பயனர்:IYAPPATHASAN

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆகம விதி

ஆகம விதி பிரதிஷ்டா கும்பபூஜை

காலையில் யாகசாலையில் முதலாக சூரிய கும்ப பூஜை சோமகும்ப பூஜை செய்து யாகமண்டப பூஜைகளைத்

தொடங்க வேண்டும் மாலையில் சோமகும்ப பூஜை, சூரிய பூஜையை செய்து பிறகுயாக மண்டப

பூஜைகளைத் தொடங்கவேண்டும்!

குண்டலக்ஷணம்

ஒரு குண்டம் ஐந்து குண்டம் ஒன்பது குண்டம் ஆக மூன்று விதங்களாகும்!

ஆதி சைவர்

பஞ்சமுகங்களால் தீக்ஷிக்கப்பட்ட சிவபெருமானுடைய கௌசிகர் முனிவர் வம்சத்தில்

உதித்தவராயும்,வேதசிவாகமங்களை கற்றவராயும்,ஆடம்பரம் அசூயை-கர்வம் இல்லாதவர்களாவும் உள்ளவரே

பரார்த்த பூஜை செய்வதற்குஉரிய ஆதிசைவராவார்.உபவீதம்,ருத்ராக்ஷ்ம்,உஷ்ணீயம்,உத்திரீயம்,விபூதி முதலியன

சிவாச்சாரியாருக்கு பஞ்ச முத்திரைகளாகும்! தன்குடும்ப நலனுக்குச் செய்யப்படுவது ஆன்மார்ந்த பூஜையாகும் உலக

நலனுக்காகச்செய்யப்படுவது பரார்த்த பூஜையாகும்! பரார்த்த பூஜை செய்வதற்கு ஆதிசைவ சிவாச்சாரியாரும்

பட்டாச்சாரியாரும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

நவகுண்டங்கள்

யாகசாலையின் கிழக்கே சதுரச்ரகுண்டமும்,அக்னி திக்கில் யோனி குண்டமும், தெற்கில் அர்த்த சந்திர

குண்டமும்,நிருருதியில் திரிகோண குண்டமும்,மேற்கில் விருத்த குண்டமும்,வாயுத்திக்கில் அறுகோண

குண்டமும்,வடக்கில் பத்ம குண்டமும், ஈசானத்தில் எண்கோண குண்டமும்,ஈசானத்துக்கும் கிழக்குக்கும் மத்தியில்

பிரதான குண்டம், விருத்த குண்டமாகவும் அமைக்கவேண்டும்!!

ரக்ஷை

ரக்ஷை என்பது எல்லாதோஷத்தையும் போக்கி சிவஞானத்தைக்கொடுப்பது,

லோகத்திற்கு ஹிதத்தின் பொருட்டும்,க்ஷேம நலத்தின் பொருட்டும் எல்லா மங்கள காரியங்களிலும் ரக்ஷாபந்தனம்

செய்து கொள்ளவேண்டும்!

யாத்ராதானம்

யாகசாலையிலிருக்கிற கும்பம் மூலாலயத்திற்கு எழுந்தருளும் சமயம் எல்லா நலன்களையும் செய்யும்

பொருட்டும்,லக்னம் சுபபலனைத்தரும்

பொருட்டும்,யாத்ராதானம்,கிருஹப்ரீதி செய்து நவக்ரஹாதிகளைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்!

பிம்பரக்ஷாபந்தனம்

ரக்ஷாபந்தனத்தை யாகசாலையில் பூஜித்து ரக்ஷாசூத்திரங்களை கிரஹித்து

கொண்டு பிம்பங்களுக்கு சகல மேள வாத்தியத்துடன் கும்பாபிஷேகத்தின் பொருட்டு ரக்ஷாபந்தனம் செய்தல்

வேண்டும்,இதை திரிபக்ஷம்(45 நாட்கள்)

ஆன பிறகு விஸர்ஜனம் செய்துவிடவேண்டும்!!

பிரதிஷ்டை

புதிய கோயில்கட்டி கும்பாபிஷேகம் செய்வது அனாவர்த்தனம்!

ஜுர்ணேத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது ஆவர்த்தனம்!!

சுதைகளை சுத்தம் செய்து கும்பாபிஷேகம் செய்வது புனராவர்த்தனம்!!!

