பயனர்:முத்துகுமார்ஈ
முத்துகுமாரின் சுய சரிதை
நான் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவன்
எனது அப்பா அம்மாவிற்கு நான் முதல் குழந்தை நான் ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் பிறந்தேன் அவர்கள் நான் பிறப்பதற்காக எல்லா கோவில்களுக்கும் சென்று வந்தார்கள். இந்த சமுதாயம் என் அம்மாவை பார்த்து திட்டி தீர்த்தது உனக்கு குழந்தை பெற வலி இல்லை நீ எதற்க்காக உயிருடன் இருக்கிறாய் என்று கூட சொல்லிருக்கிறார்கள்
அதன் பின்பு தான் பிறந்தேன் நான் பிறந்தற்கு கோவிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது என்னை அதிகமாக அன்பு வைத்து வளர்த்தார்கள்.
எனது பள்ளி வாழ்க்கைதான் மிகவும் பிடித்த வாழ்கை நான் பள்ளியில் படிக்கும் பொது நண்பர்கள் அனைவரும் நன்றாக பழகுவார்கள் அந்த நாட்களை மறக்க முடியாது.
பள்ளி முடித்த பிறகு தொழிற்கல்வி பயில நான் என் கிராமத்தை விட்டு வந்தேன் அப்போது எனக்கு புது அனுபவம் கிடைத்தது, அங்கு பயிலும் மாணவர்கள் எல்லாம் நல்ல பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அவர்களிடம் பழகுவதற்கு சற்று தயக்கமாக இருக்கும் இருந்தாலும் அவர்களாகவே வந்து என்னிடம் பேசுவார்கள் அவர்களை என்னால் மறக்கவே முடியாது அவர்கள் போன்று நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள் எனது படிப்பை முடித்ததும் என் குடும்பத்தை நடத்த நேரம் வந்தது அனால் குடும்பத்தை பார்க்கும் அளவுக்கு எனது வருமானம் இல்லை
இருந்தாலும் வரும் வருமானத்தை வைத்து பணம் அனிப்பி வைத்தேன்,
எனது வாழ்கையில் ஒரு பெண் வந்தால் அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் என் குடும்பத்தினரிடம் தெரிவித்தேன் அவர்கள் நிலை அப்போதுதான் புரிந்தது நான் திருமணம் பண்ணி கொண்டாள் எனது விட்டில் ஒரு மூலையில் தான் இருக்க வேண்டும் எனக்கு என்று ஒரு தனி அரை கிடையாது அதனால் எனது காதலை விட்டுவிட வேண்டும் என்ற கட்டாயம் வந்தது அவளிடம் நான் தெரிவித்தேன் உன்னை திருமணம் செய்ய இயலாது என்று அனால் அவளால் அதை ஏற்றுகொள்ள முடிய வில்லை அதன் பின்பு அவளிடம் நடந்ததை எடுத்து கூறினேன் அவள் எனக்காக காது கொண்டிருப்பாள் . எனக்கு தங்கை இருப்பதை யோசிக்காமல் திருமனம என்ற தப்பான முடிவை எடுத்தேன் ,
எனக்குள் ஒரு லட்சியம் எனது குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். என் தங்கையை படிக்க வைக்க வேண்டும். தங்கைக்கு திருமணம் பண்ண வேண்டும், என் அப்பா அம்மா அவர்களை பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தேன், இப்போது ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்
போதிய வருமானம் இல்ல என்றாலும் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம்
எனக்காக காத்து கொண்டிருக்கும் எனது காதலியை திருமணம் செய்ய இன்னும் எவ்ளோ நாள் ஆகும் என்று தெரியவில்லை,
அனால் என் குடும்பத்தை நல்ல முன்னேற்றத்துக்கு கொண்டு சென்று தான் எனது வாழ்க்கை ஆரம்பம் ஆகும்