உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Nannaadan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பஞ்சினால் ஒரு சொர்க்கம்[தொகு]

புலன்கள் ஐந்தும் புளாங்கிதம் அடையுதடி

புதியவளே உன்னை பார்க்கையிலே - நெஞ்சில்

பதியம் போட்டு காத்திருந்தேன் - உனைப்போல்

பாவை ஒருத்தியை பார்க்க வேண்டி;


ஓவியத்திலே உனைப்போல்

ஒருத்தியைப் பார்த்ததில்லை - என் இதயக்

காவியத்தில் நீதான் உச்சமடி;


அச்சில் வார்த்த அழகு சிலையே - உலக

அழகு பெண்களில் பத்தில் நீதான்

பத்தரை மாற்றுத் தங்க மடி;


தத்தி நடக்கும் தங்கத்தேரே

தரணியில் பூத்த அழகுப்பூவே

வானில் தோன்றும் வண்ணவில்லே - உன்

வளைக்கரம் பிடிக்க கொள்ள ஆசை;


வஞ்சி நீ ஒரு வாய்ப்பைக் கொடுத்தால் - என்

நெஞ்சில் ஒரு நீள் புனல் தோன்றும்

பஞ்சினால் ஒரு சொர்க்கம் அமைத்து

பதினாறு செல்வங்கள் பெற்று நாம் வாழலாம்

- - நன்னாடன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nannaadan&oldid=2627221" இலிருந்து மீள்விக்கப்பட்டது