கோயிலைசுற்றி ஏதேனும் மரண முண்டானால் பிராயச்சித்தம் செய்து கும்பாபிஷேகம் செய்வது

அந்தரிதப்ரதிஷ்டையாகும்!!!! ஆகமபிரதிஷ்டைகள் நான்கு விதமாகும்

ஆசார்யதிக்கு

சதுரச்ரம்,யோனி,அர்த்தசந்திரன்,திரிகோணம்,விருத்தம் இந்தகுண்டங்களுக்கு ஆசாரியார்

வடக்குமுகமாகவும்,அறுகோணம், பத்மம்

எண்கோணம்,பிரதானமாகிய விருத்தகுண்டம் இவைகளுக்கு ஆசாரியார் கிழக்கு முகமாகவும் அமர்ந்து

பூஜை,ஹோமம்,பூர்ணாஹுதிகளைச் செய்யவேண்டும்!

ஷண்ணவதீ ஹோமம் காயத்திரி மந்திரம்

1, அரசன் சமித்து 2, ஆலன் சமித்து 3,அத்தி சமித்து 4, முருகன் சமித்து,

5, கருங்காலி சமித்து 6, சந்தன சமித்து 7, மாசமித்து 8, வன்னிசமித்து ,

9, வில்வசமித்து 10, மூங்கில் சமித்து 11, எருக்கன் சமித்து 12, பாலசமித்து

13, பாதிரிசமித்து 14, ஆஜ்யம் 15, அன்னம் 16, பால் 17,பன்னீர் 18, தேன் 19,தயிர் 20,பக்ஷ்யம் 21,அரிசி மாவு 22,ஸ்வர்ணம்

23, நெல் 24, மூங்கிலரசி

25, வெள்ளி 26,வெல்லம் 27,பச்சகற்பூரம் 28,மாம்பழம் 29, நெல்பொறி 30,சத்துமாவு 31,நாட்டுச்சக்கரை 32, ஜாதிபத்திரி 33,

விளாம்பழம் 34,வில்வப்பழம் 35,பலாப்பழம் 36,திராக்ஷை 37,அன்னாச்சிப்பழம் 38,மலைப்பழம் 39, பேரிச்சைபழம்

40,சக்கரவள்ளி கிழங்கு 41,கருணைக்கிழங்கு 42,தாமரைக்கிழங்கு 43,நீலோத்பல கிழங்கு 44,சிலந்திக்கொடி

45,நாயுருவி 46, தர்ப்பை 47,வலம்புரி,இடம்புரி 48,வால்மிளகு 49,மாசிக்காய் 50,வெள்ளெருக்கு 51, குங்கல்யம்

52,தசாங்கம்வ்53,கொப்பரை தேங்காய் 54,அவுல் 55,வெண்ணை 56, ஜாதிக்காய் 57,தேவதாரு 58, ரோஜாமொட்டு

59,ஏலக்காய் 60,களிப்பாக்கு 61,ஓமம்62,செண்பகமொட்டு 63,விளாமிச்சவேர் 64,கடுகு 65, கருங்காலி 66, கருங்காலி 67,

ஜடாமஞ்சரி 68,சுக்கு 69,நெல்லிவத்தல் 70,அகில் 71,குகில்

72,கிராம்பு 73,கேழ்வரகு 74, தாம்பூலம் 75,அதிமதுரம் 76,கரும்பு 77,வெண்கடுகு 78, கோரோஜனை 79,ஜாதிபத்திரி

80,குங்குமம் 81,கோதுமை

82,அரிசி 83,துவரை 84, பயறு 85,கடலை 86, மொச்சை87,எள்ளு 88,உளுந்து

89,கொள்ளு 90, இளநீர் 91,பக்ஷ்யம் 92,சக்கரை பொங்கல் 93,பாயசம் 94,சுண்டல் 95,வடை

நூதன விக்ரஹம்!

