசெய்து வருகின்றனர்.


ஆனால் ஒரு போராட்டத்திற்கான அழைப்பு என்பது மொழியின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ, நாட்டின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ, நிறத்தின் அடிப்படையிலோ அமையும் என்றால் அது நிச்சயமாக இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் கொள்கை சார்ந்த வெறியாக மாறிவிடும்.


எனவே போராட்டத்திற்கான அழைப்பு என்பது நீதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும்.


நீதியை நிலைநாட்ட ஒன்று சேர வேண்டும் என்பது தான் அனைத்து மதங்களும் போதிக்கும் அடிப்படை தத்துவம்.


மிகப்பெரிய போராளியான சே. குவாரா அவர்களின் தத்துவமும் அது தான்

"அநீதியை கண்டு பொங்கி எழுந்தால் நீயும் என் தோழரே".


எனவே நாம் வாழும் இந்த உலகில் நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் மனிதம் என்ற அடிப்படையில் ஒன்றாக இணைந்து வாழ்வோம்.


நமக்கான உரிமை மறுக்கப்படும் போதும், அநீதிக்கு உள்ளாக்கப்படும் போதும், நம்மீது அடக்குமுறை திணிக்கப்படும் போதும் நீதியின் அடிப்படையில் ஒன்றிணைந்து போராடுவோம்.


தாய்மொழியை பேசுவோம்,

தாய்மொழியை நேசிப்போம்,

பிறர் மொழியை இகழாமல் நம் மொழியை புகழ்வோம்.


மனிதம் காக்க நீதியின் அடிப்படையில் ஒன்றிணைவோம் வாருங்கள்....

........ஷேக் பைசல்........

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sheik_Faisal&oldid=2200696" இலிருந்து மீள்விக்கப்பட்டது