பயனர்:வைகை சாய்தாசன்
வையப்பமலை எ வைகைப்பொன்மலை நாமக்கல் மாவட்டத்திலுள்ள சிறப்பான ஒரு முருகன் திருத்தலமாகும்.சிறுபழநி,இரண்டாம் பழநி எனப்படும் இத்திருத்தலம் அனுமனும் முருகப்பெருமானும் சந்தித்த பெருமையுடையது ஆகும்.ஆட்டுக்கடாவை அடக்கிய லீலையும்,கொங்கண சித்தர் வாழ்ந்த பெருமையும் உடைய திருத்தலமாகும்.பழநி முருகன் உலைவாய்கிரி எனப்படும் அலைவாய்மலையில் சித்தர்கள் ரசவாதத்தின் மூலம் செய்து வைத்த பொன்மலையை சிறுபாலகனாக வந்துகைப்பட தூக்கி சென்றான்.சித்தர்கள் வைப்பொன்னை...வைப்பொன்னை...என்றபடியே துரத்தி வந்தனர்.தற்போது இவ்விடத்தில் தவம் செய்த ஔவைப்பாட்டி முருகனை கண்டு வைகப்பொன்மலையை என வேண்ட இம்மலையை இங்கே வைத்து விட்டு சித்தர்களுக்கும் ஔவைக்கும் மலைமீது தரிசனம் தந்தான் என்பது தனிச்சிறப்பாகும்.இத்தலத்தை ராமச்சந்திர கவிராயர்.கவிஞர் வைத்தியலிங்கம்.மறறும் பெயர் அறியா கவிஞர்களும்.வாரியார் சுவாமிகளும் பாடியுள்ளனர்.முருகொளி.வைகைப்பொன்மலை மகத்துவ பாசுரம். வைகைப்பொன்மலை குமாரர் மீது தாய் மகள் ஏசல்.ஆகிய நூல்கள் எழுந்துள்ளன. கொங்கண சித்தர் குகையும் தென் குகையும் பத்தர் மண்டபமும் காணவேண்டிய ஒன்றாகும்.பிரம்ம தீர்த்தம் சரவண தீர்த்தம் வள்ளி சுனை ஆகியவை உண்டு.