புதுச்சிலைகள் தயாராகி வந்ததும் நீர்த்தொட்டியில் வைக்கவேண்டும் பிறகு சுத்தம் செய்து,தான்யாதி வாசம் என்று

தான்யத்தில் வைக்க வேண்டும்,பிறகு தனாதிவாஸம் என்று பொற்காசுகளின் மீது வைக்க

வேண்டும்,நயனேன்மீலனம்,பிம்பசுத்தி,ஜலாதிவாசம் தான்யாதி வாஸம் போன்ற கிரியைகள் செய்து

யந்திரதகடுகள்,நவரெத்தின கற்களை வைத்து

அஷ்டபந்தனம்,ஸ்வர்ணபந்தனம் செய்ய வேண்டும் சிவாச்சாரியார், ஸ்தபதிகளை வைத்துக்கொண்டு செய்வது

நலமாகும்

ஷடுத்தாஸனம்

1) கூர்மாஸனம்,2)அனந்தாஸனம்,3) சிம்மாஸனம்,4)யோகாஸனம்,5)பத்மாஸனம்,6)விமலாஸனம்

சுவாமிவேதிகை

1,ஊர்வசீ-தர்ப்பணம் 2,மேனகா-பூர்ணகும்பம் 3,ரம்பா-விருஷபம் 4,திலோத்தமா-யுக்சாமரம் 5,உஷா-ஸ்ரீவத்ஸம்

6,சுந்தரீ-ஸ்வஸ்திகம் 7,காமுகீ-சங்கம் 8,காமவர்த்தனீ-தீபம் (விநாயகருக்கு-ரம்பா-மூஷிகம்)

(முருகனுக்கு-ரம்பா-மயூரம்)(சுவாமிக்கு-ரம்பா-விருஷபம்)(அம்பாளுக்கு-ரம்பா-சிம்ஹம்)

சுவாமி பஞ்சாஸன

1,விமலாஸனம் 2,பத்மாஸனம் 3,யோகாஸனம் 4,ஸிம்ஹாஸனம் 5,அனந்தாஸனம் கூர்மாஸனம்

ஸ்ருக்-ஸ்ருவம்

1,ஸ்ருக் 2,மயூரமுக ஸ்ருக் 3,வாஜிமுக ஸ்ருக் 4,யாளிமுக ஸ்ருக் 5,கோமுக ஸ்ருக் 6,மிருகமுக ஸ்ருக் 7,பத்மமுக

ஸ்ருக் 8,ஷட்கோண ஸ்ருக் 9,வஸோர்த்தாரை 10,ஸ்ருவம் அஷ்ட கஜ வேதிகை

1,குமுதன் 2,அஞ்சனன் 3, புஷ்பதந்தன் 4, வாமனன் 5,ஸுப்ரீதகன் 6, புண்டரீகாக்ஷன் 7,ஐராவதம் 8,ஸார்வபௌமன்

பஞ்சமம்

பஞ்சகவ்யம் : பால்,தயிர்,நெய்,கோமயம்,கோசலம்

பஞ்சகிருத்யம் :சிருஷ்டி,திதி,ஸம்ஹாரம்,திரோபாவம்,அனுக்ரஹம்

பஞ்சத்ரு :கற்பகம்,சந்தானம்,அரிச்சந்தம்,மந்தாரம்,பாரிஜாதம்

பஞ்ச கருவிகள் : தோற்கருவி,துளைக்கருவி,நரம்புககருவி,கஞ்சக்கருவி மிடற்றுக்கருவி

பஞ்சமுகங்கள் : ஈசானம்,தத்புருஷம்,அகோரம்,வாமதேவம்,ஸத்யோஜாதம்

பஞ்சாங்கம் :திதி,வாரம்,நக்ஷத்திரம்,யோகம்,கரணம்

பஞ்சசுத்தி : பூதசுத்தி,மந்திரசுத்தி,லிங்கசுத்தி,திரவிசுத்தி,ஆன்மசுத்தி

நந்தியின் பெருமை

கிழக்கு நோக்கிய நந்தி தலங்கள் --திருவைகாவூர்-திருவல்லம்

கொம்பு ஒடிந்த நந்திக்கு தலம் --திருவெண்பாக்கம்

திருமணம் நந்திக்கு நடந்த இடம் --திருமழபாடி

நந்நி விலகி இருக்கும் தலங்கள் -- பட்டீஸ்வரம்,திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி விசேஷார்க்யம்

விசேஷார்க்யம்,நிரோதார்க்யம்,பரான்முகார்க்கயம் மூன்று என வகைப்படும் இவைகளை சிரஸில் ஸமர்ப்பிக்க

