உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Knrmv

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடசாலையின் வரலாறு

        1955 ஆம் ஆண்டு விவசாயக் குடியேற்றத் திட்டமாக உருவாக்கப்பட்ட இராமநாதபுரம் கிராமத்தில் 1956.05.02 ஆம் திகதி எமது பாடசாலை கிளி/ இராமநாதபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்ற பெயரோடு திரு.ளு.நமசிவாயம் அவர்களை அதிபராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு ஆண் ஆசிரியரும் இரு பெண் ஆசிரியர்களும் 90 மாணவர்களும் இருந்தனர.; தரம் 5 வரை வகுப்பக்கள் நடைபெற்றன. பாலர் பிரிவில் ஜஆண்டு1ஸ முதலாவது சேர்விலக்கத்தில் சேர்க்கப்பட்ட மாணவி செல்வி நடராசா ஆனந்தநாயகி என்பது அறியக் கிடக்கிறது. 1960ல் திரு.சங்கரபிள்ளை அதிபராக பொறுப்பேற்றார் . 1963ல் திரு கந்தையா அவர்கள் அதிபராக வந்தகாலத்தில் வகுப்புக்கள் தரம்8 வரை உயர்த்தப்பட்டது. (J.S.C என இது அழைக்கப்பட்டது) இக்காலத்தில் பெற்றோர்கள் தமது சொந்த ஊர்களில் கற்ற பிள்ளைகளைக் கொண்டுவந்து சேர்ததனர். இக்காலத்தில் ஏறத்தாழ 150 மாணவர்கள் இருந்தனர; 1964ல் திரு.பொன்னம்பலம் அவர்கள் அதிபராக வந்தகாலத்தில் முதன்முதலாக க.பொ.த.சா.த பரிட்சைக்கு ஜஅப்போதுளு.ளு.ஊஸ  விண்ணப்பித்துப் பரிட்சை எழுதிச் சித்தியும் அடைந்தனர.; யாஃவல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் அதிபராக இருந்த திருஆ.மகாதேவன் அவர்கள்1966ல் அதிபராக நியமிக்கப்பட்டார். அப்போது ஏறத்தாழ 300  மாணவர்கள் வரை கற்றனர். பாடசாலை மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு “கிளி/இராமநாதபுரம் வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை” என்ற பெயர் மாற்றப்பட்டு  “கிளி/ இராமநாதபுரம் மகாவித்தியாலயம் ” என்ற பெயரைப் பெற்றது. பாடசாலைக் கொடியின் நிறம் கரும்சிவப்பு  பாடசாலை சின்னம் கரும்சிவப்பு  நிறத்தைப் பின்புலமாக ஏர் நெற்கதிர் ஏடு கோபுரம் என்பவற்றை கொண்டதாகஅமைக்கப்பட்டது. மகுடவாக்கியம் ஏட்டிற்கும் ஏருக்கும் ஏற்றம் தருவோம் இக்காலத்தில் ஆசிரியராக இருந்த காலம் சென்ற திரு.பொ சுப்பிரமணியம் ஐயா அவர்களின் முயற்சியோடு மதிப்பிற்குரிய திரு.வீரமணிஐயா அவர்களால் இயற்றப்பட்ட பிலஹரி இராகம் ஆதிதாளத்தில் அமைந்த வளர்புகழ் ஓங்குகவே என்ற பாடசாலைக்கீதம் நடைமுறைக்கு வந்தது.1956ல் திரு.காரளபிள்ளை அவர்கள் அதிபராக வந்து; மாணவர்களின் கல்வி இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை அக்கறையோடும் ஆர்வத்தோடும் முன்னேடுத்துச் சென்றார். இவருக்கு பின்னர் திரு.தியாகராசா திரு. வி~;ணு திரு. மார்க்கண்டு திரு. சோமலிங்கம் திரு.கோபாலபிள்ளை போன்ற அதிபர்கள் கடமையாற்றினர். 1977ல்  nஐயராசா அதிபராக வந்த காலத்தி;லும்  மாணவர்களின் கல்வி ஒழுக்கம் விளையாட்டு ஆங்கிலகல்வி என்பவற்றால் முன்னேற்றம் காணப்பட்டது.

            1986ல் திரு.இராமநாதன் அதிபராக பொறுப்பேற்றார்  1993 இ1994 காலப்பகுதிகளில் இக்கிராமத்தை  சேர்ந்தவர்களான  திரு. தனிநாயகம்  திரு. ச. கிரு~ணமூர்த்;தி ஆகியோர் கிராமபற்றோடு பாடசாலையை நிர்வகித்தனர்  தொடர்ந்து யாழ்பாண இடப்பெயர்வால் இடம் பெயர்ந்த மக்கள் பாடசாலையில் தஞ்சமடைந்த காலப்பகுதியான 1995 ல் திரு.சிவசாமி 1996ல்  திருமதி. திருநாவுக்கரசு ஆகியோர் பாடசாலையை தக்க வைக்க வேண்டிய நிலையேற்பட்டது. 1997 லிருந்து 2007 வரை திரு வெ.க.இரத்தினகுமார் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதி பாடசாலை வரலாற்றில் ஒரு பொற்காலம் என எல்லோராலும் புகழப்படுகின்ற காலமாகும.;  இடையில் ஒரு வருட காலம் 2004 திரு.இராஜமகேந்திரன் அவர்கள் அதிபராக இருந்து பாடசாலையை நிர்வகித்தனர். 2007ல் தற்போதைய கல்விப்பணிப்பாளர் திரு.க. முருகவேல் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றார் இக்காலப்பகுதி மிகவும் வேதனை மிகுந்த காலமாக இருந்தது பிள்ளைகளையும் மாணவர்களையும் பிரிந்தும் இழந்தும் நடைபிணங்களாகத் தவித்தகாலம்  மாணவர்களோ ஆசிரியர்களோ கல்வியதிகாரிகளோ கல்வித்துறையில்  கவனம் செலுத்த முடியாத காலமாக இருந்தது இருந்தும் பாடசாலையை சோரவிடாத மிளிர வைக்கப்பட்டது. 2008ல் திரு.சி. முருகானந்தன் அவர்களிடம் வித்தியாலயம் ஒப்படைக்கப்பட்டது. இக்காலத்தில் கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்களால் பாடசாலை நிரம்பி வழிந்தது. தொடர் யுத்தத்தினால் முற்றாக இடம் பெயர்வு 2009.01.06 ல் இடம்பெயர்ந்து சென்று 2010.04.26 ல் மீள ஆரம்பிக்கப்பட்ட போது பாடசாலை சுடுகாடாகக் காட்சியளித்தது அதனை செப்பனிட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்து புத்துயிர் பெற செய்த பெருமை திரு.சி. முருகானந்தன் அவர்களையே சாரும்;. அதனைத் தொடர்ந்து 2015.07.02ம் திகதி தொடக்கம் திரு.சு.நடராசா அவர்களிடம் வித்தியாலயம் ஒப்படைக்கப்பட்டு இற்றைவரை பாடசாலை நிர்வகிக்கப்பட்டு கல்விச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது................

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Knrmv&oldid=3073825" இலிருந்து மீள்விக்கப்பட்டது