உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ganagaraj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளியஞ்சோலை வரலாறு.திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சப்பெருமாள் பட்டி கிராமத்தில் உள்ளது. கொல்லி மலையின் கிழக்கு முகத்தில் அமைந்து உள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு கணக்கிலடங்கா புளிய மரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆடிப் பெருக்கு விழாவின் போது மக்கள் இங்கு அதிகம் கூடுவர். அந்த நாளின் போது இங்கு வாழ்ந்த முனிவர்களின் நினைவாக குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வத்தை வணங்குகிறார்கள். ஆடிப் பெருக்கு விழாவின் போது எண்ணற்ற புதுமணத் தம்பதிகள் இங்கு வருகை புரிந்து நீராடி, பெரியசாமி தெய்வத்தையும் குருவாயி அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர். அருகில் உள்ள ஊர்களில் குடமுழுக்கு எனில் இங்கிருந்து புனித நீர் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ganagaraj&oldid=2259090" இலிருந்து மீள்விக்கப்பட்டது