வேண்டும்

"ஆப; க்ஷீர குசாக்ராணி தண்டுலா; ஷுமநாஸ் திலா;

அர்க்யோ அஷ்டாங்கதிப்ரோக்த;யவை;ஸித்தார்த்தகைஸ்ஸஹ"

ஜலத்தில்பால்,தர்பைநுனி,அக்ஷதை,புஷ்பம்,எள்ளு,யவை(நெல்)வெண்கடுகு

இவைகளைச் சேர்த்து அதில் ஆஸனமூர்த்திமூலம் வித்யாதேஹமந்த்ரம்,

ஈசானாதிப்ரம்மமந்த்ரங்கள்,நேத்ரமந்த்ரம்,அங்கமந்த்ரங்களாலும் மறுபடி மூலமந்த்ரத்தினால் ரக்ஷையையும்

கவசமந்த்ரத்தால் அவகுண்டனத்தை செய்து மூலமந்திரத்தின் கடைசியில் வௌஷட் என்று சொல்லி தேனு

முத்திரையை ஸம்ர்ப்பிக்க வேண்டும்,இவ்வாறு செய்யப்பட்ட அபிஷேகம், ஆவாஹனம்,

அர்க்கியத்தை,ஜபஸமர்ப்பணம்,முதலான காலங்களில் உபயோகிக்க வேண்டும் நிரோதார்க்யம்

ஸ்வாமி பூஜை செய்யப்படுகின்ற பிம்பங்களில் பூஜை முடியும் வரை நீங்கள் பிரஸன்னமாக இருக்க வேண்டும்

என்று பிரார்த்தித்தது இந்த அர்க்யத்தைக் கொடுக்க வேண்டும் பாத்யம்

இதுபாதங்களிலேசேர்ப்பது,இதில் விளாமிச்சைவேர்,குங்குமப்பூ,வெண்கடுகு,

சந்தனம்,அருகு சேர்த்து பூஜித்து அங்கமந்திரத்தினால் ஜபிக்கவேண்டும்

ஆசமனீயம்

இது முகத்தில் கொடுப்பது,ஜலத்தில் விளாமிச்சைவேர், ஜாதிக்காய்,கிராம்பு சிற்றேலம் பச்சைகற்பூரம்,

இவைகளைச் சேர்த்து பூஜித்து ப்ரம்மமந்த்ரம் ஜபிக்கவும் ஸமான்யார்க்கயம்

அர்க்ய பாத்திரத்தில் சுத்தஜலத்தை நிரப்பி அதில் அக்ஷதை,சந்தனம்,யவை, புஷ்பம்,தர்பைநுணி,அருகு முதலிய

திரவ்யங்களை சேர்த்து பரணவ மந்திரத்தை (7)தடவை ஜபித்து அஸ்த்ரமந்திரத்தினால் ப்ரோக்ஷணம் செய்வதாகும்

பராங்முகார்யம்

பூஜையின் முடிவில் இதுவரை பூஜிக்கப்பட்ட ஸ்வாமியை யதாஸ்தானம் செய்யும் போது கொடுக்க வேண்டிய

அர்க்யம்! கும்பபூஜை

காலையில் யாகசாலையில் முதலில் சூரியகும்ப பூஜை,சோமகும்பபூஜை செய்து பிறகு யாகமண்டப பூஜைகளைத்

தொடங்க வேண்டும்! மாலையில்

முதலில் சோமகும்ப பூஜை, சூரிய பூஜையை செய்து பிறகு யாக மண்டப பூஜைகளைத் தொடங்க வேண்டும்,

யாகசாலை

ஆலயத்தின்கிழக்கு,வடக்கு,ஈசானம் அகிய திக்குகளில் போடுவது உத்தமம், மேற்கு திக்கில்

மத்யமம்,அக்னி,நைருதி,வாயு ஆகிய திக்குகளில் போடுவது அதமம்,தெற்கு திக்கில் எக்காலத்திலும் போடக்கூடாது!

மண்டலாபிஷேகம்

நாற்பத்தெட்டு நாள்-1,மண்டலம் செய்வது உத்தமம்,24,நாள் அரை மண்டல

செய்து மத்திமம்,12,நாள் கால் மண்டலம் செய்து அதமம்,மண்டலாபிஷேக

பூர்த்தியில் நித்யாக்னியைப் பிரதிஷ்டித்தல வேண்டும்,உத்ஸவம் செய்யக்கூடாது மண்டலாபிஷேகமத்தியில்

மண்டலாபிஷேகம் பூர்த்திசெய்த பின்னரே உத்ஸவங்களை நடத்துதல் வேண்டும்!

