பயனர்:Johnkamal kanthan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைவருக்கும் வணக்கம்.. நான் ஒரு யூடியூப்பர். அது மட்டுமல்ல நிறைய புத்தகங்கள் படிப்பது எனக்கு பிடித்த ஒன்று. என்னுடைய யூடியூப் சேனல் பெயர் ஜேகே33 சேனல் ( JK33 Channel )என்பதாகும். நான் பிறந்தது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் தண்ணிலப்பாடி எனும் ஊர். என் தந்தை ஒரு ஆசிரியர் என்பதால் நிலையான ஒரு இடத்தில் இல்லை. ஆனால் எனக்கு விவரம் தெரிந்து வளர்ந்தது எல்லாம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி என்னும் ஊரில் தான். நான் மேல்நிலைப் பள்ளி முடித்த பிறகு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் படிப்பை சில காரணங்களால் தொடர் முடியவில்லை. பின்பு வேலைக்கு சென்னை போன்ற மாநிலங்களில் வேலை பார்த்தேன். ஆனாலும் அதிலும் என் கவனம் இல்லை. அடுத்ததாக மலேசியா நாட்டிற்கு வேலைக்குச் சென்றேன். அங்கு போய் ஏமாற்றம் தான் மிச்சம். சரியான சம்பளம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பின்பு ஒரு வழியாக ஊருக்கு வந்ததும்.. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது தான் யூடியூப் சேனல் பற்றி தெரிய வந்தது. இந்த நிலையில் எனக்கு திருமண வாழ்க்கையும் அரங்கேறியது. இப்போது இரண்டு மகன்கள் உள்ளனர். யூடியூப் சேனலில் பெரிய ஆளாக வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இந்த நிலையில் என் குடும்பத்தை பார்க்க பொருளாதார ரீதியாக என் தந்தையும் தாயும் தான் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். நானும் தற்போது தான் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்துள்ளேன். ஆனாலும் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இந்த நிலையைக்கு வந்துள்ளேன். இன்னும் கடுமையாக உழைத்து என் லட்சியத்தை அடைவேன் என்பதை இங்கு சொல்ல கடமை பட்டுள்ளேன். இது தான் தற்போதைய என்னுடைய வாழ்க்கை வரலாறு. My Youtube Channel

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Johnkamal_kanthan&oldid=3437411" இலிருந்து மீள்விக்கப்பட்டது