பயனர்:ப்ரேவ் சாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                           மொழிபெயர்ப்பில் உண்டாகும் சிக்கல்கள்
                                                        பா.இரேவதி
                                           முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழிற்புலம்
                                               மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
                                                         மதுரை-21.
    'மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை' மிகக் கடினமான கலையும் கூட! சிற்பம், சித்திரம் போன்றது. பழகப்பழக மெருகு ஏற்படக் கூடியது. ஒரு மொழியிலுள்ள இலக்கியத்தை வேறு மொழியில் எழுதுவதற்கு 'மொழிபெயர்ப்பு' என்று பெயர். இந்தக் கடினமான கலைக்கு இரு மொழியிலிலும் சாதாரனமான புரிதல் தன்மை மட்டும் இருந்தால் போதாது. இரு மொழிகளிலும் ஒரளவேனும் புலமை தேவை. அது இன்றியமையாத தேவையும் கூட.
    மொழிபெயர்ப்பிற்கென்று தனிமொழிநடை கிடையாது. மூலப்படைப்புக்ககளில் கையாளப்படும் தெளிந்த மற்றும் ஆற்றெழுக்கான மொழிமரபு பிறழாத நடையே மொழிபெயர்ப்பாகும் உயரியநடையும் ஆகும். இன்று தமிழில் வெளிவரும் பல்வேறான மொழிபெயர்ப்பக்கள் பல இயல்பான தமிழ்நடையில் அமையாமல் மூலமொழிநடையின் தாக்கத்தை கொண்டிருப்பதால் படிப்பதற்கு  ஏற்றவாறு அமைவதில்லை என்பது நடைமுறை உண்மையாக உள்ளன.
    மூலமொழியில் உள்ள கருத்தக்களையும் உணர்வுகளையும் மொழிபெயர்பாளன் நன்கு உள்வாங்கிக் கொளுதல் வேண்டும்.  அவ்வாறு அவன் உள்ளத்துக்குள் புரிந்து கொள்ளுதல் என்னும் வேதியல் மாற்றம் பெற்ற பின்புதான் மொழிபெயர்பாளன் மொழிபெயர்ப்பினைச் செய்ய வேண்டும்.
    மொழிபெயர்பாளருக்கென்று தனியான வெளிப்பாடு ஒன்றும் கிடையாது. மொழிபெயர்பாளன் ஒரு மொழியில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பதற்கு முன் அம்மொழியினுடைய தன்மையினை முதலில் உள்வாங்கிக் கொண்ட பின்புதான் மொழிபெயர்க்கவேண்டும். அம்மொழிபெயர்பானது வாசகர்கள் புரியும் வண்ணம் அமைய வேண்டும்.

மொழிபெயர்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள் மூன்று,

மூல மொழியல் தெளிந்த அறிவு பெயர்ப்பு மொழியை நன்கு கையாளும் ஆற்றல் பெயர்க்கப்படும் பொருள் அறிவு இம்மூன்றும் சேர்ந்தே நல்ல மொழிபெயர்பாளனை உருவாக்குகின்றன எனலாம்.

    மொழிபெயர்ப்பு என்பது இரு திசைகளிலும் நடைபெறக்கூடிய ஒன்றாகும். மூலமொழியாகக் கொண்ட ஒருவர் தாய் மொழியியலிருந்து தாம் அறிந்த வேறு மொழிக்கும் மொழிபெயர்ப்புச் செய்யலாம் அல்லது அறிந்தவேறு மொழியியனைத் தாய்மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்யலாம். வேறு மொழியியலுள்ள இலக்கியத்தினைத் தாய்மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்வது என்பது சிறிதளவேனும் இயற்கையாக அமைந்தது போன்று இருக்கும் எனலாம். ஒரு மொழியினைக் தாய் மொழியாகக் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளன் தனன்னுடைய இலக்கியத்தினைப் பிறமொழி அறிவாளனுக்குத் தெரிவிக்க எண்ணினால் தாமே மொழிபெயர்ப்புச் செய்வது மட்டுமல்லாமல் இவை இரண்டாம் நிலையானதே ஆகும்.
    எப்படியாயினும் சரி, மொழிபெயர்பாளன் இரண்டு மொழிகளிலும் வழுவில்லாத புலம் உடையவனாக இருத்தல் வேண்டும்.
    ஒவ்வொரு மொழியியலும் பொருள் உணர்த்தும் முறை, மரபு வழக்குத் தொடர்புகள், பண்பாட்டுப் பின்புலம், ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளிடையே இவற்றில் ஒற்றுமை மிகுதியாக இருக்கும். அப்பொழுது மொழிபெயர்ப்பது எளிதாகும். வேறுவேறு குடும்பங்களைச் சொந்த மொழிகளிடையே வேற்றுமை மிகுதியாக இருக்கும். மொழிபெயர்பாளன் இவ்வேற்றுமைகளை நன்கு உணர்த்துவனாக இருத்தல் வெண்டும்.