ஆசார்ய திக்கு

சதுஸ்ரம்,யோனி,அர்த்தசந்திரன்,திரிகோணம்,விருத்தம்,இந்த குண்டங்களுக்

ஆசார்யர் வடக்குமுகமாகவும்,அறுகோணம், பத்மம்,எண்கோணம், விருத்தகுண்டம்,பிரதானமாகிய

ஆகியவைகளுக்கு ஆசாரியர் கிழக்கு முகமாகவும் அமர்ந்து ஹோமம்,பூர்ணாஹுதிகளைச் செய்ய வேண்டும்!

பஞ்சகிருத்யம்

1,ஸ்ருஷ்டி-ஆக்கம் 2,ஸ்திதி-காத்தல்,3,ஸம்ஹாரம்-அழித்தல், 4,திருரோபாவம்-மறைத்தல்,5,அனுக்ரஹம்-அருளள்

இவ்வைந்தும் பஞ்சகிருத்தியம் எனப்படும்! பவிதரம்

"பவித்ரம் பாப நாசஞ்ச <பவித்ரம் புண்ய வர்த்தனம்!

பவித்ரம் பாபங்களைப் போக்கி புண்ணியங்களை அளிக்க வல்லது பவித்ரமில்லாமல் எந்தக் காரியமும்

செய்யக்கூடாது

கோமுகம்

ஆவுடையாரின் மேற்பாகத்தில் வெளியே நீண்டு இருக்கும்,இது சிவசக்தி

உயிர்களுக்குச் செய்யும் தண்ணளியைக் குளிக்கின்றது,இதனாலேயே ஆலய வழிபாடு செய்யும் அடியார்கள்

கோமுகி வழியாகப்பாயும் அபிஷேக

தீர்த்தங்களை இறைவனது திருவருள் சுரப்பதாக மதித்துக்கையாள் ஏந்தித் தலையில் தெளித்துச் சிவனருள்

பெற்றதாக மகிழ்கிறார்கள்!

கோபுரம்

கோபுரம் ஸ்தூலலிங்கத்தை உணர்த்துகின்றது ஆலயங்கள் ஒர் யோகியின்

சரீரத்தின்கண் அமைந்துள்ள தத்துவங்களையும் அவனது இதயத்தில் இறைவன் விளங்கும் தன்மையையும்

கோயில்கள் நன்றாகக் காட்டுகின்றன,ஆகவே,சரியை,கிரியை,ஞானம் உடையவர்வளை யோகிகளாக்க ஆலயங்கள்

பயன்படுகின்றன எனலாம்,கோபுரதரிசனம் கடவுளது பாத தரிசனம் ஆகும்,இதனைப் பிரம்மரந்திரமத்

யகபாலத்வாரம்

என்று யோகிகள் கூறுகின்றனர்! கொடிமரம்

கொடி மரம் யோகியானவன் பிராணவாயுவை நடுநாடியாகிய சுழுமுனையி

அசைவற்று நிறுத்திக் கொண்டு தியானிக்கிற மனம் முதலிய கரணங்கள் யாவும் நின்று பிரபஞ்சமே தோன்றாது

சிவ தரிசனம் உண்டாகும் என்னும்

உண்மையை அறிவிக்கின்றது! பிரகாரம்

கோயிலினுள்ளிருக்கும் ஐந்து பிரகாரங்கள் அன்னமயம்,பிராணமயம், மனேமயம், விஞ்ஞானமயம்,அனந்தமயம்

என்னும் ஐந்துவித கோசங்களையும் குறிக்கின்றன, மூன்று பிரகாரங்கள் ஐந்து கோசங்களினாலான ஸ்தூல சூட்சம

காரணம் என்னும் மூவகைச் சரீரங்களை விளக்குகின்றன,வழிபடுபோர் மூன்றுமுறை,ஐந்துமுறை பிரகாரங்களைச்

