பயனர்:Iyarkaiyai Nesi Trust
இயற்கை நேசி பொதுநல அறக்கட்டளைஇயற்கை நேசி பொதுநல அறக்கட்டளை என்பது மனிதனின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருக்கும் முக்கிய பங்கு வகித்து வரும் வனப் பகுதிகளையும் வனப்பகுதிகளை சார்ந்த உயிரினங்களையும் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இலக்கு தொலைநோக்குப் பார்வை (Vision)
நாகரீக வளர்ச்சி என்ற போர்வையில் மறைமுகமாக அழிந்து வரும் வன பகுதியையும் அதனைச் சார்ந்த உயிர்களையும் மீட்டெடுப்பது பாதுகாத்து பராமரிப்பதும் ஆகும்.
செயல்பாடுகள் (Mission)
வனப்பகுதிகளை முழுவதும் பார்வையிட்டு, அவனைச் சார்ந்த தாவரயின, விலங்கின, ஊர்வன, பறவையின, உயிரினங்களை பட்டியலிட்டு அறிக்கையை பராமரித்தல்.
பட்டியலிட்ட உயிரினங்களை கண்காணித்தல் பராமரிப்பு குறித்த செயல்பாடுகளை திட்டமிடுதல் செயலாற்றுதல்.
கோடை காலங்களில் உயிரனங்களின் நிலையுணர்ந்து அதற்கேற்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர துணை நிற்றல்
மலைவாழ் மக்களின் வனப்பாதுகாப்பு உத்திகளைப் பயன்படுத்தி வனப்பகுதிகளை நிலை பெறச் செய்தல்.
வனப்பகுதி முதல் சமவெளி வரை இயற்கை வளங்களை இயற்கையாகவே நிலை பெறச் செய்தல்.
அழிந்து வரும் மறைந்து வரும் உயிரினங்களை கண்டறிந்து உருவாக்குதல், பராமரித்தல்.
வனப் பகுதியை சார்ந்த சிறந்த திட்டங்களை தீட்டி செயலாற்றுதல்.
வனப்பகுதியின் சுற்றுச்சூழலை பராமரித்தல், பாதுகாத்தல்.
செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்
இயற்கையை நேசி தன்னார்வக் குழு உருவாக்குதல் மற்றும் அக்குழு உறுப்பினர்களை கொண்டு அறக்கட்டளையின் இலக்கினை அடைய திட்டமிட்டு செயலாற்றுதல்.
வனப் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பராமரிப்பது தொடர்பான இணையவழி பதிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் வெளிப்படுத்துதல்.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்துதல்.
வன மாணவர்கள் இளைஞர்கள் நடுத்தர ஆண்கள் பெண்கள் முதியோர்கள் பாதுகாப்பு குறித்த சிறப்புப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துதல்.
வன நலன் திட்டம்
வனம் சார்ந்த உயிரினங்களைப் பட்டியலிட்டு அறிக்கை பராமரித்தல்.
பட்டியலிட்ட உயிரினங்களை கண்காணித்தல் பராமரிப்பு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துதல்.
பணத் சுற்றுச்சூழல் குறித்து தூய்மை திட்டங்கள் செயலாற்றுதல்.
சிறந்த வனப்பாதுகாப்பு காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துதல்.
வனப்பாதுகாப்பு காவலர்களுக்கு சிறப்பு கருத்தரங்குகள் திறன் வளர்ப்பு பயிற்சிகள் மனநிலை சார்ந்த பயிற்சிகள் தன்னிலை பாதுகாப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துதல்.