    சான்றாக.... ஆங்கிலமும் தமிழும் வெறு மொழிக் குடும்பங்களைச் சேர்த்தவை. மரபுகள் வழுக்காறுகள் தொடர் அமைப்புகள் மிக மிக வேறுபட்டிருக்கும் ஆங்கிலத்தில் உள்ள சொல்லை அதன் வழக்கு, பொருள் உணர்ந்து தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றாலும் கூட சிலவேலைகளில் 'வேறுவழியில்லாத பொழுது' ஆங்கிலச் சொல்லின் நேர்பெயராகக் கூட அது அமையலாம்.
    ' Reader ' என்ற சொல்லை இப்பொழுது தமிழ் 'இணைப்பேராசிரியர்' என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆதில் பிழையில்லை. பயன்பாட்டைப் பொறுத்தல் சொல்லை அமைந்துள்ளனர். ஆனால் Reader என்பதால் 'படிக்குநர்' என்று மொழிபெயர்ப்பதாக வைத்து கொண்டால் பலர் இது சரியாகப் பொருள் உணர்த்தவில்லையே என்பர். ஆயினும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வழக்கு வலிமையால் சொல் புதுப்பொருள் பெற்று நிற்பது உறுதி.
    மேலும் 'அவர் மேடையில் பேசினாh'; என்பது சாதாரனமாகப் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சொற்றொடர். இதையுமே எழுத்து வடிவில் பார்க்கும்போது 'அவர் மேடையில் உரையாற்றினார்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவது இயல்பு. இரண்டு சொற்றொடர்களும் பொருள் ஒன்றுதான் எனினும், பிந்தைய சொற்றொடர் சற்று தரத்தில் உயர்த்தவதாக தோன்றுகின்றது. மொழபெயர்ப்பில் இந்த இலக்கணம் மிக அடிப்படையானது.
    மொழிபெயர்புக்கென்று இன்று வரை இலக்கண வரையறை எதுவும் ஏற்படுத்தவில்லை இலக்கியம் உருவான பின்னரே இலக்கணம் உருவாகும் என்பது மொழியியல் வல்லுநர்களின் கருத்து. மொழிபெயர்ப்பு இலக்கியங்களே கூட துளிர்விட்டு கொண்டிருக்கின்றனவே தவிர வளர்ந்து விட்டன என்று சொல்வதற்கு இல்லை. எனவே, இத்தருணத்தில் முறையான இலக்கணம் இல்லாமல் இருப்பதில் வியப்பே இல்லை. எனினும், இருவேறு முறைகள் ஒன்றுக்கென்று மிகவும் மாறுபட்ட முறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தத் துறையைப் பொறுத்தவரை ஒன்று, மூலத்திலுள்ள கருத்துக்களுக்கு  முக்கியத்துவம் தராமல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பது (Literary Translation) கூறுவர். இந்த முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளியது போலத் தோன்றும் எனினும் நடைமுறைக்கு அவ்வளவு எளிதானதல்ல. மூலமொழி, மொழிபெயர்க்கப்படும் மொழி இரண்டிலும் ஆழமான புலமை தேவைப்படும் மொழிபெயர்ப்பில் சொற்கள் சொற்றொடர்கள் எந்தளவிற்கு முக்கியமானவையே அந்தளவிற்கு முக்கியமானவையே அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகளும் உட்பொருள்களும். இந்த அடிப்படையில் சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பதைவிட பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர்களின் உட்கருத்தை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்ற வகையில் மொழிபெயர்ப்பது சாலச் சிறந்தது என்று வாதிடுவோர் பற்பலர் உண்டு. இந்த முறையை ஆற்றல் மிக்க மொழிபெயர்ப்பு (Dynamic Translation) என்று அழைப்பா.; இந்த இரண்டு முறையில் எது உயர்ந்தது என்று அறுதியிட்டுக் கூற இயலாது ஒவ்வொரு முறையிலும் ஒரு சில சாதகங்கள் உண்டு, ஒரு சில பாதகங்களும் உண்டு.
    இன்றைய மொழி பெயர்ப்பில் ஏற்படும் பிழைகளுக்கான காரணம் மூலமொழியைப்பற்றியும் இரண்டாம் மொழியயைப் பற்றிய சரியான புரிதல் தன்மையில்லாததனால் ஏற்படும் விளைவு என்றுக் கூறலாம்.
    மேலும் மொழிபெயர்ப்பில் உள்ள மற்றொரு குறை மொழிபெயர்ப்பவர்கட்கும் பெயர்க்கப்படும் பொருளில் போதிய அறிவில்லாமல் இருப்பதேயாகும். இரு மொழியிலும் புலமை உடைளவராக இருந்தாலும் அறிவியல் தெரியாதவர்களால் அறிவியல் செய்திகளை எப்படி மொழிபெயர்ப்புச் செய்யமுடியும் என்ற ஒரு கேள்வியும் எழும். அந்தந்த அறிவுத்துறையில் பயிற்சி உடையவர்களே அதனைச் செய்தல் வேண்டும் ஆனால் அதே பொழுது இரு மொழியிலும் வல்லுவராக இருத்தல் வேண்டும்.