சுற்றவேண்டும் என்பது பஞ்ச கோசங்களையும் மூவகைச்

சரீரங்களையும் கடந்து இறைவன் விளங்குகின்றான் என்பதை நினைப்பதற்காகும்! கர்ப்பக்கிரகம்

கர்ப்பக்கிரகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடமாகும் இதற்கு மூலஸ்தானம் என்றும் பெயர்

உண்டு,இதன் உண்மை எல்லா உலகங்களையும் படைத்தற்குக் காரணமான மூலப் பிரகிருதியின் இடம்

என்பதாம்,கடவுள் உலகைப் படைக்க நினைத்த காலத்து அவரது அருட்சக்தியை மாயையிடத்தே அதிஷ்டிக்கச்

செய்கிறார் என்பது கருத்து

அரூபியாகிய கடவுள் ரூபியாகிறார்! மண்டபங்கள்

அர்த்தமண்டபம், மகா மண்டபம்,ஸ்நபன மண்டபம்,அலங்கார மண்டபம் சபா மண்டபம்,என்னும் மண்டபங்கள் ஐந்து

வகை,இவை ஒவ்வொன்றும்

நிவிருத்தி,பிரதிஷ்டை,வித்தியை,சாந்தி,சாந்தியா தீதம் என்னும் கலைகளை

உணர்த்துகின்றன! தீர்த்தோத்ஸவம்

தீர்த்தோத்ஸவத்திற்கு நக்ஷத்திரம்பரதானம்,ஆனதினால் நக்ஷத்திரத்தைச் சேர்த்து 10,தினங்களுக்கு முன்பு

துவஜாரோஹணம் செய்து, தீர்த்தோத் ஸவத்தோடு உத்ஸவத்தை பூர்த்தி செய்யவேண்டும்!

உத்ஸவ தரிசன பலன்

1-வது நாள்;எல்லா உயிர்களுக்கும் ஊழ்வினைகளைப் போக்கி,கொடுத்து பேரின்பத்தைக் தூல தேகத்தை

நீக்கிக்கொள்ளும் பயனை விளைவிப்பதாகும்,

2-வது நாள் ;தூலம்,சூக்குமம் என்னும் இருவகைப் பயன்களையும் பயனை

நீக்கிக்கொள்ளும் குறிப்பதாகும்!

3-வது நாள் ; மூவினையும்,முப்புத்தியும்,முக்குணமும்,மும்மலமும், முற்குற்றமும்,முற்பிறப்பும்,முப்பற்றும்

ஆகியவைகளை நீக்குதற்பொருட்டாகும்!

4-வது நாள் ;நாற்கரணம்,நால்வகைத்தோற்றம் என்பவைகளை நீக்குதற்பொருட்டாகும்!

5-வது நாள் ;ஐம்புலன்களின் வழியே செல்லும் பஞ்சப் பொறிகளும்,பஞ்ச அவத்தைகளும்,பஞ்சமலங்களையும்

நீக்குதற்பொருட்டாகும்!

6-வது நாள் ;காமமாதிஆறும்,கலையாதிஆறும்,பதமுத்திஆறும்,வினைக் குணம் ஆறும் ஒழித்தற்பொருட்டாகும்!

7-வது நாள் ;ஏழுவகைப்பிறப்புகள்,எழுகலையாதிகள்,ஏழுமாயாமல குணங்கள் இவைகளைத்தவிர்த்தற்

பொருட்டாகும்!

8-வது நாள் ;தன் வயத்தினால் கடவுட் குணங்கள் எட்டினையும், விளக்குதற்பொருட்டாகும்!

9-வது நாள் ;சகளம்,நிஷ்களம்,சகல நிஷ்களம் என்னும் வடிவம் மூன்றும், ஸ்ருஷ்டி,திதி,ஸங்காரம் முதலிய

முத்தொழில்களும்,தன்மை முதலிய மூன்றிடத்து இருத்தலுமாகிய ஒன்றும் இல்லை என்பதைக் குறிப்பதாகும்!

10-வது நாள் ;சிவானந்தப் பேரின்பமாகிய தீர்த்தப்பெருவிழா கடலில் ஆன்மாவைத்திளைக்க வைப்பதாகும்!

ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி பரிஹார ஹோமத்தில் வைக்கப்படும் கலச பூஜா விதானங்கள்

பிரதான வேதிகையில்

ஸ்ரீ அமிருத மிருத்யுஞ்சயமூர்த்தி ---குடம்-------(1)

ஸ்ரீ பாலாம்பிகை அம்பாள் --- " -------(1)

ஆக 2

கிழக்கே மார்க்கண்டேயருக்கு ---கலசம்------(1)

தெற்கே பிர்மாவுக்கு --- " ------(1)

மேற்கே விஷ்ணுக்கு --- " ------(1)

வடக்கே ருத்ரனுக்கு --- " ------(1)

கிழக்கே திக்கில் இந்திரனுக்கு ---" ------(1)

அக்னி திக்கில் அக்னிக்கு --- " -------(1)

தக்ஷிண திக்கில் யமனுக்கு --- " -------(1)

நைருதி திக்கில் நிருருதிக்கு --- " -------(1)

மேற்கு திக்கில் வருணனுக்கு --- " -------(1)

வாயுதிக்கில் வாயுவுக்கு --- " -------(1)

வடக்கு திக்கில் குபேரனுக்கு --- " -------(1)

ஈசான திக்கில் ஈசானனுக்கு --- " -------(1)

இந்திரனுக்கு தெற்கில் அஸ்வத்தமான்-- " --------(1)

அக்னிக்கு மேற்கில் பலி --- " --------(1)

யமனுக்கு மேற்கில் வியாஸர் -- " ---------(1)

நைருதிக்கு வடக்கில் ஹனுமான் -- " ---------(1)

வருணனுக்கு வடக்கில் விபிஷணன் -- " ---------(1)

வாயுவுக்கு கிழக்கில் கிருபர் -- " --------(1)

குபேரனுக்கு கிழக்கில் பரசுராமர் -- " --------(1)

ஈசானனுக்கு தெற்கில் ஆயுர்தேவதை - " --------(1)

பரிவார வேதிகைகள் ஆக (20)

கிழக்கு திக் வேதிகையில்

குல தேவதா,இஷ்ட தேவதா --" --------(1)

கலசம்1க்கு12வருடம் வீதம் --- " ----------------(5)

60 வருடத்திற்கு கலசங்கள் ஆக (6)

அக்னி திக் வேதிகையில்

அயனம்2-க்கு கலசம் --------(1)

ருதுக்கள்6-க்கு " -------(1)

மாதங்கள்12-க்கு " -------(1)

பக்ஷங்கள்2-க்கு " -------(1)

ராசிகள் 12-க்கு " -------(1)

ஆக(5)

தக்ஷிண திக் வேதிகையில் திதிகள் 15-க்கு கலசம்

-------(1)

வாரங்காள் 7-க்கு " -------(1)

நக்ஷத்திரங்கள் 27-க்கு " -------(1)

யோகங்கள் 27-க்கு " --------(1)

கரணங்கள் 27-க்கு " --------(1)

ஆக(5)

நைருதி திக் வேதிகையில்

கணபதிக்கு கலசம் --------(1)

துர்க்கைக்கு " --------(1)

வாஸ்து புருஷனுக்கு " --------(1)

அபயங்கரனுக்கு " --------(1)

க்ஷேத்ரபாலலருக்கு " --------(1)

ஆக(5)

வருண திக் வேதிகையில்

காவேரிக்கு கலசம் --------(1)

துங்கபத்திரைக்கு " --------(1)

கிருஷ்ணவேணிக்கு " --------(1)

கௌதமிக்கு " ---------(1)

பாகீரதிக்கு " ---------(1)

ஆக(5)

வாயு திக் வேதிகையில்

ஆன்மார்த்த மூர்த்திக்கு கலசம் --------(1)

ஈசான மூர்த்திக்கு " --------(1)

தத்புஷ மூர்த்திக்கு " --------(1)

அகோர மூர்த்திக்கு " --------(1)

வாமதேவ மூர்த்திக்கு " -------(1)

ஸத்யோஜாத மூர்த்திக்கு " --------(1)

ஆக(6)

உத்திர திக் வேதிகையில்

சூரியனுக்கு கலசம்--------(1)

சந்திரனுக்கு " --------(1)

அங்காரகனுக்கு " --------(1)

புதனுக்கு " --------(1)

குருவுக்கு " --------(1)

சுக்கிரனுக்கு " -------(1)

சனிக்கு " -------(1)

