உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:PavithraNandakumar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படைப்புலகில் உயரே சிறகசைத்து பறக்கும் சீர்மிகு இலக்கிய ஆளுமை திருமதி. பவித்ரா நந்தகுமார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர். வார்த்தைகளால் நம்மை வசமாக்கும் அவரது படைப்புகள் சிறுகதை, கட்டுரை, கவிதை, குறுநாவல் என விரிந்து கிடக்கிறது. வாசிப்பவரின் அகம் வெளிச்சமாக தன் சொற்களின் வழி சுடரேற்றுவது இவர்தம் சிறப்பு.  தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற திருமதி. பவித்ரா நந்தகுமாரின் கதைகளின் உயிர்ப்பு சுவாரஸ்யம் தருபவை. உணர்வுகளால் கட்டுண்ட வித்தியாசமான அனுபவத்தை இவருடைய கதைகள் தருகின்றன. தமிழ் கூறும் நல்லுலகில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவரும் இவர் தமிழகத்தின் நடுப்பக்கக் கட்டுரைகள் மூலம் பிரபலமானவர்.  இவரது சமூக அக்கறை கொண்ட நடுப்பக்கக் கட்டுரைகள் முழுவதும் நேர்மறை எண்ணங்களை வாசகர்களின் நெஞ்சங்களில் ஆழமாக விதைக்கிறது. காதலே, உறவுகள் அனைத்துக்குமான அன்பு பாலம் என்பதை பெண்ணின் மனஆழம் வழி அகழ்ந்து நளினமாக பல கவிதைகளும் புனைந்துள்ளார்.  புரியாத குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி அனைவரும் வாசித்தறியும் அருமையான நடையில் எழுதுவதோடு வாசகர்களுக்கு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருவதாகவும் திகழ்கிறது. முதுகலை தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்று ஆரணி அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார். 15 வருடங்களுக்கும் மேலாக இலக்கியப் பங்களிப்பை ஆற்றி வருகிறார்.  இவரது படைப்புகளை ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு மேற்கொண்டு அவ்வாய்வேட்டை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளனர். பல மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தெய்வத்திரு. ச.சாமிநாதன் – சீ. நிர்மலா தம்பதியருக்கு இரண்டாவது மகளாக 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி திருமதி பவித்ரா நந்தகுமார் வேலூரில் பிறந்தார். தொடக்கக்கல்வியை வேலூர் ஆக்ஸ்போர்டு நர்சரி பள்ளியிலும் 6 உதல் 12 ஆம் வகுப்பு வரை ஈ.வே.ரா. நாகம்மையார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியிலும் படித்தார். ஆங்கில இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் பெற்ற இவர் பின்னர் தமிழிலும் முதுநிலை பட்டத்தை பெற்றுள்ளார். தமிழில் முனைவர் பட்ட ஆய்வை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறார்.

முக்கிய நூல்கள்[தொகு]

• இதயத்தை தொடும் கதைகளை கொண்ட ‘பிடிக்குள் அடங்கா மௌனம்’ எனும் சிறுகதை தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்தது.

• காதலை அங்குலம் அங்குலமாக ரசித்து உயர்த்திப் பிடித்துள்ள நூல் ’தொலைந்து கொண்டே இருக்கிறேன்… உன்னுள்’ என்னும் கவிதை நூல். காதல் ரசம் சொட்டும் அத்தனை வரிகளையும் வாசிப்பவர் நிச்சயம் ரசித்து மகிழ்வர்.

• மனதை மயக்கும் காதல் கவிதைகள் கொண்ட மற்றொரு நூல் ‘மௌனமான விவாதங்கள்’. மணமக்களுக்கான திருமண பரிசாக கொடுக்க சிறந்தது.

• ‘வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது’ எனும் சிறுகதை தொகுப்பு வாசகர்களின் பரவலான வரவேற்பை பெற்றது.

• ‘வெற்றிடத்தின் நிர்வாணம்’ நூல் 80 களில் நாம் இழந்தவைகளின் தொகுப்பை பேசும் அற்புத படைப்பு.

• ‘கொஞ்சம் விவாதித்தும் கொஞ்சம் மௌனித்தும்’ நூலில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் மிக நேர்த்தியான வடிவம் கொண்டவை. ஆழமான சிந்தனைகளை கொண்ட கருத்துகள், கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு, சலசலப்பில்லாத தெளிந்த நீரோடை நடை, தரவுகளை ஒன்றோடொன்று இணைக்கும் அழகிய கோர்வை, படித்ததும் மனதில் ஏற்படும் நிறைவு என சிறப்புகள் பல.