    மொழிபெயர்ப்பாற்றல் என்பது வாசகர்களுக்கே மொழிபெயர்க்கப்பட்டதே தெரியாத வண்ணம் அமைந்திருக்க வேண்டும் அவ்வாறு அமைந்திருத்தால்தான் அது ஒரு சிறந்த மொழிபெயர்ப்பிற்கு அடையாளமாகத் திகழும் எனலாம்.
    அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள புதிய கருத்து வளர்ச்சியையும் தமிழுக்கு இதுவரை பழக்கமில்லாத எண்ணங்களையும் தமிழில் கொணரும்பொழுது உணர்த்துவதற்குத் போதிய தமிழ்ச் சொற்கள், கலைச்சொற்கள், தொடர் மொழிக்கு ஒரு வகையான செயற்கைத் தன்மையை உண்டாக்கிவிடுகின்றன என்பது உண்மையே. அறிவியல் செய்திகளை மட்டுமல்லாமல் பொதுவாகவே சிக்கல் வாய்ந்த எண்ணங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்க்கு ஏற்பமடும் பெரியதொரு சிக்கல் ஆங்கிலத்தில் உணர்த்துவது போல் தமிழில் நுட்பமாக உணர்த்தப்பட முடியவில்லை அல்லது உணர்த்துவதற்கான ஏற்றச் சொற்கள் கிடைக்கவில்லை எனலாம். மொழிபெயர்ப்பவர்கள் போதியளவு பொறுமையையும் உழைப்பையும் அம்முயற்சியில் செலுத்துவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும். அப்படிச் செலுத்துபவர்களுக்குக் கூட ஓரளவு இடர்பாடு ஏற்படுவதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.
    மொழிபெயர்ப்பிலும் அறிவியல் கலைச்சொற்களிலும் பல இடர்பாடுகள் நேர்கின்றன. அதற்குக் காரணம் விடுதலை அடைந்த புதிய பாதையில் நடக்க வேண்டிய இன்றைய நிலையிலும் கூட நாம் உண்மை மலர்ச்சியை நோக்கி நடவாமல் இரவல் அறிவையே தேடிப்போய்க் கொண்டிருக்கிறோம் என்பது தான். ஆறிவியல் துறை மொழிபெயர்ப்பு என்பது இன்றைய மேலை நாட்டிடமிருந்து இரவல் அறிவை நாடுவதாகவே இருக்கின்றது. விடுதலையான இயல்பானவளர்ச்சி மலர்ச்சி ஒரு நாட்டில் இருக்குமானால் முதல்நூல்கள் தாமாகவே தோன்றிச் செழிக்கும் மொழிபெயர்பானது இரண்டாம் மொழிபொப்புக்கு உரியதாக இருக்கும்.
    ஒரு மொழியில் செழுமையான கலை, அறிவியல் நூல்கள் சொந்தமாக எழுதப்படும் பொழுதுதான் உயர்த்துடிப்பான கலைச்சொற்கள் முயற்ச்சியின்றி வரும். ஆவை வளர்ச்சியின் இயல்பானக் கூறாக இருக்கும். இப்பொழுது செய்வதுபோல் கலைச்சொற்கள் செயற்கையாக உருவாக்க வேண்டியிருக்காது. அந்நிலையில் பெரும்பாலும் அறிவியற் செய்திகளை மொழிபெயர்க்க வேண்டியிராது. ஏற்கனவே எழுதப்பட்டுள்ள முதல் நூல்களில் பயன்பட்டுள்ள கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பாளரால் எடுத்தாளப்படும். மொழிபெயர்பாளனே புதிதாக ஒரு கலைச்சொற்களை உருவாக்கத் தேவையில்லை. இப்பொழுது கூட பழைய கலைச்சொற்கள் கைகொடுப்பதைக் காணலாம்.
    கலைகள் வளர வளரத்தான் கலைச் சொற்கள் வளரும். ஏற்றக் கலையை வளர்த்துக் கொள்ளாமல் இரவல் பெறுவதற்குக் கலைச்சொற்களைச் செயற்கையாக உண்டாக்கி கொண்டிருப்பது அறியாமையே. அறிவியல் வளர்ச்சியைப் பொருத்தவரையில் மொழிபெயர்ப்பு தொடக்காலத்திற்கு உரியதுதான் என்று கூறலாம் ஏனென்றால், இன்று பல்வேறான மொழிபெயர்ப்புகளில் மூலமொழிச் சொல்லைப் பயன்படுதாமல் மொழிபெயர்க்ககூடிய மொழியினுடைய சொற்களையே பயன்படுத்துகின்றனர் எனலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ப்ரேவ்_சாரதி&oldid=1911612" இலிருந்து மீள்விக்கப்பட்டது