ராகுவுக்கு " -------(1)

கேதுவுக்கு " --------(1)

ஆக(9)

ஈசான திக் வேதிகையில்

சப்தரிஷிகளுக்கு கலசம் --------(1)

ஆஷ்டவசுக்களுக்கு " ---------(1)

12-ஆதித்யர்களுக்கு " ---------(1)

சப்த சிரஞ்சீவிகளுக்கு " ---------(1)

ஏகாதசருத்ரர்களுக்கு " ----------(1)

ஆக(5)

ஏகாதச ருத்திரத்திற்கு

மத்தியில் குடம் --------(1)

ருத்ரர்கள் கலசம் ---------(11)

ஆக(12)

ஆக குடங்கள் 3-கலசங்கள் 77-கலச திரவியங்கள்,வாஸனாதிரவியங்கள்,

ஹோம திரவியங்கள் சீந்திக் கொடி,சரு,ஆஜ்யம்,அன்னம்,திலம்,நவதான்ய

பழவகைகள்,மதுஸிக்ததூர்வா,பிரஷதாஜ்யம்,வன்னி,அரசு ஹோம முதலிய

சாமான்களாகும், எஜமான தம்பதிகள் ஸ்னான காலத்தில் தரிசிக்க வேண்டியவைகள்; 1,கோரோஜனை 2,கிருதம்

3,தயிர் 4,அருகு 5,பால்6,பழம்

7,புஷ்பம்,8,கண்ணாடி,9,தீபம்,10,மிருத்திகை,11,சுவர்ணம், இவைகளாகும்

கலசாபிஷேகத்திற்கு முன்னதாக கொடுக்க வேண்டிய தானங்கள்

1,எண்ணைச் சட்டி,2,பஞ்சபாத்திரம்,3,செப்புக்கிண்ணதில் எள்ளு,4,கம்பளி,

5,பூஷனிக்காய் முதலியன;

கலசாபிஷேகத்திற்குப் பிறகு கொடுக்கவேண்டிய தானங்கள்;

வெங்கலக் கிண்ணத்தில் நெய்,வஸ்திரம்,நவக்ரஹதானம்,தசதானம், கோதானம், ஷோடசதானம்,

பஞ்சதானம்,முதலியன,

முதள்நாள்காலை மஹன்யாச ஏகாதச ருத்ரஜபம்,பூஜை,ஹோமம், அபிஷேகம்,ஆசீர்வாதம்,மறுநாள் எஜமான

தம்பதிகளுக்கு கலச அபிஷேகத்திற்குப்பிறகு தசதானம்,பஞ்சதானம்,ஸ்வர்ண மாங்கல்யதாரண

தம்பதி பூஜை,ஆசீர்வாதம்,செய்யப்படுவதாகும் பாராயணங்கள்;ருக்வேதம், யஜுர்வேதம்,ஸாம

வேதம்,அதர்வணவேதம்,அஸ்திரமந்திரம், தேவி மஹாத்மியம், தேவி ப்ரபந்தங்கள் முதலியன்,

ஷஷ்டியப்த பூர்த்தியில் ஷோடச (16) கலச விதானங்கள்;

கணபதிக்கு கலசம்----(1)

பிரும்மாவுக்கு " -------(1)

விஷ்ணுவுக்கு " ----(1)

மார்க்கண்டேயருக்கு " ----(1)

ருத்ரனுக்கு " ----(1)

ஆயுர்தேவதைக்கு " -----(1)

திக்பாலகருக்கு " ---------(1)

சப்தசிரஞ்சீவிக்கு " ----------(1)

வருஷங்கள் 60-க்கு " -----------(1)

அயனங்கள் 2-க்கு " -----------(1)

ருதுக்கள் 6-க்கு " ------------(1)

மாதங்கள் 12-க்கு "--------------(1)

பக்ஷங்கள் 2-க்கு " ------------(1)

திதிகள் 15-க்கு "------------(1)

வாரங்கள் 7-க்கு "------------(1)

நக்ஷத்திரங்கள் 27-க்கு " ------------(1)

ஆக கலசங்கள் _____-(16)

சுபம் சுபம் சுபம் சுபம் சுபம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:IYAPPATHASAN&oldid=2406660" இலிருந்து மீள்விக்கப்பட்டது