கல்வித்துறை செயல்பாடுகள்[தொகு]

கல்வித்துறையிலும் ஆசிரியராக பங்களிப்பை அளித்திருக்கும் இவர் முத்திரை ஆசிரியராக எண்ணற்ற மாணவிகளின் இதயம் கவர்ந்தவர். 2017 – 2018 கல்வியாண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்ட குழுவின் அழைப்பின் பேரில் “படைப்பாற்றல் திறனை மாணவர்களிடம் வளர்ப்பது எப்படி?” எனும் பயிலரங்கில் கலந்து கொண்டு தன் கருத்துக்களை அங்கு பதிவு செய்து பாடத்திட்ட குழுவின் பாராட்டைப் பெற்றவர். கரோனா தொற்றை முன்னிட்டு 2020-2021 ஆம் கல்விஆண்டுக்கான பாடத்திட்ட குறைப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

1. சற்றே பெரிய தனிமை – சிறுகதைகள்

                           ஆரணி நந்தன் பதிப்பகம்
                           45/25, மண்டி வீதி, ஆரணி – 632 301
                           94430 06882

2. பிடிக்குள் அடங்கா மௌனம் – சிறுகதைகள்

                             பட்டாம்பூச்சி பதிப்பகம்
                             அய்யப்பா பிளாட்ஸ்
                             45/21, இருசப்பா தெரு,
                             விவேகானந்தர் இல்லம்
                             சென்னை – 600 005, 98410 03366

3. வெற்றிடத்தின் நிர்வாணம் - கவிதைகள்

                             பாவைமதி வெளியீடு
                             55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு,
                             தண்டையார்ப்பேட்டை, 
                             சென்னை – 81, 94441 74272

4. மாவளி - குறுங்கதைகள்

                             பாவைமதி வெளியீடு

5. வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது – சிறுகதைகள்

                             மணிமேகலை பிரசுரம்
                             7, தணிகாசலம் சாலை,தி. நகர்,
                             சென்னை – 600 017, (044-24342926)

6. கொஞ்சம் விவாதித்தும் கொஞ்சம் மௌனித்தும் – கட்டுரைகள்

                             எழிலினி பதிப்பகம்
                             15ஏ, முதல் மாடி,காசா மேஜர் சாலை
                             எழும்பூர், சென்னை – 600 008
                             044-2819 3206

7. தொலைந்து கொண்டே இருக்கிறேன்… உன்னுள் – காதல் கவிதைகள்

                                பாவைமதி வெளியீடு

8. மௌனமான விவாதங்கள் - கவிதைகள்

                                 எழிலினி பதிப்பகம்

9. தாழிட்ட கதவு - குறுநாவல்

                                 பாவைமதி வெளியீடு

பெற்ற விருதுகள்[தொகு]

• 2014 ஆம் ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் என அடையாளப்படுத்தி பொற்கிழி வழங்கி சிறப்பித்தார் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.

• 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூலாசிரியர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது

• 2015 கதைத் தமிழ் மாநாட்டில், கோவை தமிழ் ஐயா கல்விக்கழகம் இவருடைய சிறுகதைத் திறனை பாராட்டி ‘ராஜம்கிருஷ்ணன்’ விருதை வழங்கி கவுரவித்தனர். மேலும் அவ்வருடத்திலேயே விஐடி வேந்தர், கல்விக்கோ திரு. ஜி. விஸ்வநாதன் அவர்கள் தமிழர் உலகம் இதழ் சார்பில் ‘தமிழன்னை’ விருது வழங்கினார்.

• 2016 இல் சென்னை இலக்கியச்சோலை இதழ் ‘சிறுகதைச் சிற்பி’ விருது வழங்கி சிறப்பித்தது. மேலும் இவரது கவிதைக்காக “நங்கூரக் கவிஞர்” விருதும் அளிக்கப்பட்டது.

• 2017, மார்ச் மாதம் வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் ‘சிறுகதைத் தாரகை’ விருது இவரைத் தேடி வந்தது. அக்டோபரில் வேலூர் வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘வீரமாமுனிவர் விருது’ வழங்கி சிறப்பித்தது.

• 2018 ஆம் ஆண்டு மகளிர் தினத்தில் திருவண்ணாமலை எக்ஸ்னோரா அமைப்பால் “சிறந்த மகளிர்” விருது பெற்றார்.

• மேலும் இதே ஆண்டு ஜூவல் ஒன் நிறுவனத்தின் வேலூர் கிளை சார்பில் ‘BEST WOMAN AWARD’ இவருக்கு வழங்கப்பட்டது.

• 2019, பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவில் செயல்படும் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவரது ‘வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது’ என்னும் சிறுகதை நூலை பாராட்டி “THE ENLIGHTMENT AWARD” வழங்கி சிறப்பித்தது.

• 2019 செப்டம்பர் மாதத்தில் சிறந்த எழுத்தாளருக்கான அறிஞர் அண்ணா விருதை காஞ்சி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வழங்கினார்.

• 2020, மார்ச் மாதத்தில் திருச்சி இனிய நந்தவனம் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச மகளிர் விருது வழங்கப்பட்டது.

• 2021, மார்ச் மாதம் 7 ஆம் தேதி திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பாக திருப்பூர் சக்தி விருது வழங்கப்பட்டது.

• 2021, மார்ச் மாதம் 13 ஆம் தேதி சேலம் தமிழ்ச் சங்கம் ‘இலக்கியச் செம்மல்’ விருதை வழங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PavithraNandakumar&oldid=3173626" இலிருந்து மீள்விக்கப்பட்டது