உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:வில்வம் யோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ வில்வம் யோகா


"சிவன்" இருக்கிறார் என்று எத்தனைமுறை நாத்திகன் காதில் ஒதினாலும் "செவுடன் காதில் சங்கு ஊதுவது" போன்று ஆகிவிடுகிறது. வள்ளுவன் சொல்வதையாவது நம்புவார்கள் என்று நினைக்கிறேன்.


பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் (சிவன்) காண்பது அறிவு.

மற்றொரு குறள்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.


இதில் இருந்து கடவுள் இருக்கிறார் என்று புலப்படுகிறது. சரி வேறு என்ன ஆதாரம்? வேறு யார்? நாம் தான் (மனிதன், மிருகம், மரம், பூ, பஞ்ச பூதங்கள், ஏழு இசை, அண்ட சராசரம் மற்றும் நீங்கள் பார்ப்பது, படிப்பது, கேட்பது, தொடுவது, உணர்வது, அகிய அத்தனையும் அவன் தான்).


நமக்கே அறிவு என்று ஒன்று இருக்கும் போது. அவன் நம்மை எல்லாம் படைத்து, காத்து, அழித்து, அருள் புரிந்து, மறைத்து விளையடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. "அவனே அவன் பிறப்பை அறியாதவன்" என்று தேவாரத்தில் குறிப்பிடுகிறார்கள். அதற்கு பிறப்பு இறப்பு இல்லாதவன் என்று அர்த்தம் (IMORTALITY AND SELF-SUSTAINING ENERGY). அவனுக்கு உணர்வு இருக்கிறது, எப்படி? நமக்கு இருப்பது போல, அவனுக்கு உணர்வு இல்லை, எப்படி? உணர்வு இல்லாத பொருள்கள் போல. இப்படி உலகில் எல்லாவற்றுக்கும் அவன் தான், எல்லாவற்றிற்க்கும் எதிரான நிலையும் அவன் தான் (He is Everything and opposite of Everything).

தானே தன்னை பார்த்திராதவன் எப்படி? திருமாலும் (The Protector) , நான்முகனும் (The Creator) அந்த பரமாத்மாவின் ஒரு பாகம். ஆனால் அந்த இரு பாகங்களாலும் தன்னைத்தானே (திருமால் பன்றீயாய், நான்முகன் அன்னப்பறவையாய்) சிவனை அளக்க முடியவில்லை.

இந்த உலகம், ஒரு சீவன்(Soul) ஒரு நிலையில் இருந்து உண்மை நிலையை கற்று அறிவதற்கான ஒரு இடம்.

அதை திருவள்ளுவர்

கற்றீண்டு மெய்ப்பொருள் (சிவன்) கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.

என்று குறிப்பிடுகிறார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வில்வம்_யோகா&oldid=625347" இலிருந்து மீள்விக்கப்பட்டது